பெயர் - இந்தியன் பிரிமியர் லியெஜ் (IPL)
நிஜ பெயர் - இந்தியன் பெட்டிங் லியெஜ்(IBL)
தொழில் - சூதாட்டக் கம்பெனி
உபதொழில் - கிரிக்கெட் போட்டி நடத்துவது
தலைவர்
துணை தலைவர் - ஸ்பான்சர்ஸ்
பொழுதுபோக்கு - அதை நடிகைகள் பார்த்துக்கொள்வார்கள்
துணை பொழுதுபோக்கு - அதை சியர் கேர்ள்ஸ் பார்த்துக்கொள்வார்கள்
வயது
பலம் - பார்க்கும் ஏமாளிகள்
பலவீனம் - கொண்டையை மறைக்க தெரியாதது
சமீபத்திய சாதனை - பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்தது
நீண்ட கால சாதனை - பூசணித் தோட்டத்தையே சோற்றுக்குள் மறைத்து வைத்திருப்பது
சமீபத்திய எரிச்சல் - சில பூசணிக்காய்கள் வெளியில் வந்தது
நீண்ட கால எரிச்சல் - சில நாணயமான வீரர்கள்
நண்பர்கள் - பெட்டிங் கட்டுபவர்கள்
எதிரிகள் - அதைக் காட்டிக்கொடுப்பவர்கள்
ஆசை - எல்லோரையும் விலைக்கு வாங்க
நிராசை - அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு
நம்பிக்கை - கிரிக்கெட் வாழ்வுதனை சூது கவ்வும்
பயம் - கிரிக்கெட் மறுபடி வெல்லும்
லட்சியம் - கிரிக்கெட்டை அழிப்பது
இதுவரை மறந்தது - ஏமாளி ரசிகனை
இனி மறக்க வேண்டியது - புக்கிகளின் போன் நம்பரை
மறக்க முடியாதது - சில நடிகைகளின் போன் நம்பரை
விரும்புவது
விரும்பாதது
Ha Ha ha.... :-)
ReplyDeleteசியர்கேர்ள்ஸ் படம் போடாம ஒரு ஐபிஎல் பதிவா? வெளங்கிரும்டா.........
ReplyDelete/////எதிரிகள் - அதைக் காட்டிக்கொடுப்பவர்கள்
ReplyDelete////
பாஸ் பாஸ்..... நாம அப்போ காட்டியும் கொடுக்கிறோம்... கூ..... கொடுக்கிறோமா.....?
///தலைவர் - அதிக பணம் கட்டுபவன் ////
ReplyDeleteநாட்டுல இவனுங்க தொல்ல தாங்க முடிலடா..... பணத்த வெச்சிக்கிட்டு என்ன செய்யறதுன்னே தெரியாம சலம்பிக்கிட்டு இருக்கானுங்க.......!
/////பொழுதுபோக்கு - அதை நடிகைகள் பார்த்துக்கொள்வார்கள் ///
ReplyDeleteஅப்போ நாம நடிகைய பார்க்கிறோமா?
/////பலவீனம் - கொண்டையை மறைக்க தெரியாதது ////
ReplyDeleteங்ணா.... ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்ட மாதிரியே இருக்குங்ணா........
/////சமீபத்திய எரிச்சல் - சில பூசணிக்காய்கள் வெளியில் வந்தது ////
ReplyDeleteயோவ் ஏன்யா ஆபாசமா எழுதுறே?
/////நீண்ட கால எரிச்சல் - சில நாணயமான வீரர்கள் ////
ReplyDeleteஇன்னும் இருக்கானுங்களா....?
/////மறக்க முடியாதது - சில நடிகைகளின் போன் நம்பரை ////
ReplyDeleteமறந்தா தொழில் பண்ண முடியுங்களா...? பெட்டிங் பிசினச சொன்னேன்......!