Thursday, 14 February 2013

பீர் குடிச்சா தப்பா? ஐயா சொல்லுங்க...அம்மா சொல்லுங்க!



வாழ்க்கையில் சில தருணங்கள் அனைவருக்கும் பொதுவானதா இல்லை நமக்கு மட்டும் இப்படியா என்று சில தருணங்கள் யோசிக்க வைக்கும்! அப்படிப்பட்ட சில தங்க தருணங்களை(Golden Moments) சிலவற்றை இங்கு சொல்லியிருக்கிறேன்! கண்டிப்பாக இதுபோல உங்களுக்கும் ஏதாவது தருணத்தில் ஏற்பட்டிருக்கும்! அப்படி இல்லையென்றால் பிரச்சனை இல்லை! முதலில் முழுதாக படியுங்கள் கடைசியில்    விளக்கம் தருகிறேன்!




  • ரெம்ப நேரமா ஒரு பொண்ணு உங்களையே பாத்துக்கிட்டு இருக்கும்...சரிடான்னு நம்பி பக்கத்துல போனா..அந்த பொண்ணு கேக்கும் "அண்ணே...நீங்க கீதாவோட(தங்கையோட தோழியாம்) அண்ணன்தானே?!!!!" (யார்ரா இந்த அண்ணன கண்டுபிடிச்சது?!!)

  • பஸ்சுல  ஒரு அழகான பொண்ண பாத்துட்டு பேசலாம்னு பக்கத்துல போனா...அந்த பொண்ணு அடுத்த ஸ்டாப்ல இறங்கிரும்!!(இந்த டிரைவர் இப்ப மட்டும்  கரெக்டா நிப்பாட்டுவாறு!!)

  • நீங்க காலேஜுக்கு லீவு போடற அன்னிக்கு மொக்க போடற ப்ரபசர் கரக்டா லீவு போடுவாரு! நீங்க காலேஜு போற அன்னிக்கு கரெக்டா அவரும் வந்துருவாரு!!         ( இவரு வர்ற பஸ்சு ஆக்சிடென்ட் ஆகாதா?)

  • வீட்டுல இருந்து பத்து கிலோமீட்டர் பயணம் பண்ணி திருட்டு தம் அடிப்பிங்க! அங்கயும் கரெக்டா வந்து வத்திப்பெட்டி கேப்பான் பக்கத்து வீட்டுக்காரன்!( ஓசி தம்ம கொடுத்து சரி பண்ணனும்!)

  • பத்து ஊரு பயணம் பண்ணி ஒரு மினி பீர் அடிப்பிங்க! டாஸ்மாக்ல பாத்துட்டு ஒருத்தன் கேப்பான்" தம்பி நீ ராமசாமி மகன்தானே" (எங்கே இருந்துடா வருவீங்க?)

  • படிச்சது மட்டுமே வரணும்னு வேண்டிகிட்டு பரீட்சை எழுத போவீங்க! ஆனா அங்க நீங்க படிக்காதது மட்டுமே வந்திருக்கும்! (நான் என்னென்ன படிக்கலைன்னு உங்களுக்கு எப்படிடா தெரியும்?!!)

  • பிகருகிட்ட பந்தா காமிக்க புது டிரஸ் போட்டுக்கிட்டு பந்தாவா பஸ்ல போவிங்க! அன்னிக்கின்னு பாத்து ஓட்ட பஸ்ஸோட கிரீஸ் புல்லா ஒடம்பு பூரா ஒட்டிக்கும்!!(போக்குவரத்து அமைச்சர் மேல கேஸ் போடணும்!)

  • மழை பெய்யும்  போது பிகரு நனஞ்சிகிட்டு வந்தா, ஒரே குடைல போறதுக்கு ஐடியா பண்ணி வேகமா குடை கொண்டு போவிங்க! ஆனா அந்த பொண்ணு குடைய வாங்கிகிட்டு "ரெம்ப நன்றி அண்ணா! குடைய தம்பிகிட்ட கொடுதுவிட்றேன்" அப்பிடின்னு சொல்லும்!( இப்ப நீங்கதான் நனைவீங்க!!)

  • அண்ணனுக்கு கல்யாணம் ஆனா அண்ணிக்கு தங்கச்சி இருக்கணும்னு வேண்டிக்கிவிங்க! ஆனா விதி அண்ணிக்கு ஒங்கள விட நல்லா படிச்ச ஒரு தம்பி மட்டும் இருப்பான்!! (இந்த அண்ணன வெட்டுனா என்ன?!!)

  • மனைவிய விட்டு வெளிநாடு வந்தா இஸ்டம்போல இருக்கலாம்னு நினைப்பிங்க! சனிக்கிழமை ஹாயா பீரு விடும் போது கரெக்டா வீடியோ சாட்டில் வரச்சொல்லும் மனைவி உங்களுக்கும் உண்டா?!!(எவன்டா இந்த வீடியோ சாட்ட கண்டுபிடிச்சது?)


என்ன மக்கா இதுல எந்த அனுபவமும் உங்களுக்கு இல்லையா?!! கண்டிப்பா நீங்க போயி ஒரு மனநல மருத்துவர பாருங்க...அட உங்க நல்லதுக்குதாங்க.....சொன்னா கேளுங்க....அப்பறம் உங்க இஸ்டம்!

No comments:

Post a Comment