Thursday, 14 February 2013

ஊத்திக்கொடுக்கும் அரசாங்கம்! சீரழியும் இளைஞர்கள்!"குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு" இது நம்ம நாட்ல உள்ள பழமொழி! இத ஏன் இப்ப சொல்றேன்னு பாக்கிறீங்களா? இப்பவெல்லாம் நம்ம நாட்ல  விடிஞ்சா எந்திரிச்சா குடிய பத்திதாங்க பேச்சு!......அது யாருங்க...? இந்தா வந்துட்டாரு உத்தம சீலன்னு கேக்குறது?! ஐயா நான் இப்ப சொல்லப்போறது..... யாருமே குடிக்காதிங்க.....குடிக்கிரவங்கெல்லாம் ரெம்ப கெட்டவங்க இப்பிடி எதுவும் சொல்லப்போறதில்லை! அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமென்று எனக்கும் தெரியும்! இப்பொழுது உள்ள வியாபார உலகத்தில் அதை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில பொழுதுகளில் தவிர்க்க முடியாததாகிர்றது! எப்பொழுது அது இல்லாமல் இயங்கமுடியவில்லையோ, எப்பொழுது குடிகாரனை நம்பியே ஒரு அரசாங்கம் நடக்கிறதோ, நீங்கள் நல்லவராகவே இருங்கள்....ஆனால் அதன் தாக்கத்தை ஏதாவது ஒரு வகையில் உங்களால் உணர முடிகிறதோ, கண்டிப்பாக நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுதான்!


நான் ஸ்டெடியா இருக்கேன்....வீடு வந்தா மட்டும் சொல்லுங்க.....

என்னடா இவன் போன பதிவுல பீரு குடிச்சா தப்பான்னு கேட்டுட்டு, இப்ப குடிக்கிறவன குறை சொல்றேன்னு பாக்குறீங்களா? நகைச்சுவைக்காக இட்டு கட்டி எழுதுவதற்கும், விழிப்புணர்வுக்காக உண்மையை எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்! நான் இத்தனை முறை இந்தியா சென்று வந்ததற்கும் இப்பொழுது வந்த போதும் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன்! இன்றைய  பெரும்பாலான நமது இளைஞர்களுக்கு இது ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது! இது ஒரு Fashion என்பதையும் கடந்து இது அவர்களுக்கு Passion ஆகி விட்டதே எனது வருத்தம்!


நமக்கு மொதலாலியா இந்த குடிகார நாயிதான் வாய்க்கனுமா?

நான் சென்றிருக்கும் பொழுது இரண்டு குழுச்சண்டைகள் வந்தன...இரண்ட்டுக்குமே முதன்மையான காரணம் அனைவருமே முழுப்போதை! யார் சொந்தம் யார் நண்பர்கள் என்று பார்த்துக்கொள்ள அவர்களுக்கு நிதானமில்லை! காலையில் அவர்கள் ஒவ்வொருவரும் மூஞ்சிகளில் முழித்துக்கொள்ளவே வெட்க்கப்பட்டனர்! இது தேவையா? அனைவருமே படித்துவிட்டு அரசாங்க வேலைக்கோ...அல்லது ஏதோ ஒரு வேலைக்கோ காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள்! ஏதாவது அசம்பாவிதம் நடந்து போலிஸ் கேஸ் ஆகிவிட்டால்...அவர்களுடைய வாழ்க்கை என்னாவது?  அவர்களையே நம்பியிருக்கும் குடும்பம் என்னாவது? இதையெல்லாம் சிந்திக்கவில்லையா இல்லை சிந்திக்கும் திறன் மலுங்கடிக்கப்பட்டதா தெரியவில்லை! அவர்களுக்கே வெளிச்சம்!


சாவிய எங்கேடா போட்டிக? சாவடிக்கிறாங்களே என்னைய....

நம்முடைய அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் இதுபோன்ற இளைஞர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும் விதமாகத்தான் நடந்துகொள்கின்டறன! ஏதாவது அரசியல் கூட்டமா? கூப்பிடு இளைஞர்களை...அவர்களின் ஒரு நாள் செலவு அந்த கட்சியுடையது! இதுபோன்ற கூட்டங்களுக்கு செல்லும்பொழுது குடித்துவிட்டு அவர்கள் செய்யும் அலப்பறை...ஐயோ சாமி தாங்க முடியாது! வழிநெடுக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகத்தான் செல்கிறார்கள்! காவல் துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கும்! அவர்களை சொல்லி குற்றமில்லை கைகள் கட்டப்பட்டிருக்கும்பொழுது அவர்கள் என்ன செய்வார்கள்?கால மட்டும் கழட்டி வச்சிட்டு எங்க போனான்? 

நான் இப்பொழுது சென்றிருக்கும்பொழுது டாஸ்மாக்கிற்கு இரண்டுநாள் விடுமுறை வந்தது! ஆனால் எங்கள் சுற்றுவட்டார குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை! வழக்கம்போல் காலை எட்டு மணியிலிருந்து வியாபாரம் களைகட்டியது! எல்லாம் சட்ட விரோதமாகத்தான்! ஆனால் சட்டத்தை காப்பவர்களுக்கு விரோதமில்லாமல்! எப்பிடியா?.....எங்கள் ஏரியா போலிஸ் ஸ்டேசன் கண்ட்ரோலில் ஐந்து டாஸ்மாக் கடைகள் உள்ளன! ஒரு கடைக்கு பத்தாயிரம் போலிசுக்கு மாமூல் சரியாக சென்றுவிடும்! அதுபோக எதுவும் பிரச்சனை வராமல் இருக்க இரண்டு மப்டி போலிஸ் ரவுண்ட்சில் இருப்பார்கள்! அவர்களுடைய ஒருநாள் செலவை இந்த கடைக்காரர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்! ஆனால் அவர்கள் இருவரும் கடைக்கு ஒருநாள் வீதம் ஐந்து நாளைக்கு தேற்றிவிடுவார்கள்! 

கடையிலிருந்து முதல்நாளே சரக்குகளை கொள்முதல் செய்வதற்கு கடையில் இருக்கும் மூன்று பொறுப்பாளர்களுக்கும் நூற்றுக்குஇரண்டு ரூபாய் கமிசன்! இத்தனையும் மீறி பார் வைத்திருப்பவர் லாபம் பார்க்க வேண்டுமென்றால் அவர் எவ்வளவு வைத்து விற்றிருப்பார் என்று கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்! என்னது கணக்குல வீக்கா? என்னங்க நீங்க...அவனவன் எத்தனை சைபர்னு தெரியாத கோடியெல்லாம் அடிக்கிறான்....இதுக்கு போயி...சரி நானே சொல்றேன் ஒரு குவாட்டரின் கடையின் நார்மல் விலை ரூபாய் 70/- (சரக்குக்கு சரக்கு மாறுபடும்)ஆனால் விடுமுறை அன்று பாரில் அதன் விலை ரூபாய் 160/-, இதனையும் கொடுத்து நம் குடிமக்கள் வாங்கி குடித்தார்கள்! போலிசும் இதற்க்கு உடந்தை மற்றும் காவல்!


டேய்....சொன்னா கேளுங்கடா...காலுக்கு தலையாணி வேண்டாமுடா!!

இதை நான் எழுதுவது நான் யோக்கியன் என்று பெயர் எடுப்பதற்கு இல்லை! எனது குடும்பத்திற்கு தெரியும் நான் எப்படி என்று! அனைவருமே அவரவர் குடும்பங்களுக்கு நல்லவனாக இருந்தாலே போதும்! இந்த சமூகத்தில் குற்றங்கள் குறைந்து விடும்! நாம் சமூகத்திற்கு தனியாக ஒன்றும் செய்ய வேண்டாம்! வேலை நிமித்தமாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ சில சந்தர்ப்பங்களில் மதுவை தவிர்க்க முடியாது! ஆனால் எவன் ஒருவன் மதுவிர்க்காகவே சந்தர்ப்பத்தை உருவாக்கி கொள்கிறானோ, அவன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் ஆபத்தானவன்! நீங்கள் எப்படி என்று ஒருமுறை சுய மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்!எப்பிடி தலைகீழ நின்னாலும்..ஷ்பெக்ட்ரம்ல அடிச்ச கோடிக்கு எத்தன சைபர்னு தெரியலையே?

அப்புறம் இந்த அரசாங்கத்திற்கு...இன்றைய உலகமயமாக்களில் முழுமையான மதுவிலக்கு என்பது முடியாத காரியம்! சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கடுமையாக்கலாம்! உதாரணம்..இன்றைக்கு நம் நாட்டில் பள்ளிச்சிறுவன் கூட டாஸ்மாக்கில் சென்று மதுவை வாங்கலாம்! மேலை நாடுகளில் அது முடியாது! இன்றைக்கும் பல கடைகள் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பக்கத்தில் உள்ளன! இன்னும் நிறைய சொல்லலாம்! வோட்டுகளில் காட்டும் அக்கறையை கொஞ்சம் வோட்டு போடும் மக்கள் மீதும் இந்த அரசாங்கம் காட்டவேண்டும் என்பதே ஒரு சாதாரண நாட்டு பிரஜைகளின் வேண்டுகோள்!


No comments:

Post a Comment