Wednesday, 27 February 2013

இளைய த(ருமி)ளபதி விஜய்யின் திருவிளையாடல்!திருட்டு டிவிடியில் கரகாட்டக்காரன் படத்தைப்  பார்த்துவிட்டு க்ளப்புக்கு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி.. பயங்கர யோசனையோடு வருகிறார், "கடைசிவரைக்கும்  அந்த  சொப்பன  சுந்தரிய வச்சிருந்தது யாருன்னே தெரியாம போச்சே?" என்று குழம்பியபடி இருக்கிறார்! 
 
திடீரென்று யோசனை தோன்றியவராக... மாப்பிள்ளை  தனுசைக்   கூப்பிட்டு ஒரு அறிவிப்புச்  செய்ய சொல்கிறார்.. " சொப்பன சுந்தரியை யாரு வச்சிருந்தது என்ற சூப்பர் ஸ்டாரின் சந்தேகத்தை தீர்ப்பவருக்கே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம்" என்று...  இதைக் கேட்ட தனுஷ்... " மாமா.. நான் இருக்கும்போது நீங்க எப்பிடி வேற ஒருத்தர சூப்பர் ஸ்டார்னு சொல்லலாம்? பேசாம அது நாந்தான்னு சொல்லுங்க மாமா" என்கிறார்.. இதைக்கேட்ட ரஜினி தனுஷை மேலும் கீழும் பார்த்துவிட்டு.. "கண்ணா.. அதுக்கு நீ சரிவரமாட்ட" என்று சொல்லிவிடுகிறார்!
 
 
ண்ணா.. கனவு கண்டது போதும்ங்ண்ணா....  
 
நடிகர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் விஜய்யும் அதைக் கேட்டு, "ஐயோ! நான் என்ன பண்ணுவேன்? யாரைக் கேட்பேன்? அந்த ஸ்டாரா? இந்த ஸ்டாரா? சூப்பர் ஸ்டாராச்சே....  சூப்பர் ஸ்டாராச்சே... இந்த நேரம் பாத்தெனக்கு நடிக்க வல்லே, நடிக்க வல்லே. அதானே? எனக்கு நடிக்க வருமான்னு உள்ள என்  சந்தேகத்தைத் தீக்கறதுக்கே வழியக் காணோம்?
 
 சூப்பர் ஸ்டார் சந்தேகத்த நான் எங்கிருந்து தீக்கப்போறேன். எனக்கில்லே, எனக்கில்லே, வேறெவனோ, வேறெவனோ அடிச்சிக்கிட்டுப் போயிடப் போறான். சொக்கா! சூப்பர் ஸ்டார் கொடுக்கற அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை எனக்கே கெடைக்கற மாதிரி அருள்புரிய மாட்டாயா?" எனப் பலவாறு புலம்பி இறைவனிடம் வேண்டுகையில் சொக்கநாதரான கவுண்டமணி  "டாகூட்டரே"...  என்றழைத்தபடியே அங்கு தோன்றுகிறார்
 
"ண்ணா... யாருங்ண்ணா  அது?" 

"அடங்கொக்கமக்கா நான்தாண்டா கூப்புட்டேன்" 

"ண்ணா.. எதுக்குங்ண்ணா கூப்புட்டீங்கோ, யாருங்ண்ணா நீங்க?" 

"வெளக்கமாறு, செருப்பு அனைத்தும் சேர்த்து, சாணியிலே முக்கிஎடுத்து, கெட்டவார்த்தை கவிபாடும் ஆல் இன் ஆல் அழகுராஜா  நான்" 

"அந்த தார்க்குச்சி  தண்டோரா போட்டதை நீங்களும் கேட்டாச்சா? என் வயித்தில அடிக்கறதுக்குன்னே வந்திருக்கீங்க, ஓ ஹோ ஹோ ஹோ" 
 
"அடங்கொன்னியா.. நான் அதுக்கு வர்லடோய்... ரஜினியின்  சந்தேகத்தைத் தீர்க்கும் பாட்டு உனக்கு கிடைச்சா, அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் உனக்குக் கிடைச்சிருமாடா?"
 
"ண்ணா.. எண்ணங்ண்ணா இப்பிடி கேட்டீங்க? அந்தப் பாட்டு மாத்திரம் எனக்குக் கெடச்சது, அடுத்த நிமிசமே நான்தானுங்ண்ணா அடுத்த சூப்பர் ஸ்டார்." 
 
"சரி..சரி..விட்ரா நாயே.. அந்தப் பாட்ட நான் உனக்குத் தர்றேன்
 
"என்னது, அந்த சொப்பன சுந்தரிய உங்களுக்கு தெரியும்ங்களாண்ணா? வெளையாடாதிங்ண்ணா... உங்க பாட்டைக் கொண்டு போய் என் பாட்டுன்னு சொல்லிக்கவா? ஏற்கெனவே சொந்தமா கொஞ்சம் நடிக்கும்போதே கன்னாபின்னானு பேசறாங்க,
 
'கொஞ்சம் மொக்கையா இருக்கு, இருந்தாலும் நடிகன்னு" ஒத்துகிட்டிருக்காங்க, அதையும் கெடுக்கலாம்னு பார்க்கிறீங்களா? ண்ணா.. எனக்கு தெரிஞ்சிருச்சு...  நீங்க புதுசாப்படம் எடுக்குறீங்க? அதுல நீங்ளே நடிச்சிப் பார்த்தா எப்படி உதைப்பாங்களோன்னு பயந்து என் தலைலே கட்டப் பார்க்குறீங்க? ' 
 
"தம்பி..ஐம் இன்டர்நேசனல்... இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாவப் பத்தி உனக்கு தெரியாது... இந்தியாவுலே.. ஏன்? உலகத்துலே சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தான்னு எனக்கு மட்டும்தான் தெரியும்..   என் தெறம மேல  உனக்குச் சந்தேகம்னா  என்னைப் டெஸ்ட் பண்ணி பாருடா பப்பிள்கம் வாயா..." 
 
"என்ன்னாது.... என் கிட்ட... என் கிட்டயே மோதப் பாக்கறியா? நான் பார்க்குரதுக்குதான் சுமாரா இருப்பேன், ஆனா உள்ளுக்குள்ள இன்னும் கேவலமா இருப்பேன்.. நான் ஒருதடவ முடிவு பண்ணினா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்.."
 
 "அடங்கொன்னியா.. ஏன்டா செவுட்டுக்காதா? சரி..சரி.. கொஸ்டின நீ கேக்குறியா? நான் கேக்கட்டுமா?
 
"ண்ணா.. ஒரு சேஞ்சுக்கு... நீங்க கேளுங்ண்ணா... நான் பதில் சொல்றேன்....
 
"சர்ரா நாயே..பதில் சொல்லு.... பிரிக்க முடியாதது என்னடா?
"என் படமும்.. மொக்கையும் " 
 
"பிரியக் கூடாதது?
"காத்து..."
 
"த்தூ.. நாயே... சேர்ந்தே இருப்பது என்னடா?
"நானும் சங்கவியும் "
 
 
"வெளங்கும்டா... சேராதிருப்பது? 
"நானும் நடிப்பும் "
 
"இப்பதாண்டா உண்மைய சொல்ற.. சரி..சொல்லக் கூடாதது?
"பஞ்ச் டயலாக்" 
 
"அடி பலமோ? சர்ரா.. சொல்லக் கூடியது?
"ரசிகனிடம் பொய்"
 
"அடங்கொன்னியா...  பார்க்கக் கூடாதது?
"என் படங்களை " 
 
"தப்பிச்சாண்டா... பார்த்து ரசிப்பது?
"பாத்ரூமில் ஓட்டை போட்டு"
 
"அடங்க்கேப்மாரி?... கலையிற் சிறந்தது?
"சோப்பு போடுவது" 
 
"டேய்ய்..நீ இன்னும் திருந்தலியாடா?  நாடகமென்பது?
"எங்கப்பா அடிக்கடி போடுவது"
 
"குடும்பமே அப்பிடியாடா? சரி... பாட்டுக்கு?
"எங்கம்மா" 
 
"டேய்ய்.. இதெல்லாம் ஓவரு.. சரி.. வீணைக்கு? 
"ண்ணா..யாருங்ண்ணா வீணா? புது நடிகையா? 
 
"ஆங்.. வந்துரு... தொங்க போட்டுக்கிட்டு நாக்க... பதில் சொல்றா... அழகுக்கு?
"மேக்கப்"
 
"தொப்பைக்கு?
"அஜீத்"
 
"வில்லுக்கு?
"நயன்தாரா"
 
"ஜொள்ளுக்கு?"
"பிரபுதேவா"
 
"ஆசைக்கு?"
"அவங்க ரெண்டுபேரும்"
 
"அழிவுக்கு?
"நான்" 
 
"ண்ணா..போதும்ண்ணா... போதும்ண்ணா... நாக்க புடுங்குற மாதிரி நல்லா கேக்குறீங்ண்ணா..அப்ப நீங்களே சொல்லிருங்ண்ணா, அந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தான்னு? அத கொண்டு போய் கொடுத்து... எப்பிடியாவது அடுத்த சூப்பர் ஸ்டார் ஆயிடறேன்..." என்று கூறியபடியே காலில் விழுந்தார்!
 
 
அட..ஆண்டவா..என்னை ஏன் கண்ட கலுசடைங்களோட கூட்டு சேர விடற? 
 
குறிப்பு - இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே..யார் மனதையும் புண்படுத்த அல்ல! ( ஹி..ஹி..) இதற்கு அடுத்து நிகழும் நிகழ்வுகளையும் நக்கீரராக நம்ம டி.ஆர வச்சி கற்பனை பண்ணியிருந்தேன்... நீளம் கருதி இத்தோடு முடித்துக்கொள்கிறேன்!


No comments:

Post a Comment