Wednesday, 27 February 2013

ஸ்பெக்ட்ரமால் விளைந்த நன்மைகள்!


என்னமாதிரியே எதையும் ப்ளான் பண்ணிப்ப் பண்ணனும்ம்ம்

 
திரும்பிய பக்கமெல்லாம் ஸ்பெக்ட்ரமால் இழப்பு என்றுதான் சொல்லுகிறார்களே ஒழிய அதனால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு விளைந்த நன்மைகளை  பற்றி யாருமே பேச மறுக்கிறார்கள். தமிழினத் தலைவர் இலங்கை தமிழர்களை காப்பாற்றும் வேலையில் பிசியாக இருப்பதால் அவரின் சார்பாக நானே என்னென்ன நன்மைகள் விளைந்தது என்று எடுத்துரைக்கிறேன்.
 
1.ஆரியர்கள் மட்டுமே இமாலைய ஊழல்  செய்ய முடியும் என்று இந்திய  வரலாற்றில் பதிந்த போபர்ஸ் ஊழலையே பின்னுக்கு தள்ளி ஒரு திராவிடனாலும் சாதனை அளவு ஊழலை பண்ண முடியும் என்று இந்த இந்திய தேசத்திற்கு நிரூபித்த பெருமை தலைவரின் அன்புத்  தம்பி ராசாவையே சேரும்.
 
2.தலைவரின் துணைவியின் ஆங்கிலப்  புலமையை இந்த செம்மொழியான தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. இதைவிட பெருமை தமிழனுக்கு வேறு என்ன வேண்டும்?
 
3.கைது செய்ததால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை என்ற அரிய தத்துவத்தை தலைவர் தமிழர்களுக்கு தாரை வார்க்க இந்த ஊழல்தான் காரணம் என்பதை இங்கே பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
 
4.குற்றமே செய்ய வில்லை என்று சொல்லும் ஒரு மத்திய மந்திரி ஒரு வருடமாக ஜாமீனே கோராமல் கைதியாக இருக்கும் அரிய காட்சியை இந்த உலக மக்கள் காணும் வாய்ப்பாக நாம் இதைக் கருதவேண்டும்.
 
5.எந்த ஆதாரமும் இல்லாமல் ரூபாய் இருநூறு கோடி வரை கடன் கொடுக்கும் புண்ணியவான்களும் இந்த உலகத்தில் உண்டு என நிரூபித்ததை விடவா வேறு பெருமை வேண்டும்?
 
6.பிரதமர் மட்டுமே மந்திரிகளை நியமிப்பார் என்று நினைத்த இந்திய மடையர்களுக்கு காசு பணம் இருந்தா கழுதை கூட மந்திரியாகலாம் என்று மடையர்களுக்கு உண்மைய விளங்க வைத்த அரிய பொக்கிஷம் அல்லவா இந்த ஊழல்?
 
7.உங்களுக்கு ஒரு வயதான மனைவி இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி! உங்கள் பெரும்பான்மை சொத்துக்களை உங்கள் மனைவி பேரில் வைத்துவிடுங்கள். உங்கள் மனைவிக்கு எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லத் தெரிவது முக்கியம். இந்த இளிச்சவாய் இந்திய தேசமும் இரக்கப்பட்டு விட்டுவிடும். இப்படி ஒரு வாழ்க்கைப்  பாடத்தை இந்தியர்களுக்கு ஓங்கி உரைத்த ஒப்பற்ற ஊழல்தான் இது. 
 
இப்படியெல்லாம் இந்திய தேசத்து சொத்துக்களை விமானத்தில் ஏற்றி ஸ்விஸ்க்கு அனுப்பி  விட்டு, தமிழனின் மானத்தை கப்பலில் ஏற்றி விட்டு நீங்களும் கடலிலே கட்டுமரமாக மிதந்து கொண்டிருக்கலாம். இல்லாத தமிழனைக் காப்பாற்ற!
 
கடைசியாக ஒரு சின்னக்கதை......
 
நீங்கதான் ஒரு மளிகை கடைக்கு முதலாளின்னு வச்சிக்கங்க... உங்க கடைக்கு அந்த ஊர்லே கிடைக்காத புது சரக்கு ஒரு நூறு பாக்கெட் இறக்குறீங்க. அதை நீங்க வாங்கிய விலை.. ஒரு பாக்கெட்  ரூ.10 . அதை வாங்கி கடைல வச்சிட்டு கடைல வேலை பார்க்கிற பையன கூப்பிட்டு "தம்பி..இது புது சரக்கு.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அதனால் நீயே பார்த்து வித்துட்டு எனக்கு கணக்கு சொல்லுனு வெளில போறீங்க... திரும்பி வந்தவுடனே அந்த பையன் உங்ககிட்ட.." ஐயா..எல்லா சரக்கையும் வித்திட்டேன்.. இந்தாங்க ரூ.1300. ஒரு பாக்கெட் 13 ரூபாய்க்கு வித்தேன். பாக்கெட்டுக்கு 3 ரூபாய் லாபம்னு சொல்றான்.
 
உடனே நீங்களும் சந்தோசமா அவன தட்டி கொடுக்குறீங்க. கொஞ்ச நேரத்துல ஒருத்தர் உங்ககிட்ட வந்து.. " ஐயா.. என்னய்யா உங்க கடை பையன் இப்படி பண்ணிட்டான்? இந்த ஊர்ல கிடைக்காத சரக்குன்னு நான் வந்து ஒரு பாக்கெட் ரூ.20 க்கு கேட்டேன்.. ஆனா அவன் எனக்கு முன்னாடி வந்தவருக்கு ஒரு பாக்கெட் ரூ.13 க்கு கொடுத்துட்டான்..கேட்டா அவருதான் முதல்ல வந்தாரு அதான் கொடுத்தேன்னு சொல்றான்.. இப்ப வேற வழி இல்லாம நான் அவருகிட்ட ஒரு பாக்கெட் ரூ.20 க்கு வாங்கிட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு போனார்.
 
உடனே நீங்க கடை பையன கூப்பிட்டு விசாரிக்கிறீங்க... அப்பத்தான் தெரியுது... அவன் முதல்ல வந்தவருக்கு ரூபாய் 13 க்கு விக்க இவன்  ஒரு பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கமிஷன் வாங்கிருக்கான். இப்ப பார்த்தா உங்களுக்கு 300 ரூபாய்தான் லாபம்! அதை வாங்கியவருக்கும் கணக்குப்படி 200 ரூபாய்தான் லாபம். ஆனா உங்க கடை பையனுக்கு  500 ரூபாய் லாபம். எப்படி பார்த்தாலும் உங்களுக்கு நட்டம் 700 ரூபாய்.  இப்ப.. அந்த பையன் உங்ககிட்ட வந்து.. " முதலாளி எப்பிடி பார்த்தாலும் உங்களுக்கு 300 ரூபாய் லாபம்னு சொன்னா அவன தூக்கிப்போட்டு மிதிப்பீங்களா மாட்டீங்களா?
 

No comments:

Post a Comment