Wednesday, 27 February 2013

பிரபல பதிவருக்கு ஒரு மனம் திறந்த கடிதம்!வர வர கடிதங்களுக்கு மதிப்பே இல்லாம போச்சு! அதுவும் பிரபல பதிவருக்கு எழுதினா சொல்லவே வேணாம், பாராட்டுனா மட்டும்தான் அவங்க அத வெளில சொல்லுவாங்க நாரத்தனமா திட்டுனா அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க! அதான் புது முயற்சியாக பிரபல பதிவரை பாராட்டி நானே கடிதம் எழுதி நானே பப்ளிஷ் பண்ணபோறேன்! ஆனா  நான் எழுதும் கடிதம் யாருக்குன்னு  நீங்களாதான் கண்டுபிடிக்கணும்! இனி கடிதத்துக்கு போகலாம்!

ச்சே... பிரபல பதிவர் போஸ்ட் படிக்காம வந்தாச்சு! அதான் வரவே மாட்டேங்குது!
ஹிட்சுள்ள பிரபல பதிவருக்கு,

வணக்கம், தாங்கள் இதுவரை சுமார் இருநூறு பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டீர்கள்! ஆனால் தாங்களின் முதல் பதிவையே இன்னும் நான் திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருக்கிறேன்! அதை விட்டு விலக மனமில்லாமல் அல்ல, அது புரிந்தால்தானே அடுத்த பதிவுக்கு போக முடியும், இருந்தாலும் என் வீட்டில் உள்ளவர்கள் கூட உங்கள் பதிவை படித்து விடுவார்கள்! இதனால் எனக்கும் என் குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் பல நன்மைகள் உண்டு! அதைப்பற்றி பின்னால் விரிவாக கூறுகிறேன்! 

நிற்க, நீங்கள் பிரபல பதிவர் என்று சொல்லப்போக, கடந்த வாரம் ஒரு இடம் வாங்கி பதிய சென்றேன்! அங்கு போய் சும்மா வாயை வைத்துக்கொன்டிராமல் பதிவாளரிடம் "சார் நீங்க வெறும் பதிவரா? இல்லை பிரபல பதிவரான்னு?" கேட்டுபுட்டேன், மனுஷன் என்ன நினைச்சான்னு தெரியல? பதிவு பண்ணமுடியாதுன்னு தொறத்தி விட்டான்! இப்பிடித்தான் சார் உங்க பதிவ படிச்சி படிச்சி உங்களமாதிரியே எங்க போனாலும் கேனத்தனமா வாயைகொடுத்து வாங்கி கட்டிக்கிறேன்! சரி அத விடுங்க, ரொம்ப நேரமாக சுத்த தமிழ்ல டைப் பண்றது சிரமாமாக இருக்கிறது, உங்க கலீஜ் தமிழுக்கு வந்துக்கிறேன்!

போன வாரம் இப்பிடித்தான் சார் காலைல எந்திரிச்சி பல்லு விளக்குனதுக்கு ( என் பதிவெல்லாம் படிச்சுமாடா இந்த நல்ல பழக்கமெல்லாம் இருக்குனு கேக்குறீங்களா? விடுங்க சார்.. அதுமட்டுமாவது இருக்கட்டும்!) அப்பறம்தான் பார்க்கிறேன் என்னோட தங் கிளீனர் உடஞ்சி போய் கிடக்கு! என்னடா பண்றதுன்னு யோசிக்கும்போதுதான் கன நேரத்தில் ஒரு ஐடியா வந்தது! நம்ம பிரபல பதிவர் இருக்கும்போது நமக்கு என்ன கவலைன்னு, வேகமா வீட்டுக்குள்ள ஓடி ஒரு பேப்பர் எடுத்தேன், எங்க அப்பாவுக்கு நான் என்ன பண்றேன்னே புரியல, அவருக்கு ஒரு கேலி சிரிப்ப மட்டும் பதிலா கொடுத்துட்டு அந்த பேப்பர்ல பிரபல பதிவர் *** னு உங்க பேர எழுதினேன்!
 உங்க பேர் அளவுக்கு அந்த பேப்பர கிழிச்சு நாக்கு வழிச்சு பார்த்தேன் சார், என்ன கொடுமை சார் இது? பேப்பர் நாக்கு வழிக்க கூட ஆகாம நமத்து போச்சு! அப்பறம் என்ன ___ க்கு சார் அந்த பிரபலம்? தூக்கி போடுங்க சார்! ஆனா பாருங்க தூக்கி போட்ட அந்த பேப்பர எங்க வீட்டு ஜிம்மி குறுகுறுன்னு பார்த்துகிட்டே இருந்துச்சு, அப்பறம் என்ன நினைச்சதுன்னு தெரியல படக்குன்னு வந்து அந்த பிரபல பேர்ல சுச்சா போயிருச்சு.. இதை பார்த்த அதிரிசில இருந்து மீள்றதுக்குள்ள பக்கத்து வீட்டு டாமி, விஜய் (உண்மைலே நாய் பேரு சார் ) எல்லாத்தையும் கூப்புட்டு என்னமோ சொன்னுச்சு சார், அதுங்களும் ஏதோ புரிஞ்ச மாதிரி தலை ஆட்டிகிட்டு அதுங்களோட காலை கடன் எல்லாத்தையும் உங்க பேர் தாங்கிய பேப்பர்லே பண்ணிட்டு போயிருச்சுங்க சார்!

நான் என்ன பாவம் பண்ணினேன்? அந்த பிரபல பதிவெல்லாம் படிக்க வச்சிட்டீங்களே?
ஆனா சார் உங்களால எனக்கும் எங்க குடும்பத்துக்கும் ஏகப்பட்ட நன்மைன்னு சொன்னேன்ல? அதுக்கு வர்றேன் இப்ப! மொதல்ல எனக்கு என்ன நல்லது நடந்துச்சுன்னு சொல்றேன் சார்! முன்னல்லாம் எங்க அப்பா நான் என்ன பண்ணினாலும் "உன்னைய மாதிரி கேனப்பய இந்த உலகத்துலே இல்லைடா?ன்னு சொல்லுவாரு! ஆனா பாருங்க உங்க பதிவ படிச்சதுக்கு அப்பறம் அவரு நினைப்ப மாத்திகிட்டு "நான் கூட என்னமோ நினைச்சேன்டா... உன்னை மாதிரி கேனப்பயலும் உலகத்துல இருக்கான்டா"ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு! எனக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா? இதுக்கெல்லாம் நீங்களும் உங்க பதிவும்தான் காரணம்! 

அட எங்க அப்பாவ விடுங்க சார், எங்க வீட்டு டெஸ்க் டாப்ல எப்பவுமே உங்க பதிவ மட்டும் ஓப்பன் பண்ணியே வச்சிருப்போம்! திடீர்னு யாரவது புடிக்காத விருந்தாளிங்க வந்துட்டா அவங்ககிட்ட " காப்பி கொண்டு வர்ற வரையும் இதை படிச்சிகிட்டு இருங்கன்னு" சொல்லுவோம்! அவங்களும் படிக்க ஆரம்பிக்கிறதுதான் தெரியும், காப்பி வர்றப்ப மாயமா மறைந்சிருவாங்க! ஏன்னா..உங்க பதிவுகள் அப்பிடி! இப்பிடி எங்க வீட்டுக்கு நீங்க மிச்சம் பண்ணி கொடுத்த காப்பிய கணக்கு எடுத்தாவே தனி விழா எடுத்து உங்களுக்கு சால்வையா போர்த்திகிட்டு இருக்கலாம் சார்!

ச்சே..அந்த சனியன் புடிச்சவன் பதிவ படிச்சா இப்பிடித்தான் குளிக்கக் வேண்டியிருக்கு! ஒரே கலீஜ்ப்பா..
இப்பிடித்தான் சார் அன்னைக்கு என் அக்கா மகனுக்கு உடம்பு சுகம் இல்லாம வீட்டுக்கு வந்தாங்க! என்னன்னு கேட்டா மலச்சிக்கலாம்! ரெண்டுநாளா போகவே இல்லையாம்! எல்லோரும் ஆளுக்கொரு வைத்தியம் சொன்னாங்க! நான் உடனே அவன மடில வச்சிக்கிட்டு உங்க பிளாக் ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பிச்சேன், என்ன ஆச்சர்யம்? அங்கேயே அப்பவே போக ஆரம்பிச்சதுதான் அவனுக்கு! ரெண்டு நாளாச்சு! இன்னும் நிக்கலியாம்! உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும்னு எங்க அக்கா வீட்டுல இருந்து உங்க அட்ரஸ் கேட்டாங்க! ஆனா எனக்குதான் தெரியுமே? ஏமாந்தவன் சிக்குனா நீங்க அவங்க பை சைக்கிள கூட விட மாட்டீங்களே? அதான், அவரு இதெல்லாம் விரும்ப மாட்டாருன்னு சொல்லிட்டேன்!

என்னமோ  சார், நான் பதிவு எழுத உக்காந்தா கூட இவ்வளவு கோர்வையா வராது சார், உங்களுக்கு கடிதம்னு சொன்னதும் அதுவா பொங்கி வருது! ஆனா ஒன்னு சார், எப்பிடியும் உங்க ப்ளாக் ஹிட்ஸ் வச்சு அண்ணா நகர்ல ஒரு பிளாட்டும், பிரபல பதிவர்ங்ர அடையாள அட்டைய வச்சு அமிஞ்சி கரைல ஒரு பங்களாவும் கட்டிருவீங்க! எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இந்த சாதா பதிவரை கொஞ்சம் மனசுல வச்சிக்கங்க சார்! நன்றின்னு ஒரு வார்த்தை சொல்லி உங்கள அசிங்க படுத்த விரும்பல! இதுபோன்ற உங்கள் சேவைகள் இன்னும் பல குடும்பங்களுக்கு தேவை படுகிறது, அதுவரைக்கும் நீங்க எழுதிகிட்டே இருங்க சார்!

இப்படிக்கு,
ஒரு சாதா பதிவர்.

No comments:

Post a Comment