Wednesday, 27 February 2013

அரசியல் சுனாமி!நேற்று நிலநடுக்கமும் சுனாமி பயமும் தமிழக மக்களை ஒரு மிரட்டு மிரட்டி விட்டது. இந்த அவசர நேரத்தில் நம்ம அரசியல் தலைவர்கள் இந்த சுனாமிய பத்தி பேசிருந்தா என்ன பேசியிருப்பாங்கன்னு ஒரு சின்ன கற்பனைதான்.

போயஸ் தோட்டத்தில்...

ஓ.பி.எஸ் - அம்மா.. சென்னைக்கு சுனாமி வருதாம்... மக்கள் பயத்துல இருக்காங்க.

ஜெயா - அப்பிடியா?

சசிகலா - அக்கா.. அந்த சுனாமி யாருண்ணே எனக்கு தெரியாதுக்கா.. நான் இங்கே என் வாழ்க்கைய அர்ப்பனிச்சதால, அந்த சுனாமி பண்ணின வேலையெல்லாம் எனக்கு என்னண்னே தெரியாதுக்கா. என்னை நம்புக்கா.. அந்த சுனாமிக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை, இது அக்கா உன்மேல சத்தியம்.

 ஓ.பி.எஸ் - ( மனதுக்குள் ) எப்பா.. இது உலக நடிப்புடா சாமிமீமீமீ......

ஜெயா - சசி சொல்வதை வைத்து பார்க்கும்போது இது உண்மை என்றே தோணுகின்றது... எனவே சசியை மட்டும் இங்கு அனுமதிக்கிறேன், அந்த சுனாமியோடு அமைச்சர்களோ கட்சியினரோ எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என இதன் மூலம் தெரிவிக்கிறேன்... மீறி வைத்த்த்...

ஓ.பி.எஸ் - ( இடைமறித்து ) அமம்ம்ம்மா.... ரீலு அந்துபோச்சு... அந்த சுனாமி இங்க வரையும் வந்துருச்சாம்ம்ம்ம்.......

*********************************************************************************


கோபாலபுரத்தில்....

துரைமுருகன் போட்டுக்கொண்டிருந்த பவுடரை பாதியில் நிறுத்திவிட்டு ஓடிவருகிறார்...

துரைமுருகன் - தலைவா..தலைவா.. சென்னைக்கு சுனாமி வருதாம்.. மக்கள் எல்லோரும் பீதில இருக்காங்க...

கலைஞர் - தம்பி.. இப்படித்தான் அன்று கள்ளக்குடியிலே....ரயில் வரும்போது.....

துரைமுருகன் - தலைவா... எஸ்.டி.டியெல்லாம் பேச இப்ப நேரம் இல்லை..உடனே ஏதாவது செய்ங்க...

கலைஞர் - தம்பி.. அப்படியென்றால் சுனாமி வருவதை கண்டித்து அடுத்த வாரம் உண்ணாவிரதம் என்று அறிவிப்போமா?

பக்கத்தில் நிற்கும் ஸ்டாலின் மெதுவாக..
தலைவரே... சுனாமி ஒன்னும் மத்திய அரசு இல்லை.. என்ன பண்ண போறோம்னு முன்னாடியே சொல்றதுக்கு.. வந்து ஒரு காட்டு காட்டிட்டுதான் போகும்... வேற..வேற.. வேற சொல்லுங்க..

கலைஞர் - அப்படியா தம்பி? சரி.. சுனாமியை கண்டித்து கடற்கரை சாலையில் மனித சங்கிலி என்று அறிவிப்போம்... எப்படி என் ராஜதந்திரம்?

துரைமுருகன் - ( மனதுக்குள் ) க்கும்... சிவனேன்னு வீட்டுக்குள்ள இருக்கவன வீதிக்கு கூட்டி வந்து மொத்தமா அள்ளிகிட்டு போறதுக்கு வழி பண்றாரு தலைவரு....

**********************************************************************************


கோயம்பேடு மண்டபத்தில்...

சுதீஷ் வேகமாக ஓடிவருகிறார்......

மச்சான்..மச்சான்... சென்னைக்கு சுனாமி வருதாம்..மக்கள் எல்லாம் பயத்துல இருக்காங்க...

கேப்டன் - என்ன மச்சான் சொல்றீங்க? என் படம் கடைசியா விருத்தகிரி வந்தப்பகூட மக்கள் தைரியமாத்தானே இருந்தாங்க? இப்ப என்ன புதுசா?

சுதீஷ் - ஐயோ மச்சான்... இது சுனாமி... இது வந்தா நமக்கு எல்லாம் மொத்தமா படம் காட்டிரும்..

கேப்டன் - டேய்ய்... நிறுத்துடா.... நானல்லாம் சுனாமிலே சும்மிங் போறவண்டா... என்கிட்டே பயம் காட்றியா? சுயிங்கம் திண்ணு செத்தவனும் இருக்கான்..சுனாமில பொழைச்சவனும் இருக்கான்... மக்களே..பாருங்க மக்களே...

சுதீஷ் - யெக்கா..யெக்கா...என்னக்கா... மச்சான் காலைலே ஆரம்பிச்சிட்டாரா? நீயாவது சொல்லக்கூடாதாக்கா? யோவ்..பன்ருட்டி..கூடவே இருக்கியே நீயாவது சொல்லக்கூடாதா?

பன்ருட்டி - ( மனதுக்குள் ) அட போய்யா... அப்பவே வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியரு சொன்னாரு... " நீங்க குடிக்கமாட்டீங்க...ஆனா எந்நேரமும் டாஸ்மாக்ல இருக்க மாதிரியே இருப்பீங்கன்னு" இந்தா... நடக்குதுல்ல?

 *********************************************************************************


தைலாபுரம் தோட்டத்தில்...

அன்புமணி - யெப்பா..யெப்பா... சுனாமி வருதாம்பா... என்னப்பா பண்றது?

ராமதாஸ் - அப்பிடியா? எது வந்தாலும் சரி.. அதுல வன்னியர்களுக்கு 50 % ஒதுக்கீடு கேப்போம்..இல்லைனா அது வர்ற வழி பூராம் குறுக்கால மரத்த வெட்டி போடுங்கடா....  ( இதைக்கேட்டதும் காடுவெட்டி குரு குஷியாக கிளம்புகிறார்.. )

அன்புமணி - யோவ்..நில்லுய்யா..நீ வேற... யெப்பா... அது சுனாமிப்பா... நீ என்ன மரத்த வெட்டி குறுக்கால போடறது? அதுவே போடும்... புரியாம பேசாதப்பா... உனக்கு வயசாயிருச்சு... நான் வர்ற வழில ரெண்டு பேரு என் காரை மறிச்சு ஏதாவது பண்ண சொல்லி என் கால்ல விழுந்து அழுதாங்க தெரியுமா? ( கண்கலங்குகிறார்.. )

ராமதாஸ் - டேய்ய்.. மவனே, எனக்கேவா? ( வாசல் பக்கம் சத்தம் கேட்கிறது ) அங்க என்னடா சத்தம்?

குரு - ஐயா.. யாரோ ரெண்டு பேரு பப்ளிக்கா  நம்ம சின்னையா கால்ல விழுந்து அழுதாங்களாம்.. பேசினபடி இன்னும் பேமன்ட் வரலையாம், அதான் வந்து சவுண்டு கொடுக்குறாங்க...

ராமதாஸ் அன்புமணியை பார்த்து திரும்புகிறார்... அன்புமணியோ ஒண்ணுமே தெரியாத மாதிரி " சௌமியா கூப்டியாம்மா... இதோ வரேன் " என்று நழுவி விடுகிறார். 

No comments:

Post a Comment