Wednesday, 13 February 2013

ஒரு அப்பாவியின் அனுபவம்!




இப்ப நான் சொல்ல போற கதை 2008- க்கும், 2010- க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது! அப்ப நான் பத்தாவது படிச்சுக்கிட்டு இருந்தேன்! (இப்பவும் அதுதான் படிக்கிறேன்!), நான் படிச்ச பள்ளி எங்க ஏரியாவிலே ரெம்ப பிரபலமானது! (நம்ம போலிஸ் அளவுக்கு இல்ல!), நான் படிக்கும் போது மார்க் வாங்குனனோ இல்லையோ பல்ப் நெறைய வாங்குனேன்! 

எங்க பள்ளில வருஷா வருஷம் நெறைய போட்டிகள் நடக்கும், பேச்சுபோட்டி.....அது இதுன்னு! பொண்ணுங்கள்ட்ட கைதட்டல் வாங்கணும்னா, இந்த மாதிரி எதாவது போட்டில ஜெயிச்சு வாங்குனா உண்டு!(நம்மால படிச்செல்லாம் பரிசு வாங்க முடியாது!), அதனால நெறைய போட்டில கலந்துக்கிறது!(ங்கொய்யால கடைசி வர ஒரு பரிசு கூட வாங்கல!)




இப்பிடித்தான் ஒன்பதாவது படிக்கும்போது பேச்சு போட்டில கலந்துக்கிட்டேன்! நல்லாவே தயார் பண்ணிருந்தேன்!(நம்புங்க!), எனக்கு முன்னாள் ஒரு பொண்ணு பேசுனுச்சு! ரெம்ப வீரமா முன்னாடி உள்ள பென்ச்செல்லாம் திடீர்னு தட்டி தட்டி பேசுனுச்சு! அப்பவே மைல்டா டவுட் வந்துச்சு! நான் நல்லா பேசுனாகூட அந்த பொண்ணுக்கே பரிச கொடுத்துட்டாங்க! இந்த போட்டிக்கு நீதிபதியா மூணு டீச்சர்ஸ் உக்காந்துருப்பாங்க! அதுல ஒரு ஆள்ட்ட கேட்டேன்! ஏன் சார் இப்பிடின்னு?! போடா பன்னாட! அந்த பொண்ணு எவ்ள வீரமா பென்ச்செல்லாம் தட்டி தட்டி பேசுனுச்சுன்னு! ங்கொயாள அப்பவே முடிவு பண்ணேன் அடுத்த வருஷம் நாமளும் பென்ச்ச தட்டிரனமுன்னு!

அடுத்த வருசமும் வந்துச்சு! வழக்கம் போல மொத ஆளா பேர குடுத்துட்டேன்! அந்த பொண்ணும் கலந்துக்கிச்சு! லேசா ஒதருனுச்சு! இருந்தாலும் மனசுக்குள்ள நாமதான் பென்ச்ச தட்ட போறமேன்னு சமாதானபடுத்திக்கிட்டேன்! போட்டியும் வந்துருச்சு! எனக்கு முன்னாடி அதே பொண்ணுதான் பேசுனிச்சு!(அது ஏன் பொண்ணுங்க மட்டும் எல்லாத்துலயும் மொதல்ல?), ஆனா பாருங்க அந்த பொண்ணு பென்ச்செல்லாம் தட்டி பேசாம நல்ல புள்ளயா பேசிட்டு வந்துச்சு! எனக்கு பயங்கர சந்தோசம்! அப்பா! இன்னிக்கி பென்ச்ச தட்டியே பரிச தட்டிருவோம்னு!(தலைக்கு மேல விதி வெளக்கமாத்த வச்சுக்கிட்டு ரெடியா நின்னத பாக்கல!)

என்னோட முறையும் வந்தது! நானும் பென்ச்செல்லாம் திடீர்னு தட்டி தட்டி பேசிட்டு வந்தேன்! ரெம்ப நம்பிக்கையோட முடிவுக்காக காத்துக்கிட்டு இருந்தேன்!அப்பதான் ஒரு அதிர்ச்சிய கொடுத்தாங்க பாருங்க!! திரும்பவும் அந்த பொண்ணுக்கே பரிச கொடுத்துட்டாங்க!

 நான் திரும்பவும் அந்த வாத்தியார்ட்ட போயி ஏன் சார் இப்பிடின்னு?!! கேட்டேன்! கேட்டுகொட முடிக்கல அவரு பயங்கர கோவத்துல கத்த ஆரம்பிச்சுட்டாரு!(என்ன? எப்பிடி திட்னாரா?!! $%#&^%*^%^% போங்கையா வயித்தெரிச்சல கெளப்பாம!)

நானும் விடாம ஏன் சார் திட்றிங்கன்னு கேட்டேன்! அதுக்கு அவரு சொன்னாரு "நாயே உன்னை யார்ரா பென்ச்ச தட்ட சொன்னது? அப்பிடின்னாரு! நானும் விடாம போன வருஷம் அந்த பொண்ணுக்கு மட்டும் கொடுத்திங்க அப்பிடின்னேன்! போடா நாயே! போன வருஷம் ஜட்ஜா இருந்த டீச்சர்ஸ் வேற இன்னிக்கு இருந்தவங்க வேற! ஒனக்கு பரிசு கெடக்காததுக்கு காரணமே நீ பென்ச்ச தட்னதுதான் அப்பிடின்னாரு!

நான் பென்ச்ச தட்னதுல அவருக்கு என்ன சார் பிரச்சனை? நான் கேட்டேன்!

நீ திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம பென்ச்ச தட்னதுல அந்த வாத்தியாரு பயந்து போயி பேன்டுல உச்சா போய்ட்டாருடா பாவி" அப்பிடின்னாரு!

 நான் - ங்கே...................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நீங்களே சொல்லுங்க நான் ஏன்  இவ்ளோ அப்பாவியா ஒலகம் தெரியாம இருக்கேன்?!!


இமேஜ் உதவி - கூகுள் 



No comments:

Post a Comment