Wednesday, 27 February 2013

அதிரி புதிரி அரசியல் நையாண்டி!பால் விலை கூடிபோச்சு.. பஸ் கட்டணமும் கூடிபோச்சு.. ரேசன் கடையும் பால் பூத்தோட எண்ணிக்கையும் கூடறதுக்கு பதிலா டாஸ்மாக்கும்.. எலைட் பார்களோட எண்ணிக்கையும் கூட போகுது.. அரசாங்கம் வச்சிக்க வேண்டிய கல்வியும் மின்சாரமும் தனியார் கைல தாண்டவமாடுது... தனியார் கைல இருக்க வேண்டிய மதுக்கடை அரசாங்கம் நடத்துது... நூலகம் எல்லாம் மருத்துவமனையா மாறுது.. ஆனா இருக்க மருத்துவமனை எல்லாம் சரியான வசதி இல்லாம மார்ச்சுவரியா மாறிகிட்டு இருக்கு! சரி விடுங்க இந்த நாசமா போற அரசியல் நமக்கெதுக்கு? இந்த அதிரிபுதிரி அரசியல்ல நம்ம அரசியல் தலைவர்களோட அடுத்த மூவ்மென்ட் என்னன்னு பார்ப்போம்...


முதலில் பயாஸ் கார்டனில் ஆலோசனை கூட்டம் நடக்குது... 
பயா மேடம் நடுவில் இருக்க சைடில் அக்காமாலா.. சுற்றிலும் கைகட்டி கொண்டு அமைச்சர்கள் தன்னீர் செல்வம், பயகுமார், பஸ்வ நாதன், பங்கோட்டையன் ஆகியோர்......
பயா மேடம் - ஹேய்.. மேன்ஸ்... இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் அடுத்து எந்த விலைய கூட்டலாம்னு யோசனை சொல்லுங்க.. தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை கூட ரெடியாயிருச்சு..

தன்னீர்  செல்வம் - அம்மம்மா.... நாம வேணா இந்த பாலிடால், மூட்டை பூச்சி மருந்து இதோட விலையெல்லாம் ஏத்துவமா?

பயா மேடம் - நான்சென்ஸ்... என்ன பேசுறீங்க? ஏற்க்கனவே பால் விலை பஸ் கட்டணம் கூட்டுனதால ஏழைகள் வாங்கி குடிக்கிற மாதிரி அதோட விலை மட்டும்தான் கம்மியா இருக்கு.. அதையும் கூட்டுனா ஏழைகள் எப்படி அத வாங்கி குடிப்பாங்க? நெக்ஸ்ட் ஐடியா ப்ளீஸ்..

(அம்ம்மா.. என்று குரல் மட்டும் கேட்க்கிறது...)

பயா மேடம் - ஹேய்.. யாரு மேன் அது பெக்கர்ஸ உள்ள விட்டது? ஸ்டுபிட்...

பயகுமார் - அம்ம்மா.. கீழ பாருங்கம்மா... ( விழுந்து கும்பிட்டபடி கிடக்கிறார்....)

பயா மேடம் - ஹெலோ... எந்திரி மேன்... கும்புட்ரதுக்கு விழுகுரீங்களா இல்லை காலை வார விழுகுரீங்கலான்னே தெரிய மாட்டேங்குது.....

பயகுமார் - அம்மா... இனிமே எல்லா வெள்ளை பேப்பர், பேனா இன்க் விலையெல்லாம் கூட்டுவோம்.. அப்புறம் பாருங்க அந்த பருணா நிதி அறிக்கையும் எழுத முடியாது... இனி கதை வசனமும் எழுத முடியாது.. நம்மளும் நிம்மதியா இருக்கலாம் மக்களும் உயிர் பயம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்...

பயா மேடம் - மிஸ்டர் தன்னீர்... சீ... ஐடியா இப்பிடி கொடுக்கணும்..... மிஸ்டர் பஸ்வநாதன் நீங்க ஒண்ணுமே சொல்லலியே?

பஸ்வநாதன் - அம்ம்மா.. நான் என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன்? இல்லாத கரென்ட்டுக்கு எதுலமா விலை ஏத்துறது?

பயா மேடம் - ஸ்டுபிட்.. நம்மள்ட்ட இல்லாத திறமைய நம்பி மக்கள் வோட்டு போடல? அதுமாதிரி புதுசா திங் பண்ணுங்க... மாலா அக்கா போய் ஹெலி காப்டர ரெடி பண்ணுங்க... நாளைக்கு கோர்ட்டுக்கு போகணும்!கபாலபுரத்தில் அதிரி புதிரி ஆலோசனை கூட்டம்....

பருணாநிதி அமர்ந்திருக்க... சுற்றிலும் ஸ்பாலின்,  தனிமொழி, ஏற்காடு ஏராசாமி போன்றோர்கள்......

( தலைவா... தலைவா என்று மரைமருகன் கதறிக்கொண்டு ஓடி வருகிறார்... )

பருணாநிதி - ஏன்யா இப்படி ஓடி வர்ற? ரெய்டுல டாக்குமென்ட் எதுவும் சிக்கிருச்சா? 

மரைமருகன்  - அது போனா கூட கவலைப்பட மாட்டேன் தலைவா... 50 ரோஸ் பவுடர் டப்பா, 20 லிப்ஸ்திக் எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயட்டாங்கையா.. ஐயகோ.. பஸ்பூ வர்ற நேரம் ஆச்சே... நான் என்ன பண்ணுவேன்....

( ஸ்பாலினும், தனிமொழியும் தலையில் அடித்துக்கொள்ள... ஏற்காடு ஏராசாமிக்கு வழக்கம்போல இது எதுவும் காதில் விழ வில்லை.. அந்த நேரம் பஸ்பூ உள்ளே என்ட்ரி ஆக மரைமருகன் ஓடி ஒளிகிறார்..)

பருணாநிதி - என் அருமை செல்வம் தனிமொழி விடுதலை ஆன சந்தோஷத்தில் இருக்கேன்.. ஏதாவது போராட்டத்துக்கு யோசனை சொல்லுங்கள்  என்  செல்வங்களா...

ஸ்பாலின் - தலைவா.. நாம வேணா மத்திய அரசுகிட்ட மாநில சுயாட்சி பத்தி பேசுவமா?

பருணாநிதி - தம்பி... நீ இன்னும் வளரனும்... என் செல்லம் வெளியில் வந்த பிறகு அத பத்தி பேச என்ன இருக்கு? வேற யாரையாவது உள்ள வச்சா அப்ப  பேசிக்கலாம்....

ஏற்காடு ஏராசாமி - ( என்னன்னு காதில் விழுகாமலே ) தலைவா... ராஜ தந்திரங்களை கரைத்து குடித்துள்ளீர்கள் போங்கள்...

ஸ்பாலின் ( மனதிற்குள் ) பயிற்சி போத வில்லையோ?காயாம்பேடு கட்சி அலுவலகம்... குஜயகாந்த் வெந்நீர் குடித்து வெறி ஏற்றிக்கொண்டிருக்க.... சுற்றிலும் மைத்துனர் மதீஸ், தன்ருட்டி தாமசந்திரன், மனைவி பிரேமா சுதா ஆகியோர்....

தன்ருட்டி தாமசந்திரன் - தம்பி மதீஸ்.. உன் அத்தான்கிட்ட சொல்லுப்பா... மாநில அரசு, மத்திய அரசு, கடற்படைய எதிர்த்து அறிக்கை விட்டது ஓக்கே... ச்விர்ச்சலேந்துக்கு  எதிரா அறிக்கை விடனும்கிறதெல்லாம் டூமச் தம்பி...

மதீஸ் - ஏன்? என் அத்தான் அறிக்கை விட்டா என்ன தப்பு?

தன்ருட்டி தாமசந்திரன் - தப்பில்லை தம்பி... ஆனா ச்விர்ச்சலேந்துல  இருந்து வர்ற சரக்குல கலப்படம்னு அறிக்கை விடறீங்க பாரு அதுதான் ஓவரு... தங்கச்சி நீயாவது சொல்லும்மா....

பிரேமாசுதா - அண்ணே.. என் கணவர் தெய்வத்தோட கூட்டணி வைக்கிறவர்... உலகத்துல தப்பு எங்க நடந்தாலும் தட்டி கேட்ப்பார் இந்த பேப்டன்... 

(  தன்ருட்டி தாமசந்திரன் வெளங்கும்... குடும்பமே இப்பிடியா? என்று  தலையில் அடித்துக்கொண்டு கிளம்புகிறார்.. போறவரை கூப்புடுகிறார் குஜய காந்த் )

குஜயகாந்த் - அண்ணே.. ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க... எனக்கு தண்ணில இறங்கி நீச்சல் அடிக்கவும் தெரியும்... அதே நீச்சல் அடிக்க தண்ணி அடிக்கவும் தெரியும்... புரியுதா? க்கும்.. ஏன்னா எனக்கு புரியல.... ஆக்காங்... 

பைலாபுரம் தோட்டத்தில்... சாமதாசும், பண்புமனியும் இருக்க.. அந்த பக்கம் மாடுவெட்டி மரு அமர்ந்திருக்க...

மாடுவெட்டி மரு - ஐயா.. இப்பிடியே இருந்தா என்னய்யா அர்த்தம்?

சாமதாஸ் - கிளிக்கு ரெக்கை முளைதிடுத்து பறந்துடுத்து.... ஐயா பண்புமணி என்னய்யா பண்ற?

பண்புமணி - ஒன்னுமில்லையா... சன் மியூசிக்குக்கு போன் பண்ணி பாட்டு கேக்குரன்யா....

சாம்தாஸ் - என்ன பாட்டுயா? யாருக்கு கேக்குற?

பண்புமணி - தனியே..தன்னந்தனியே... நான் காத்து காத்து நின்றேன்..... நமக்குதான்யா இந்த பாட்டு......


 

No comments:

Post a Comment