2011
வெளியே மழ இப்பத்தான் விட்டுருந்துச்சு.மழ விட்டுட்டுப் போன குளிர்சில இந்த உச்சி மத்தியானம் கூட குளுகுளுன்னு இருக்கு.மழ விட்ட தைரியத்துல ஈஸி சேர போர்டிகோல கொண்டாந்து போட்டுச் சாஞ்சிகிட்டு அந்த சிலுசிலுப்ப மேல்ல வாங்கிகிட்டேன். எப்படா மழ விடும்னு காத்துகிட்டு இருந்தமாதிரி வாசல்ல ரெண்டு சிட்டுகுருவி ங்க வந்து கீச்சு கீச்சுன்னு என்னமோ பேசிகிட்டு என் கண்ணுக்கு தெரியாத அதோட இரையக் கொத்திகிட்டு இருந்துச்சுங்க.
அப்பப் பார்த்து இந்த பக்கத்து வீட்டு வாண்டு ஒரு வெடி வச்சி வெடிச்சதும் அதுங்க ரெண்டும் ஏதோ இந்த உலகம் அழியப் போகுதுங்கற மாதிரி அவசரமா பறந்து போயிருச்சுங்க . அவனச் சொல்லியும் குத்தம் இல்லைநாளைக்
எனக்கு ஏதோ ஒரு காப்பித்தண்ணி குடிச்சா நல்லா ருக்கும் போலத் தோணுச்சு. " சாந்தா.. கொஞ்சம் காப்பித்தண்ணி போட்டு கொண்டு வர்றியா?" இங்க இருந்தே கொரல் கொடுத்தேன். " க்கும்.. சாப்ட போற நேரத்துல என்ன காப்பித்தண்ணி வேண்டிக் கிடக்கு?" ன்னு பதில் வந்துச்சு. இருந்தாலும் காப்பித்தண்ணி வரும்னு தெரியும் . மழ விட்டதுமே வீதில குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்ட திரிஞ்ச ஆடு மாடுகள வேடிக்க பார்த்துகிட்டு இருக்கும்போதே சாந்தா காப்பித்தண்ணியோடயோட வந்தா.
இந்தாங்கன்னு அத என் கைல கொடுத்துட்டு " ஏங்க, நாளைக்கு தீவாளி, மூத்தவகிட்டையும் மாப்ளகிட்டையு ம் நான் நேத்து பேசும்போது தீவாளிக்கு வரச் சொல்லிட்டேன், இந்த சுமதிக்கும் மீனாவுக்கும் நீங்க ஒரு எட்டு போன் பண்ணி பேசிருங்க. குழந்தைகள கூட்டிக்கிட்டு சீக்கிரமே வரச் சொல்லுங்க.அப்பறம் மஜீத் அண்ணன் வீட்டுக்கு போன் பண்ணிருங்க. நம்ம தம்பியும் சிங்கபூர்ல இருந்து இந்த வருஷம் தீவாளிக்கு வரலைன்னு சொல்லிட்டான் பொங்கலுக்கு வந்துக்குறானாம். லீவு பிரச்னை இல்லையாம். கடைசில முடிவு செஞ்சதால டிக்கெட் வெலதான் கூட இருக்காம்." ன்னு மூச்சுவிடாம அடுக்கிக்கிட்டு இருக்கும் போதே போன் வந்து அவ பேச்ச பாதிலே கலச்சிடு ச்சு.
வேகமா உள்ள போயி போன எடுத்து காதுக்கு வச்சவ "எப்ப?" "எப்பிடி?"ன்னு கேட்டுகிட்டே அதிர்ச்சியாயி உக்காந்துட்டா. "என்னடி? என்ன?" நானும் பதறிக்கிட்டே எந்திருச்சுப்போய் போன எடுத்துக் காதுல வச்சுப்பார்தேன். அந்தப்பக்கம் ஒரு சத்தமும் இல்ல. அவகிட்டே கேட்டேன் " என்னாச்சுடி?" முட்டிக்கிட்டு வந்த கண்ணீரோட அவ சொன்னா "ஏங்க..நாம ஒருத்தலப் பத்தி பேசும்போது அவங்க வந்தா அவங்களுக்கு ஆயுசு நூறுன்னு சொல்லுவோம்ல, ஆனா இப்பதான் மஜீத் அண்ணனப் பத்தி பேசினேன். ஆனா அவரோட ஆயுசே முடிஞ்சிருசாங்கன்னு சொல்லி வாய் விட்டு கதறிட்டா.
எனக்கு ஏதோ கீழ நிக்கிற தரையே நழுவுற மாதிரி இருந்துச்சு. "எப்பிடி ஆனுச்சாம்? அப்துல்லா மாப்ள சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப் பறம் வீட்ல சும்மாதானே இருந்தான்? தக்கிரதுகூட இல்லையே?" ன்னு கேட்டேன். அவளும் அழுதுகிட்டே சொன்னா " வீட்லதான் இருந்தாராம், திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாராம், ஏதோ ஆர்ட்டு அட்டாக்காம், ஆஸ்பெட்டலுக்கு தூக்குரதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சாம், அனேகமா இன்னக்கி சாயங்காலத்துக்குள்ள எடுத்துரு வாங்கலாம்" ன்னா.
எனக்குஒண்ணுமே பேசத் தோணல. நெஞ்சுல கை வச்சபடி
1980
வேல முடிஞ்சு கசகசப்போட வெளிய வந்து என் சைக்கிள் நிப்பாட்டி யிருக்குற இடத்துப் பக்கமா போனேன். ஏதோ நான் வேலை பார்க்குற மெசினு சுச்சத் தட்டுனா ஓடற மாதிரித்தான் நானும் போனேன், ஒனர்ச்சியே இல்லாம! நாளைக்குத் தீவாளி! கூட வேல பாக்குறவங்க எல்லாரும் வேக வேகமா வெளிய போய்கிட்டு இருந்தாங்க. என்னச் சுத்தி எல்லாருமே சந்தோசமா இருக்க மாதிரியே இருக்கு!
ஆனா எனக்கு மட்டும் சந்தோசம்னா அர்த்தம் என்னன்னு இன்னும் சரி யாகூட வெளங்கல.இருந்தாலும்.. என்னமோ நேத்து என் எட்டு வயசு மூத்த மக ஆசையாக் கேட்டதுதான் மனசுக்குள்ளப் போட்டு கொமஞ்சிகிட்டே இருக்கு! மெதுவா சைக்கில எடுத்துகிட்டு நேத்து நடந்தத அச போட்டுகிட்டே வந்தேன். தெனமும் வர இருவது போக இருவது.. நாப்பது கிலோ மீட்டர் சைக்கில் அழுத்துற எனக்கு இந்த மாதிரி அசபோட பல சம்பவங்கள் இருக்கும்!
சொற்ப சம்பளத்துல ஒரு அச்சாபிசி ல வேலை.அதுகூட என் ஊர்ல இருந்து இருவது கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம்! எனக்கு வெவசாயத்தத் தவிர வேற வேல தெரியாது, எங்க பரம்பர நெலமும் அப்பாவோட பொறந்த அண்ணந் தம்பிங்க பாகம் பிரிச் சது போக பணக்காரங்களின் மனசு மாரி ரொம்ப சுருங்கிப்போச்சு.
முப்போகம் அதுல பார்த்தாக் கூட சாப்பாட்டுக்கே பத்தாது. ஆனா எங்க ஊரு ஒரு போகத்துக்கே வானம் பார்த்த பூமி! என் சம்பளத்துல என் முழுக் குடும்பமும் மூணு வேள வயித்தக் கழுவுறதே பெரிய பாடு, இதுல என் மகளோட ஆசய நான் எங்க இருந்து நெறவேத்துறது? என் காலு மட்டுந்தான் பெடலை மிதிச்சிக்கிட்டு இருந்துச்சு, மனசு என்னமோ அவ ஆசயிலே ப்ரேக் புடிச்சி நின்னுக்கிச்சு.
" அப்பா.. நாளைக்கு அப்பறம் தீபாவளிதானே?" இது மக
"ஆமாண்டா... " சைக்கிள துடைச்சிகிட்டே நான்.
"லட்சுமிக்கு அவங்க அப்பா பட்டுப் பாவாட சட்ட எடுத்து கொடுத்துருக்காங்க.. வெடியெல்லாம் கூட வாங்கிட்டாங்கப்பா" கண்ணு ரெண்டையும் விரிச்சிகிட்டே சொன்னா,
"சரிடா.. உனக்கும் தங்கச்சிங்களுக்கும் அப்பா நாளைக்கு கவுன் எடுத்து தர்றேன்" ன்னு சொன்னேன்.
"போப்பா..கவுனெல்லாம் வேணாம், எனக்கு பட்டுப் பாவாடசட்டதான் வேணும்" ன்னு சொல்லி கண்ணக் கசக்க ஆரம்பிச்சா..
"சரிடா, அப்பா எடுத்து தர்றேன்னு சொல்லி அப்ப அவள சமாளிச்சிட்டேன். ஆனாலும் எப்பிடின்னுதான் இன்னும் எனக்கு வெளங்கல. முதலாளி கொடுத்த கொஞ்சோண்டு போனஸ்ல பெரியவ இவளுக்கு, இவளுக்கு இளையவ ரெண்டு பேரு, கடைசியா மகன் வேணும்னு தவம் இரு ந்து பத்து மாசத்துக்குமுன்னாடி பொ றந்த மகன், பொண்டாட்டி வேற பச்ச உடம்புக்காரி! இப்டி எல்லாருக்கும் சாதா துணி எடுக்கவே துண்டு விழுகும் போல? இதுல நாளைக்கு தீவாளிக்கு கவிச்சி ஏதாவது எடுக்கணும். பொண்டாட்டி வேற காலைல எண்ணெப் பலாரம் செய்யணும்னு சொல்லுவா, பட்டு பாவாடை எடுக்கணும்னா இது எல்லாத்தையும் தியாகம் பண்ணனும். ஆனா சின்ன புள்ளைங்க இருக்க வீட்ல அதுவும் முடியாது. இப்பிடி கண்டமேனிக்கு யோசிச்சி கிட்டே சைக்கிளை சந்தப்பேட்ட மஜீத்து கட முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்னேன்.
மஜீத்து எப்பிடின்னு தெரியாமலே எனக்கு கூட்டாளியானவன். நான் சின்ன வயசுல இதே காரக்குடி சந்தப்பேட்டயில என் அத்த வீட்டில வளர்ந்தவந்தான். ஏன்னு கேக்காதிங்க, அது ஒரு பெரிய கத. சுளுவா சொல்லனும்னா அப்பா ரெண் டாம் தாரம் கட்டிக்கிட்டாரு, அதுக்கு பொறவு அங்க எனக்கு யாரும் ஆதரவு இல்லாம நின்னப்ப மவராசி என் அத்ததான் நான் இருக்கேன்னு சொல்லி கையோட என்ன கூட்டிகிட்டு வந்து சோறு போட்டுவளத்தா.
மஜீத்து பக்கத்துல செஞ்சதான், அவன் படிக்காம ஊரச் சுத்திட்டு, ஒரு டெய்லர்கிட்ட வேலக்குச் சேந்து தொழிலக் கத்துகிட்டு இன்னைக் கு இதே சந்தப்பேட்டயில ஒரு கட பாத்து உக்காந்துட்டான். நானும்தான்! எட்டாப்போட படிப்ப நிப்பாட்டிட்டு அத்த வீட்ல ஆடு மாடுகள மேச்சிகிட்டு வெவசாயம் பாத்துகிட்டு கால ஓட்டத்துல கல்யாணமும் செஞ்சு, குடும்பக் கொழப்பங்களால என் சொந்தக் கிராமத்துக்குப் பொலம் பெயந்துட்டேன்.
மஜீத்து பக்கத்துல செஞ்சதான், அவன் படிக்காம ஊரச் சுத்திட்டு, ஒரு டெய்லர்கிட்ட வேலக்குச் சேந்து தொழிலக் கத்துகிட்டு இன்னைக்
ஆனா விதி என் வேல ரூபத்துல வந்து இதே சந்தப்பேட்டைய கிராசுப் பண்ணிப் போற மாரியே வச்சிருச்சு. சைக்கில நிப்பாட்டி ஸ்டேண்டு போட்டுட்டு வெளிய போட்ருந்த மரப்பெஞ்சுல உக்காந்தேன். என்ன நிமிந்து ஒரு பார்வ பாத்துட்டு அங்க வேல பாக்குற வேலக்காரப் பையனையும் ஒரு பார்வ பாத்துட்டு வேலயில மும் மரமானான் மஜீத்து. தீவாளிக்கு மொத நாளுங்கறதால தக்க வேண்டிய துணி எல்லாம் நெறய குமிஞ்சி கிடந்துச்சு. அந்தப்பையன மஜீத்து பாத்தது டீ வாங்கிட்டு வரத்தான்னு அந்தப் பையனுக்கும் தெரியும். அவனும் ஒரு தூக்குச் சட்டிய தூக்கிட்டுக் கிளம்பிட்டான்.
டீ வர்றவரைக்கும் அவன் எதுவும் பேசல, நானும் எதுவும் பேசாம மோட்டுவாயப் பார்த்துகிட்டு உக்காந்திருந்தேன். அந்த பையனு ம் வந்து டீய சின்ன லோட்டாவுல ஊத்திக் கொடுத்தான். ஒரு டீய நாலா ஊத்திக் கொடுக்குற வித்ததான் இந்தமாரி கடகள்ல வேலபாக்க மொதத் தகுதியே. இந்தப்பையனும் அதுல நல்லாவே தேறிட்டான்னு டீய பாத்ததுமே தெரிஞ்சிச்சு. சிரிச்சிக்கிட்டே டீயக் குடிச்சேன். ஆனா.. என் மனசுக்குள்ள ஓடுன கவலை ரேக மஜீத்துக்கு எப்பிடி தெரிஞ்சிச்சின்னு தெர் ல. " என்னடா ஒரு மாதிரியா இருக்க? எதும் பிரச்சனையா?" ன்னு கரெக்கெட்டா கேட்டான். "அதெல்லாம் ஒன்னுமில்லைடா"ன்னு சொல்லி மழு ப்பப் பாத்தேன்.
தச்சிகிட்டு இருந்த துணியெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு எங்கிட்ட வந்து உக்காந்தான். "சும்மா மழுப்பாத, எதயோ நெனச்சு மருகிக்கிட்டு இருக்க நீ, எங்கிட்டே சொல்றதுக்கு என்ன?" ன்னு கேட்டுகிட்டே தோளுமேல கைய வச்சான். அதுக்குமேல என்னால சொல்லாம இருக்க முடியல " என்னடா சொல்றது? உன் மூத்த மருமகளுக்கு நாளக்குப் போட்டுக்க பட்டுப்பாவாட சட்ட வேனுமாண்டா, நான் எங்கடா போவேன்?" ன்னு சொல்லும்போதே ஒடஞ்சிட்டேன்.தோள்ல இருந்து கைய எடுத்தவன்..கொஞ்ச நேரம் அப்டியே அமதியா இருந்தான். அப்பறம் என்னப் பாத்து " சரி.. நீ கல்லுக்கட்டிக்கு போயி தங்கச்சி க்கு, மத்த ரெண்டு மருமகளுகளுக்கும், மருமவனுக்கு வாங்க வேண்டியத வாங்கிட்டு வா, மூத்த மருமகளுக்கு ஒன்னும் வாங்க வேணாம், மொதல்ல நீ கல்லுக்கட்டி கெளம்பு" ன்னு சொன்னான்.
நானும் அப்ப எதுவுமே பேசத் தோணாம கெளம்பிட்டேன். காரக்குடி கல்லுக்கட்டி சந்தப்பேட்டல இருந்து சைக்கிள அழுத்தி மிதிச்சா அஞ்சு நிமிசத்துல வந் தர்லாம். கல்லுக்கட்டி ரோட்ல உள்ள பெரிய பெரிய கடைகங்ல வாயப் பொளந்து பாத்துக் கிட்டே அதுக்கு எதுத்தாப்ள கூவி வித்த துணிகள பணத்த எண்ணி எண்ணிப் பார்த்துகிட்டு ஒருவழியா எல்லாருக்கும் வாங்கி முடிச்சேன். திரும்பவும் மஜீத்து கடெக்கு சைக்கில மிதிச்சேன்.
எனக்கு வீட்டுக்கு போறதுக்கும் மனசே இல்லை. உள்ள போகும்போதே பெரியவ கால வந்து கட்டிக்கிட்டு கேப்பா " அப்பா, பட்டு பாவாட சட்ட வாங்கிட்டு வந்தியான்னு? " நல்ல வேள.. சின்னம் ரெண்டுக்கும் இன்னும் வெவரம் தெ ரியல, உலகத்துலே ரொம்பக் கொடுமையான விசயம் தன் கொழந்த ஆசப்பட்டு கேட்டத வறுமைய காரணம் காட்டி வாங்கி தர முடியாத அப்பனுங்க நெலமைதான். ஏதோ நான் செஞ்ச பாவம், எனக்கும் அந்த நெலம வந்துருச்சு! என் சைக்கிளும் மஜீத்து கடெகிட்டப் போய்த் தன்னால நின்னுச்சு.
எனக்கு வீட்டுக்கு போறதுக்கும் மனசே
நானும் சைக்கிள விட்டு எறங்காம கால ஊண்னபடியே நின்னேன்.
"என்னடா எல்லாம் வாங்கிட்டியா?" உள்ள இருந்து மஜீத்துதான் கேட்டபடிக்கு வந்தான். " ம்ம்.. ஆச்சுடா"ன்னு சொரத்தே இல்லாம சொ
கடப்பையன் கையில ஒரு தினத்தந்தி பேப்பர்ல சுருட்டின
அதப் பாத்ததுமே எனக்கு எதுவுமே
எனக்கு அதுக்கு பொறவு என்ன பேசுறதுன்னே தெரியல. அவன் கொரல் மட்டும் கடைக்கு உள்ள இருந்து கடவுள் பேசுற மாதிரி வந்துச்சு, " டேய்.. தங்கசிகிட்ட சொல்லி நாளைக்கு கறிய நல்லா உப்புக்கறி போட்டு வையி, மத்தியானம் வர்றேன்"ன்னு சொன்னான். அப்பத்தான் எனக்கு மண்டைல ஒறச்சிச்சு, இந்தப் பட்டுப்பாவாட கவலைல அவன தீவாளிக்கு வீட்டுக்குக் கூப்புட மறந்துட்டேன்னு! பதிலுக்கு நானும் " அதெல்லாம் வறுத்து வைக்கலாம், நீ மறக்காம தங்கச்சி பாத்திமா குழந்தைங்களையும் கூட்டிகிட்டு நேரத்தோட வந்துசேருன்னு" சொல்லிகிட்டே சைக்கிள எனம்புரியாத சந்தோசத்தோட மிதிக்க ஆரம்பிச்சேன்.
2011
தோளு ரெண்டையும் புடிச்சு யாரோ உலுக்குற மாதிரி இருந்துச்சு! திடுக்குன்னு முழிச்சேன். சாந்தாதான் நின்னா. " ஏங்க..இப்படியே சாஞ்சு உக்காந்தா ஆயிப்போச்சா..போங்க போயி மூஞ்சியக் கழுவிகிட்டு வாங்க, இப்ப கெளம்புனாத்தான் எடுக்குறதுக்குள்ள போலாம்" ன்னு அவசரப்படுத்தினா. அதுவும் சரிதான்ன்னு சொல்லி, கெளம்பி வீட்டப் பூட்டும் போதுதான் ஞாபகம் வந்துச்சு.
வேகமா வீட்டுக்குள்ள ஓடுனேன்... என் பழைய பொட்டி ஒன்னைத் தொலாவி அதுக்குள்ள அதப் பாத்ததும்தான் எனக்கு உசுரே வந்துச்சு. அது.. அன்னக்கு மூத்த மகளுக்கு அவன் தச்சு கொடுத்த பட்டுப்பாவாட சட்ட. அத அப்பிடியே கைல எடுத்து பத்திரப்படுத்திகிட்டு
எக்செல் வண்டிய எப்பிடி ஓட்டிகிட்டுப் போனேன்னு எனக்கே தெரியல. ஆனாலும் அநிச்சையா அவன் வீட்டுக்கிட்ட போய்த்தான் நின்னேன். வாசலுக்கு வெளிய அங்கங்க கூட்டங் கூட்டமா நின்னு பேசிகிட்டு இருந்தாங்க. என்ன அங்க பார்த்ததும் பழக்கமானவங்க தலைய அசச்சாங்க. எனக்கு யாரயும் பாக்கத் தோணல.நேர வீட்டுக்குள்ளதான் போனேன், அங்க மஜீத்து அமதியாப் படுத்திருந்தா ன்.தலமாட்டுல பாத்திமாவும் அப்துல்லாவும்! அவனுக்கும் மூணு மக.இன்னும் யாரும் வரல. எங்களப்பாத்ததும் பாத்திமா "அண்ணேணே.... அண்ண்ணி... னு கதறலோட கத்திகிட்டே ஓடியாந்து சாந்தாவ கட்டிக்கிட்டு அழுதுச்சு!
எனக்குதான் அதப் பாத்து தாங்குற சக்தி இல்ல. மஜீத்த அப்பிடி பாக்கவும் புடிக்கல. இருந்தாலும் அவங்கிட்ட போனேன்.. எங் கைல இருந்த பட்டு பாவாடைய அவன் மேல போட்டேன். "இன்னக்கு எம் புள்ளைங்க வளந்து சம்பாதிச்சு நெனச்சத வாங்கி போடலாம்டா... ஆனா அன்னக்கு நீ தச்சுக் கொடுத்த இந்தப் பட்டுத்துணிக்கு ஈடாகுமாடா எதுவும்? நீ இல்லாம நான் உன்ன நெனச்சுப்பாக்க எனக்கு நீ நெறய பண்ணிருக்கடா.. ஆனா நீ என்ன நெனைச்சுக்க நான் உங்கிட்ட வாங்கிகிட்டதத் தவுர வேற எதுவுமே பண்ணலடா உனக்கு! நம்ம நட்போட அடயாளமா இந்தப் பட்டுத்துணிய நீயே கொண்டுபோன்னு" அவன் மேல போர்த்திட்டு மெதுவா வெளில வந்து ஒரு மூலை பார்த்து உக்காந்துட்டேன்.
நேரம் போய்கிட்டே இருந்துச்சு, சொந்தகாரங்க ஒதவியோட நடக்க வேண்டிய காரியமெல்லாம் மளமளன்னு நடந்துச்சு. அவனோட மகளுகளும் அழுகையோட என்னத் தாண்டி வீட்டுக்குள்ள போனதப் பாத்தேன். பாத்திமாவோட கதறலோட மஜீத்து எங்ககிட்ட இருந்து போய்ட்டான்.
நான் எங்கயும் போகல. அவன குழிக்குள்ள இறக்குரத பார்க்குற சக்தியெல்லாம் எனக்கு இல்ல. அதனால அங்கயே இருந்தேன். காரியமெல்லாம் முடிஞ்சதும் கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமா கொறையத் தொடங்கிச்சு. நான் சாந்தாவப் பார்த்தேன். அவளும் நான் பாத்ததன் அத்தம் தெரிஞ்சிகிட்டு கிளம்பினா."அண் ணே..கொஞ்சம் நில்லுங்கண்ணே.." பாத்திமாதான் கூப்ட்டது. "என்னம்மா?" என்றேன் .
நான் எங்கயும் போகல. அவன குழிக்குள்ள இறக்குரத பார்க்குற சக்தியெல்லாம் எனக்கு இல்ல. அதனால அங்கயே இருந்தேன். காரியமெல்லாம் முடிஞ்சதும் கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமா கொறையத் தொடங்கிச்சு. நான் சாந்தாவப் பார்த்தேன். அவளும் நான் பாத்ததன் அத்தம் தெரிஞ்சிகிட்டு கிளம்பினா."அண்
எதுவும் சொல்லாம வீட்டுக்குள்ள போய் கைல ஒரு பொட்டலத்தோட வந்து அத என் கைல திணிச்சது. "என்னம்மா இது? என்றேன். "மீனாவுட்டு புள்ளைக்கு மட்டும் இன்னும் இவரு கையாள எதுவுமே தச்சுப் போடலைன்னு சொல்லிகிட்டே இருந் தாருண்ணே, இந்தத் தீவாளிக்கு வீட்டுக்கு வரும்போது மீனாவுட்டுப் புள்ளை க்கு கொடுக்கணும்னு அவரே உக்காந்து தச்சதுண்ணே இது!
இத கொடுக்குறதுக்கு முன்னாடியே அவசரப்பட்டு போயிட்டாரு! இத பேத்திகிட்ட நீங்களே கொடுத்துருங்கண்ணே"ன்னு சொல்லிட்டு அடக்க முடியாமல் அழுதுச்சு. நானும்தான், அத கைல வாங்கிகிட்டு அவ்வளவு நேரம் அடக்கிவச்சத அழுது தீர்த்தேன். வீட்ட விட்டு கெளம்பி வரும்போது திரும்பி பாத்தேன். அவன் தச்ச தையல் மிசின் மட்டும் இனி எனக்கு யார் துணைங்ற மாதிரி தனியா இருந்துச்சு. கிட்டத்தட்ட என்னப்போலவே!
இத கொடுக்குறதுக்கு முன்னாடியே
குறிப்பு - ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்புதான் இந்தக்கதை. இணைய உலகத்தை தாண்டி வெளியே பார்த்தால் இப்பிடி உறவுகளையும் மீறிய மதங்களையும் கடந்த உன்னதமான நட்புகளை நம் முகங்களுக்கு எதிரே காணமுடியும் . ஆனால் இணையம் என்னும் முகமூடி போட்டுக்கொண்டு இங்கு நடக்கும் உன் மதமா என் மதமான்னு நடக்கும் விவாதங்களை பார்த்தால் சின்ன புன்னகையோடு கடந்து விடுகிறேன். இந்த நட்பின் கதை எனக்கு தெரியும் என்பதால். மனித மனங்களை நேசிக்காத எந்த மனிதனையும் மதத்தின் பெயரால் எந்தக்கடவுளும் விரும்புவதில்லை.
No comments:
Post a Comment