Tuesday, 26 February 2013

சமச்சீர் கல்வி பற்றி ரஜினி கமல் பேச்சு!சமச்சீர் கல்விய அமல்படுத்தும் பிரச்சனைதான் இப்ப நாட்ல ஹாட் டாபிக்... அது நல்லதோ கெட்டதோ..ஆனா பிள்ளைகள் சும்மா..சும்மா பள்ளிக்கு போயிட்டு வர்ரத எந்த பெற்றோரும் விரும்பமாட்டாங்க! நான் உட்பட.. குழந்தைகளின் எதிர்காலம் ஆளும் அரசின் ஈகோவால் பலியாவதும்.. எங்க குழந்தைகளை வைத்து எதிர்கட்சி... இல்லை..இல்லை... மூணாவது இடத்துல உள்ள ஒரு கட்சி அரசியல் பண்றதையும் யாராலும் சகித்துக்கொள்ள முடியாது! விரைவில் நல்ல முடிவு வரட்டும்!

சரி விடுங்க... இப்ப அது இல்லை மேட்டர்..தமிழ்நாட்ல சின்ன தூசி விழுந்தாகூட பதறியடிச்சி துடிக்கிற நம்ம ஹீரோக்கள் சமச்சீர் கல்விய பற்றி கூட்டம் போட்டு பேசுறாங்க... அந்த கூட்டத்துல நம்ம நடிகர்கள் எப்பிடி அம்மா மனசு நோகாம பேசுறாங்கன்னு  கொஞ்சம் பார்ப்போம்!


ரஜினி

என்னை வாழவைக்கும் தமிழ் மக்களை...அதாவது உங்களை.... ( இன்னுமா நம்புராய்ங்க )வாழவைக்கும் தைரிய லட்சுமி...வீர லட்சுமி... முதல்வர் அம்மா அவர்களே, புதிய பாடத்திட்டத்தில் ஐயா கலைஞர் ( ஐயோ..இதுக்கே கொல்லுவாங்களே?) அவர்களுடைய கவிதைதான் பிரச்னை என்றால் அதை எடுத்து விடுங்கள்.. கடந்த ஐந்து வருடமாய் எனக்கே மரண பயத்த காமிச்சாரு.. சின்ன புள்ளைங்க தாங்குமா? நல்லவேளை ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் என் குழந்தைகள் படித்து முடித்து விட்டார்கள்! இருந்தாலும் அடுத்து ரானா படாம் வரவிருப்பதால் என் இருப்பை காண்பிக்க இந்த பேச்சு  அவசியமாகிறது! இதையும் மீறி கலைஞர் கவிதையோட இந்த திட்டம் நிறைவேறினால் தமிழ்நாட்டு பிள்ளைகளை அந்த ஆண்டவனாலகூட காப்பாற்ற முடியாது! பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில்தான் உள்ளது தைரிய... ( வரிசையா ஒன்பதையும் போட்டுக்கங்க) லட்சுமி அவர்களே! ஜெயஹிந்த்!கமல்

சமச்சீர் கலவிய பத்தி ( யோவ்.. அது கல்வியா ) மன்னிக்கவும்....கல்விய பத்தி என்னை பேச சொன்னால் .. நீங்கள் கேட்டது தவறில்லை என்னும் பட்சத்தில் நான் பேசாமல் இருப்பது சரியென்று ஆகிவிடாது! ( சரியா பேசுரனா?), கடவுள் இல்லையென்று சொன்னாலும் கடவுளை பற்றியே நான் பேசுவதைப்போல..அந்த திட்டத்தில் குறைஎன்றாலும் கலைஞரின் கவிதை அதில் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே! வருங்கால சந்ததிகள் நாம் எவ்வளவு துன்பப்பட்டோம் என்பதை அறிய இதைவிட சிறந்த ஆவணம் உண்டென்று எனக்கு தோன்றவில்லை! கல்விங்கிறது நடிகை மாதிரி.. காசு இருந்து நடிச்சா யாரு வேணாலும் கட்டிபிடிக்கலாம்.. சமசீர்ங்கிறது பொண்டாட்டி மாதிரி சம்பந்தபட்டவங்கதான் முடிவெடுக்கணும்! இதற்காக இதை உடனே அமல்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை... அமல்படுத்தினால் நல்லாயிருக்கும் என்றுதான் சொல்லுகிறேன்!விஜய்காந்த்

எல்லோருக்கும் வணக்கம்... என்னடா இவன் கல்விய பத்தி பேசுறானே? இவனுக்கு என்ன தெரியும்னு கேப்பீங்க? ஆங்..நீங்க இப்படி கேப்பீங்கன்னுதான் நான் அன்னைக்கே என்னோட கோவில்காளை படத்துல " பள்ளிக்கூடம் போகலாமா?..அதுக்கு புத்தகத்த வாங்கலாமான்னு பாட்டு வச்சேன்! இந்த அதிமுக அரசை குறை சொல்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்... அதிமுக பொதுசெயலாலரின் அறிக்கைய ஃபுல்லா படிங்க... அதுல ஒரு குவார்ட்டர மட்டும் படிச்சிட்டு இங்க வந்து ஆஃப் ஆயில் கணக்கா வாந்தி எடுக்ககூடாது! அப்பிடி யாராவது  செஞ்சீங்க  ஃபிரிஜ்ல வச்ச பீர் மாதிரி கூலா இருக்க நான் ராவா அடிச்ச ரம் மாதிரி ஹாட்டா ஆயிருவேன் தெரிஞ்சிக்கங்க..ஆக்காங்... ( யோவ்.. எடத்த காலி பண்ணுயா...ஒரே டாஸ்மாக் வாடையா இருக்கு பேச்சுல?) 


விஜய்

ண்ணா... வணக்கங்ண்ணா... பெரிய ஆளுங்கெல்லாம் இருக்கீங்க.. நான் ஒரு அணில் மாதிரிங்ண்ணா.. எனக்கு சமச்சீரா எப்பிடி சோப்பு போடறதுன்னு  தெரியும்! இந்த கல்வியெல்லாம் பெரிய விசயங்ண்ணா.. எனக்கும்...அதுக்கும்........சம்பந்தம் இல்லைங்கண்ணா! ...ண்ணா... வாழ்க்கை ஒரு வட்டம்ங்ண்ணா..... இதுல மேல இருப்பவன் கீழ போவான்..கீழ இருப்பவன் மேல போவான்.. இந்த சைட்ல இருக்கவன்  அந்த  சைட்ல போவான்.. ( ஐயோ..அப்பா சொல்லிகொடுத்ததெல்லாம் மறந்து போச்சே?) பசங்களா... உங்களுக்கெல்லாம் இந்த பாடம் போதாதுடா.. வேற..வேற....வேற... வேறபாடம்தாண்டா சரியா வரும்!

 

அஜீத்

நான் பொதுவா எந்த மேடைலையும் பேஸ் மாட்டேன்.... ஏன்னா சில விழாக்களுக்கு மிரட்டித்தான் கூப்புடுவாங்க.. இங்க மிரட்டாம கூப்ட்டதால வந்து பேஸ்ரேன்... இப்ப பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு.. கிளாஸ் இருக்கு..புக் இருக்கு... ஆனா பாடம் மட்டும் இல்லை! அத்னால அம்மாவ குறை சொல்லல... ஐயா.... உங்களுக்கு சமச்சீர்னு ஒன்னு இருக்கு தெரியுமா?... தெரியுமா?... தெரியுமாய்யா? ஏன்னா நான் தனியாள் இல்லை... எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு ( ஐயோ.. இந்த நேரம் பார்த்து மன்றத்தைஎல்லாம் கலைச்சிட்டமே?)... அதுது.........


சிம்பு

எனக்கு பிடிக்கல... எனக்கு பிடிக்கல சார்.... எனக்கு பிடிக்கலைங்கிறத பிடிக்கலைனுதனே சொல்லமுடியும்? இதோ பாருங்க சார் எனக்கு மனசுல ஒன்னு வச்சு வெளில ஒன்னு பேச தெரியாது! எங்க அப்பா என்னை அப்பிடி வளர்க்கல.. இந்த திட்டம் எனக்கு பிடிக்கல சார்...இதை நான் எங்க வேணாலும் சொல்லுவேன்.. அதுக்காக பிடிக்கலைங்கிற வார்த்தைய நயன்தாராகிட்ட சொல்லமுடியாது! கல்விங்கிறது காதல் மாதிரிதான் சார்.. அது அப்பிடியே அடிமனசுல பூக்கணும்... திணிக்கக்கூடாது.. ஆன்னா.....பூத்துருச்சுன்னு வச்சிக்கங்களே?.. சமச்சீராவது..சம்சாரச்சீராவது? தூக்கிபோட்டு போய்கிட்டே இருக்கனும்சார்... என்ன்ன....லைஃப் சார் இது?


எஸ்.ஜே.சூர்யா

இப்ப ...இவங்கதான் கலைஞர் ஐயா.... இந்த பக்கம் அம்மா... நடுவுல மக்கள்... ஐயாவும் அம்மாவும் போடற சண்டைல வழக்கம்போல... மக்கள்தான் முட்டாளாக போறாங்க... ஆனா....அது...எப்பிடி முட்டாளா ஆகுராங்கன்னுதான் இப்ப பார்க்கபோறோம்! இப்ப.. சமச்சீர் கல்வி இருந்துச்சா? ஆனா...இப்ப இல்லை... புரியலையா? திரும்பவும் சொல்றேன்... சமச்சீர் கல்வி இருந்தமாதிரி இருந்துச்சா?.. ஆனா இப்ப இல்லை... எப்பிடி? இன்னும் புரியலையா? இப்ப... இல்லாத மாதிரி இருக்க சமச்சீர் கல்வி முன்னாடி இருந்த மாதிரி இருந்துச்சு... ஆனா இப்ப இல்லை... ( யோவ்..ஒழுங்கா மேடைய விட்டு இறங்கு... இல்லைனா இப்ப இருக்க மாதிரி தெரியுற நீ அப்பறம் இல்லாம போயிருவ!)


லாஸ்ட்...பட் நாட் லீஸ்ட்....டி.ராஜேந்தர்

சார்ர்...நான் ஒரு தமிழன் சார்ர்...( யாரு கேட்டா இப்ப?) ஐயா கொண்டுவந்தாரு இந்த திட்டம்..அதுக்கு அம்மா போட்டாங்க பாரு மட்டம்! அதுக்கு ஐயா போட்டாரு கேசு... அத அம்மா ஆக்க நெனச்சாங்க பீசு... இதுக்கு கோர்ட்டு சொன்ன தீர்ப்புதான் மாஸு... உங்க எல்லோருக்குமே மக்கள்தாண்டா பாஸு.. ஏ..டண்டணக்கா...ஏ..டணக்குணக்கா.... இதுக்கு சிம்பு சொன்னான் பாரு கருத்து... அத கல்வெட்டில் வைக்கணும் சார் பொறிச்சு... சன்..ஜெயா..கலைஞர், விஜய் எல்லா டிவியும் டூப்பு...குறள் டிவி மட்டும்தான் சார் டாப்பு! ( அது நம்மள நோக்கி வருது... எல்லோரும் ஓடுங்க...ஓடுங்க..... ங்கொய்யால.மனுஷனுக்கு உயிர் பயத்த காமிக்கிரானுகளே?) 


No comments:

Post a Comment