Thursday, 14 February 2013

ஓட்டு கேட்கும் பதிவர்கள்!


தேர்தல் வரப்போகுது... தலைவர்கள் ஓட்டு வேட்டையாடவும் மக்கள் நோட்டு வேட்டையாடவும் தயாராக உள்ளனர்! சினிமா விமர்சனங்கள் மூலம் சினிமா துறையை தன்பக்கம் திரும்ப வைத்த வலையுலகம்.. சமீபத்திய மீனவர் பிரச்சனையில் அரசாங்கத்தையும் கட்சிகளையும் தன்பக்கமாக திருப்பியுள்ளது! இதனால் அனைத்து கட்சிகளும் ஒரு அவசர கூட்டத்தைப்போட்டு நம் பதிவர்களையும் அவர்களின் வலையில் போட்டி போட்டு வீழ்த்தி வருகிறது! முதல் கட்டமாக சில முக்கிய  பதிவர்களையும் வோட்டு கேட்க களத்தில் இறக்கியுள்ளது! இவர்களுக்கு கூட்ட்டத்தில் வோட்டு கேட்க்கும் பயிற்சி முகாம் ரகசியமாக நடந்து வருகிறது! அந்த ரகசிய கூட்டத்தில் நடப்பவற்றை ஒரு சிங்கிள் டீயும் பொறையும் வாங்கி கொடுத்து ஒரு பதிவரிடம் இருந்து தெரிந்துகொண்டோம்!  தகவல் கொடுக்கும் பதிவர் யாரென்று கண்டு பிடியுங்கள் பரிசை அள்ளுங்கள்! என்ன பரிசு என்று கடைசியில் சொல்லுகிறேன்!

என்னதான் ஆளும்கட்சியைப்பற்றி ஜோக் எழுதினாலும் காங்கிரஸ் கால்ல குப்புற விழுந்து கூப்ட மாதிரி சிபியையும் ஆளும்கட்சியே அள்ளிச்சென்றது! இதற்க்கு கைமாறாக கனிமொழி கையொப்பம் இட்ட புத்தகம் இவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாம்! (நம்புங்க!)

இனி பயிற்சி முகாமில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்......

பயிற்சி அளிப்பவர் முதலில் ஒரு வீடியோவை ஓட விட்டு....... "சிபி இந்த வீடியோவ நல்லா பாருங்க... மகளிர் சுய உதவிக்குழுவுக்கு துணை முதல்வர் கடன் கொடுக்கும் விழா.. அவர் பேச்சை குறிப்பெடுங்க..
(வீடியோ முடிந்ததும்...)


"என்ன சிபி குறிப்பெடுத்திங்களா?"

"நல்லா எடுத்தேன் சார்...கேளுங்க.. நிதி வாங்கும் கூட்டத்தில் பாதிக்குமேல் ஆண்டீஸ்... மீதில பத்துக்குமேல மொக்க ஃபிகரு.. பின்னாடி நின்னதுல மூனாவதா நின்னது கொஞ்சம் நல்ல ஃபிகரா இருந்தது..அது மட்டும்தான் தேறும்.....

"யோவ்...உன்ன வோட்டு வாங்க குறிப்பெடுக்க சொன்னா வேட்டு வைக்க குறிப்பெடுக்கிற? சரி..அதவிடு.. கலைஞர் காப்பீட்டு திட்டம் பற்றி ஏதாவது தெரியுமா?

"என்னது?...கலைஞர்.....காப்பர்டீ திட்டமா?...இது எப்ப ஆரம்பிச்சாரு....?

"ஆத்தீ.. மொத்தமா வேட்டு வைப்பான் போலயே?! நீ பாக்யாவுல வேலை செஞ்சேன்னு சொல்லும்போதே யோசிச்சிருக்கனும்யா.....அது காப்பீட்டு திட்டம்யா... சரி விடு இந்த செம்மொழி....

"ஆமாங்க.... செம்மொழியான தமிழ் மொழியில் இதுவரை உலகத்தரம் வாய்ந்த அஜால் குஜால் படம் வந்ததே இல்லை...

"யோவ்.. நிறுத்து..நிறுத்து நீ...... நாங்க தோத்தாலும் பரவாயில்லை நீ ஆணியே புடுங்க வேண்டாம் போயிக்க ராசா.......

"நான்தான் அப்பவே சொன்னனே சார்.. நான் ஒரு டம்மி பீசுன்னு..கேட்டீங்களா?..இப்ப குத்துதே கொடையுதேன்னா?


அதிமுக கழகத்திற்கு வோட்டு கேட்க நம்ம பன்னிகுட்டிய அமுக்கி தூக்கிட்டு போய் பயிற்சி முகாம்ல போட்டாங்க... அங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம்! அவரை வரவேற்க மூத்த தலைவர்கள் வாசலில் நின்றனர்!

" ஹேய்... ஓல்ட் மேன்ஸ் ஒன் ஸ்டெப் பேக் மேன்..... ஆல் யங் மகளிர் அனீஸ் கமான்யா.... ரெடி ஸ்டார்ட்.... ஸ்டார்ட் தி மியுசிக்...

" ஹலோ மிஸ்டர் ராம்... மெதுவா பேசுங்க அம்மா இருக்காங்க.. அப்பிடியே போய் கால்ல விழுந்து......

" ஹலோ மிஸ்டர் பிஞ்ச வாயா... என்னய்யா அம்மா இருக்காங்க சும்மா இருக்காங்கன்னு.. அவங்களுக்கு இங்க என்ன மேன் வேலை? வேணா அந்த அம்மாவ கால்ல விழுக சொல்லு மேன்....

" யோவ்..அவங்கதான் கட்சி தலைவி...

"ஹேய்.. ஸ்டாப்... அடடடடா.....நாட்ல இந்த கட்சி தலைவர்கள் தொல்லை   தாங்க முடியலடா சாமி.... பிக்பாக்கெட் அடிச்சவன்... கேப்மாரித்தனம் பண்ணினவன் எல்லாம் தலைவருங்கிறான்.....இந்த டகால்ட்டி வேலைதான் நமக்கிட்ட நடக்காது.. இப்ப என்ன மேன் வேணும்?

" நீங்க எங்களுக்காக வோட்டு கேட்க்கனும்.....அதுக்குதான்...

"டேய்...நிறுத்து... வோட்டு வாங்கி ஜெயிச்சு இந்த நாட்ட திருத்தப்போரியா?.. நீ வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இது தேவையா? ஏன் இந்த வெளம்பரம்? 

"யோவ்..இப்ப எங்களுக்கு வோட்டு கேட்க்கப்போறியா இல்லையா?

"அடங்.....கொன்னியா....ஆட்சி போனா தெரு மொனைல பிச்சை எடுக்கிற மொன்ன நாயி... பேச்சப்பாரு...எகத்தாளத்தப்பாரு... லொள்ளப்பாறு..  என்னை கொண்டு  போய்  வீட்ல விடலைனா இடுப்புல சேர்த்து மிதிசிபுடுவேன்...வடுவா ராஸ்கோல்...

" மிஸ்டர் ராம்..இப்பிடியெல்லாம் பேசுனா அப்பறம் உங்க தாய் யாருன்னே தெரியாம போயிரும்...

" செண்டிமெண்ட் லாக்.. மேட்டர் ஓவர்....டேய் தகப்பா இர்ரா உன்னைய மேல வந்து வச்சிகிறேன்....


நம்ம சிரிப்பு போலிச ஓசி சாப்பாடுன்னு ஏமாத்தி கூட்டிட்டு போயி கேப்டனோட பயிற்சி பாசறைல விட்டுட்டாங்க... அங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..... (மண்டப வாசலிலேயே....)

" இங்க எங்க பந்தி போடுவாங்க?

"யோவ்..இருயா..வந்ததுமா.. சரி...முதலில் நம்ம கேப்டன புகழ்ந்து ஏதாவது பேசு பார்ப்போம்?..

" அன்பார்ந்த மக்களே.. சிரிப்பு திலகம்.. சிந்தனை சிற்பி... சிங்கை கொண்டான்... பதிவுலக மாமேதை.....

"யோவ்..நிறுத்துயா... இதுல எங்கயா கேப்டன் வர்றாரு?

" வருவாருயா..கடைசில.. சரி.. சரி...முதல்ல டீ சொல்லு..அப்படியே ரெண்டு பண்ணும்... கொஞ்சம் நில்லுப்பா... அப்பிடியே ரெண்டு முறுக்கு.... தம்பி அப்பிடியே.....

" யோவ்... போதும்யா... ஸ்..ஸ்.. இப்பவே கண்ண கட்டுதே...கேப்டன் செஞ்ச ரெண்டு நல்ல விசயத்த சொல்லு...

" ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அன்னதானம் போடுவார்.. சாப்பாடு நல்லாயிருக்கும்!...தம்பி டீ இன்னும் வரல....

"அட வரும்யா... சரி இன்னொன்னு சொல்லு...

"அடுத்த பிறந்தநாளுக்கு திரும்பவும் அன்னதானம் போடுவார் சாப்பாடு அதே மாதிரி இருக்கும்! தம்பி முறுக்க மறந்துறாம.....

"ஐயோ கொல்றானே... கேப்டன் நடிச்ச படம் எது பார்த்திருக்கிங்க?

" அவரு படம் பார்த்திருந்தா நான் எப்பிடி உங்க முன்னாடி உயிரோட?! அப்பறம் அந்த தம்பிகிட்ட சொல்லி சூடா ரெண்டு பஜ்ஜி சொல்லிருங்க ...

"இவன எங்கையா புடிச்சிங்க?... கபாலீஸ்வர் கோவில் வாசல்ல இருந்தவன பதிவர்னு சொல்லிக்கிட்டு...த்தூ...

" யோவ்..வார்த்தைய அளந்து பேசு.. நான் ஒரு டேமேஜர் தெரியும்ல? சரி..சரி.. அந்த டீ வந்தா குடிச்சிட்டு நான்பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்....

"இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த சுடு தண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திருவேன் ஓடிப்போயிரு சொல்லிப்புட்டேன்!

இத பார்த்த காங்கிரசும் வேற வழியில்லாம நம்ம கோமாளி செல்வாவ கடத்திட்டு போயி பயிற்சி குடுக்க ஆரம்பிச்சாங்க...  அங்க என்ன நடக்குதுன்னு பாருங்க....


" பார்த்தா சின்ன பையனா தெரியுதே......... ?

" பார்த்தாதான் தெரியும் பார்க்காம எப்பிடி தெரியும்?

" தம்பி வந்ததுமேவா?.. சரி ..காங்கிரசின் கொள்கை என்னன்னு தெரியுமா?

" ஏன்? உங்களுக்கு தெரியாதா?

" முடியல.. சரி விடு.. அன்பு அன்னை சோனியாவின் பாதம் தொட்டு.. எங்க சொல்லு..

" கொஞ்சம் இருங்க சார் இந்தா வந்தர்றேன்.. (வேகமாக கிளம்புகிறான்..)

" தம்பி எங்க போறீங்க?

" பின்ன என்ன சார் என் ஃபிரண்டெல்லாம் என்னை நல்ல எமாத்தீட்டாங்க.. எங்கிட்ட ராகுலின் அன்னைதான் சோனியான்னு சொன்னாங்க.. ஆனா நீங்க யாரோ அன்புவின் அன்னைனு சொல்றீங்க... எது சார் உண்மை?

" தம்பி அன்புனா கருணை... எதுவும் சந்தேகம்னா உங்க பட்டாபட்டிகிட்ட கேட்டுக்க... சரி அத விடு.. தமிழகத்தின் விடிவெள்ளி தங்கபாலுவே... இத சொல்லு...

" போங்க சார்... ஹி..ஹி....என்னதான் வழுக்கையா இருந்தாலும் அவரு தலைய பார்த்து இப்பிடியா சொல்றது? என்னால முடியாது.....

"தம்பி...இத்தோட நிறுத்திக்குவோம்...கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லு.....(இடைமறித்து...)

"ஒன்னே ஒன்னு...போதுமா சார்...

" டேய்ய்ய்ய்........ அது இல்ல..சொல்லவிட்ரா...   இந்தியாவின்  இரும்பு  இதயம் ப. சிதம்பரமே.....எங்க சொல்லு...

" ஓஒ...இவருக்கு இரும்பு இதயமா? அதான் பக்கத்துல தமிழன கொல்லும்போதுகூட உருகலையா?

" ஐயோ...இவன் உண்மையெல்லாம் பேசுறானே? கொண்டு போய்  விட்ருங்கடா........


இனிமே எவனாவது ஓட்டு கேட்க பதிவர்கள கூப்புடுவான்.... இருந்தும்  என்னை கேட்டுக்கொண்டால் மருத்துவர் ஐயா.. தமிழ் குடிதாங்கி  தாங்கி கொண்டிருக்கும் பா.ம.க. வுக்கு வோட்டு கேட்க தயாராக  உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்! ஹி..ஹி...


No comments:

Post a Comment