Wednesday, 27 February 2013

காணாமல் போன வடிவேலு.... பொதிகையில் அறிவிப்பு!


முன்பெல்லாம் தூர்தர்சனில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடுவார்கள்! ( இப்போது தெரியவில்லை) அதே போல ஒரு அறிவிப்பை இப்போது செய்தால் என்னென்ன அறிவிப்புகள் யார் யாரை பற்றி வரும் என்று கொஞ்சம் பார்க்கலாம்!இப்பிடி மாறுவேசத்துல அலைய வச்சிட்டானுகளே? அவ்வவ்......

பெயர் வடிவேலு என்கிற வைகைப்புயல்..... நிறம் கருப்பா பயங்கரமா இருப்பார்.. உயரம்.. அளவுக்கு மீறி வளர்ந்திட்டதா அவரே நினைச்சிட்டார், ஆனால் வளரவில்லை.....முன்பு சிரிக்க வைத்தது தொழில் இப்போது அடுத்தவனுக்கு தெரியாமல் அழுவது! காணாமல் போன அன்று கருப்பு சிவப்பில் ஆடையும் கையில் மைக்கும் வைத்திருந்தார், அவர் கடைசியாக கலைஞர் ஐயா மீண்டும் முதல்வர் ஆவார் என்று பேசியதாக கேள்வி! ஆனால் இப்போது கேட்டால் மீண்டும்னு சொன்னேன் ஆனா எப்போன்னு சொன்னனா என்று சொல்லக்கூடும்.. இவரது அங்க அடையாளம் மூஞ்சியில் கரி பூசப்பட்டிருக்கும்.. கால்கள் தானாக ஆடிக்கொண்டிருக்கும்! இவரைப்பற்றிய தகவல் அறிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.. திரு.விஜயகாந்த், தண்ணிக்காரன் பேட்டை, டாஸ்மாக்புரம்.


இப்பிடி...சாஞ்சு பார்த்தாகூட எதிர்காலம் தெரியலையே?

பெயர் பா.விஜய்(வித்தக கவிஞர்).... மாநிறம்தான்.. (அது என்னடா மாநிறம்? பச்ச கலரா?)...சராசரிக்கு குறைவான உயரம்.. ஆனால் ஸ்டூல் போட்டு டூயட் பாடுவார்.... முதலில் பாட்டெழுதுவது தொழிலாக இருந்தது, பகுதிநேரமாக புத்தகம் எழுதி வெளியிடுவது, முழுநேர தொழிலாக கலைஞரை பாராட்டியது..... பொழுது போக்காக படங்களில் நடித்து கொலை முயற்சியில் வேறு இறங்கினார், அவர் கடைசியாக பேசிய வசனத்தை அவரே மறக்க நினைக்கிறார்.. அதனால விட்டுடுங்க..காணாமல் போன அன்று கையில் இளைஞன் பட டிக்கெட்டை வைத்துக்கொண்டு வடபழனி சிக்னலில் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்தார்(ஒருத்தனும் வாங்கல...)..இவரது அங்க அடையாளம் பவுடருக்குள் மூஞ்சியை மறைத்து வைத்திருப்பார், இவரை கண்டுபிடித்தால் தகவல் தர வேண்டிய முகவரி திரு.மார்ட்டின்( கொசுவர்த்தி இல்லை) லாட்டரிகாரன் பேட்டை, கைதியாபுரம்.


இந்த கலரு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

பெயர் ஜே.கே.ரித்திஸ் என்கிற வீரத்தளபதி..... நிறம்... மாறலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.... பணம் செலவழிப்பது இவரது தொழில்..பொழுதுப்போக்காக படங்களில் நடித்து மக்களை பயமுறுத்துவார்.. காணாமல் போன அன்று கருப்பு சிவப்பில் கறை போட்ட வேட்டியும் கழுத்தில் துண்டும் அணிந்திருந்தார்.. கடைசியாக பேசிய வார்த்தை எம்.பி. யாக பதவிப்பிரமாணம் எடுத்தது.. ஆனால் அதன்பிறகுதான் காணவில்லை, பக்கத்தில் ஏர்வாடி இருப்பதால் உறவினர்களின் சந்தேகம் வலுக்கிறது..... காணாமல் போன அன்று அழகிரியை வாழ்த்தி ஆயிரம் டிஜிட்டல் போர்டும் ஐநூறு பிரியாணிக்கும் ஆர்டர் கொடுத்தாராம்.. இவரது அங்க அடையாளம் மீசைக்கு மேலே மூக்கை ஒட்டவைத்திருப்பார்.. உதடுகளை மீசைக்குள் மறைத்து வைத்திருப்பார்... இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் தகவல் தர வேண்டிய முகவரி... திருவாளர்.தொகுதி மக்கள், ஏமாளிக்காரன் பேட்டை, கோவிந்தா புரம்.எங்க ஓடுனாலும் தொறத்துரானுகளே?

பெயர் கார்த்திக்... நிறம்... அப்பப்ப மாருவாறு.. முன்பு நடிப்பது தொழிலாக இருந்தது.. இப்போது நடிக்க தெரியாமல் நடிப்பது தொழிலாக உள்ளது! அவர் கடைசியாக என்ன ஏமாத்திட்டாங்க... என்ன ஏமாத்திட்டாங்க என்று புலம்பியதாக கேள்வி... காணாமல் போன அன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்று எம்.எல்.ஏ. சீட் தர்றேன் என் கட்ஷிக்கு வாங்க... வாங்க... என்று பயணிகளை தொந்தரவு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் பதிவாகி உள்ளது.. இவரது அங்க அடையாளங்கள்..நெத்தியில் பெரிதாக நாமம் இருக்கும்.. முதுகில் ஆங்காங்கே ஊமைக்குத்து காயங்கள் இருக்கும்! இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி.... அகில இந்திய நாடாளும் மக்கள் கட்ஷி அலுவலகம்... ( அய்யய்யோ.... அதுவும் பூட்டியிருக்கே...)நல்லா பாத்துக்கங்க... நானும் யூத்துதான்...ஆங்...

பெயர் கேப்டன் என்கிற விஜயகாந்த்... கலரா இருப்பாரு.. (கருப்பும் கலர்தானே?) முன்பு படம் பார்ப்பவர்களை மட்டும் பயமுறுத்துவது தொழிலாக இருந்தது... இப்போது இவர் நடித்த படம் என்று சொன்னாலே மக்களை பயமுறுத்தும் அளவு வளர்ந்துவிட்டார்.. இவர் கடைசியாக... இப்ப போறேன்... நெக்ஸ்ட் ஆறு மாசம் கழிச்சு மீட் பண்ணலாம்னு பேசியதாக கேள்வி... காணாமல் போன அன்று இவர் முதுகெலும்பு உடையும் வரை வளைந்து அம்மாவுக்கு வணக்கம் சொன்னதாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.. மேலும் மகனுக்கு கல்லூரியில் சீட் கிடைக்காத மன உளைச்சலில் இருந்ததாகவும் கேள்வி.. இவரது அங்க அடையாளங்கள்.. கோவத்தில் ஆடுவதற்கு தோதாக கன்னங்கள் இருக்கும்.. கழுத்து நெஞ்சுக்குள் புதைந்து தலை மட்டும் மேலே இருக்கும்.. தலையில் தட்டுவதற்கு தோதாக கைகளை மடக்கியே வைத்திருப்பார்.. இவரைப்பற்றிய தகவல் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி.. சட்ட சபை.. மகாராஜா புரம்.... கண்சிவந்தான் பேட்டை.


No comments:

Post a Comment