Tuesday, 26 February 2013

கலி முத்திடுத்துடா அம்பி!அதிகாலை ஏழு மணி...

என் வீட்டு  அலுவலக அறையில் நான் (அதாங்க பாலு) ..... சைலுவின் தொல்லையில் இருந்து விலக இப்படியெல்லாம் இருந்தால்தான் முடியும்! யாரு சைலுவா? அதாங்க...நான் ஊரையே கூட்டி வச்சு..வீட்டுக்கு கூட்டி வந்த தொல்லை...இப்ப புரிஞ்சிருக்குமே? அப்ப..நீங்க நம்ம ஆளுதான்... சரி விடுங்க.. அந்த தொல்லையப்பத்தி ஏன் இப்ப பேசிகிட்டு.. கொஞ்ச நாளா ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு பழக்கமாயிருச்சு...பேரு நிலாவாம்..பாருங்க பேர சொல்லும்போதே எவ்வளவு குளிர்ச்சியா இருக்கு? ஆரம்பத்துல வெறும் சாட்டிங் அளவுக்கு இருந்தது..இப்ப வாய்ஸ் சாட்டிங் அளவுக்கு வந்துருச்சு... தமிழ் பொண்ணுதான்! காலைல ஏழு டு எட்டு அவ அப்பன் இருக்க மாட்டானாம்...அதான் ஆபிஸ் வேலைன்னு சொல்லி சாத்தான் சைலுகிட்ட இருந்து தப்பிச்சு இங்க வந்துருவேன்.... சரி..கொஞ்சம் இருங்க..நிலாதான் பிங்க் பண்றா....பேசிட்டு வரேன்....என் பேரு பாலுங்கிரத சொல்லிராதிங்க...அவளுக்கு நான் சுகு...

ஹாய்டா சுகு செல்லம்... ப்ரீயா  இருக்கியா? கால் பண்ணவா?


ஹாய் நிலா டார்லிங்..உன்கிட்ட பேசுறத விட எனக்கு என்ன வேலை? இரு நானே கால் பண்றேன்...

டின்..டின்......

ஹாய் ஸ்வீட்டி... என்னடா? இன்னிக்கு நீயே பிங்க் பண்ணிட்ட? என்மேல அவ்வளவு லவ்வா?

ஆமாண்டா சுகு ..எனக்கே புரியல... தப்பா இருந்தாலும் பட் ஸ்டில் ஐ நீட் யூடா........

ஹேய்..காலைலே ஏன்?.டோன்ட் பீல்.....ஐம் ஆல்வேஸ் பார் யூமா... பை த வே... உன் அப்பா வெளில போயாச்சா? ஆர் யூ அலோன் நவ்?


ஆமாண்டா...அவரு ஏழு மணிக்கெல்லாம் போயிருவாரு... ஐ பீல் வெரி லோன்லி யூ நோ? பட் நவ் நாட் பீல் லைக் தட்... யூ ஆர் இன் மை ஹார்ட்.... ஃபுல் ஃஆப் யூ ஒன்லி மை டார்லிங்...

தேங்க் காட்.... லவ் யூடா நிலா .. நாம எப்படா நேர்ல பார்க்க போறோம்? ஐ வான்ட் டூ சீ யூடா.....

இன்னும் கொஞ்ச நாள்..ப்ளீஸ்.. ஐ வான்ட் டூ சீ யூ ஆல்சோ.. பட் ரைட் நவ் நாட்... பட் ஐ ஹேவ் எ ஒன் ப்ளான்...


வாட் ப்ளான் டார்லிங்?.. டெல் மீ... எனிதிங்...ஐ கேன் டூ பார் யூ செல்லம்...

ஓக்கேடா...லெட் மீ எக்ஸ்ப்ளைன்... அடுத்தவாரம் மூணு நாள் என் ஆபிஸ் கொளிக்ஸ்சோட டூர்னு அப்பாகிட்ட சொல்லிட்டு நான் வர்றேன்... மூணு நாள் பூரா உன்னோடுதான்... யூ ச்சூஸ் த பிளேஸ்... அதே போல் நீ ஏதாவது சொல்லிட்டு வந்துரு..ஹவ் இஸ் மை ப்ளான்?


நிலா... வாவ்... வாட் எ கிரேட் ப்ளான்மா? நோ ப்ராப்ளம்..ஐ கேன் சே சேம் ரீசன்... சோ..நெக்ஸ்ட் வீக் ஃப்ரைடே வீ வில் கோயிங் டூ ஊட்டி.. பார் யூ ஓக்கே டார்லிங்?

ஓக்கேடா... அதர் டீடைல்ஸ்... வீ வில் டால்க் டுமாரோ... ஐம் கெட்டிங் லெட்.. எட்டு மணி ஆகபோகுது அப்பா  வந்துருவாரு... மெய்ட் சமைச்சாலும் நான்தான் எடுத்து வைக்கணும்... சீ யூடா... லவ் யூடா...

ஓக்கே..செல்லம்... ஐம் கெட்டிங் லெட் ஆல்சோ... ஐ வில் டால்க் டூ யூ டுமாரோ...ம்ம்மா......

என்னங்க....இவ்வளவு நேரம் ஒட்டு கேட்டீங்களா? சரி..சரி..உங்கள்ட்ட பேச நேரம் இல்லை..குளிச்சிட்டு டைனிங் டேபிள் போறேன்..அங்க சைலு கொலைவெறியோட இருப்பா..என்னமோ  அவ சமைச்ச மாதிரி? வேலைக்காரி சமைக்கிறத எடுத்து வைக்கிறதுக்கு அவளுக்கு இந்த பாடு?

என்னங்க....( அவதான் கூப்ட்ரா....ஜூட்...)

ஏங்க..குளிச்சிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா? நானும் ஆபிஸ் போக வேண்டாமா?

சாரிடா சைலு..( இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை).. சரி வை.. வா..நீயும் சாப்டு....

சைலு....

ம்ம்...

என்னைப்பாரேன்...

ம்ம்..சொல்லுங்க..

சைலு...நெக்ஸ்ட் வீக் ஃப்ரைடே ஆபிஸ்ல ஒரு சின்ன அபிசியல்  டூர் இருக்கு.. குன்னூர் வரையும்தான்..மூனே நாள்தான்..போயிட்டு வந்துறவா? ப்ளீஸ்மா.....

ஓ...நானும் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்...

என்னம்மா? சொல்லுடா....

நெக்ஸ்ட் வீக் ஃப்ரைடே எங்க ஆபிஸ் கொளிக்ஸ்சோட ஊட்டி டூர் போறோம்... போகட்டுமா? மூனே நாள்தான்... போகட்டுமாங்க? ப்ளீஸ்...

படக்கென இரண்டு பேருக்குள்ளும் மின்னல் வெட்டியது....

நீ..நீ...நீ....நீ.......நிலா.....?

நீ..ங்...ங்....ங்......க......சுகு?

வீட்ல உள்ளவங்களோட முகம் கொடுத்து பேசாம...இணையத்துல  மூஞ்சியே  தெரியாதவங்கள்ட்ட பேசுனா இதாங்க கதி! (ங்கொய்யால...... நாங்களும் மெசேஜ் சொல்லுவோம்ல....) 
  

No comments:

Post a Comment