Saturday, 23 February 2013

கருணாநிதியின் பிரச்சாரம் எப்பிடி இருந்தது?ஒருவழியாக தேர்தல் முடிந்துவிட்டது! ஏதோ இந்தமுறை தேர்தல் ஆணையத்தின் தயவால் மக்கள் அதிக சிரமங்களை சந்திக்கவில்லை! ஆனாலும் ஆணையத்தின் மீது மக்கள் கோபமாக இருப்பதாக கேள்வி! பின்ன... திருமங்கலத்த எதிர்பார்த்தவங்களுக்கு திருநாமம்  போட்டுட்டாங்களே?  அதையும் மீறி பல இடங்களில் பாதாளம் வரை பாய்ந்ததாக கேள்வி! பரவாயில்லை...  இனி தேர்தல் முடிவுகள் வந்து   எம்எல்ஏ பதவி ஏற்றவுடனேயே மக்கள் தங்கள் பிராத்தனைகளை தொடங்கி விடுவார்கள்! என்ன பிராத்தனையா?... எம்.எல்.ஏ சீக்கிரம் சாகனும்னுதான்! அப்பதானே இடைத்தேர்தல் வரும்.. பார்ப்போம் எந்த தொகுதிக்கு முதலில் அதிர்ஷ்டம் அடிக்குதுன்னு?...
சரி அத விடுங்க... நம்ம தலைவர்களோட பிரச்சாரம் எப்பிடி இருந்ததுன்னு ஒரு ரவுண்டு வந்து பார்ப்போம்! கோடை வெப்பத்தைவிட தலைவர்களின் பிரச்சார வெப்பம் கடுமையாக இருந்தது! காட்டதுக்கும் காமெடிக்கும் பஞ்சமே இல்லாமல் நம் பொழுது போக்கிகளின் பொழுதுகளை பார்ப்போம்!
முதல்வர் கருணாநிதி

ஒரு காலத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கி.... ஆனால் இந்த தேர்தலில் பொட்டுவெடியாக கூட வெடிக்கவில்லை! போன இடமெல்லாம் ராக்கெட் லாஞ்சர் அளவுக்கு சீறி பாய்வார் என்று எதிர்பார்த்த இவர் தீபாவளி ராக்கெட் அளவு கூட போகவில்லை! பத்தாதற்கு போன இடமெல்லாம் நோ..நோ...மீ பாவம் ரேஞ்சுக்கு கழக கண்மணிகள் கண்களின் கண்ணீரை வரவைத்தார்! ஒரு வேளை வைகோ இல்லாத குறையை தீர்த்தார் போல? சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார் சரி... ஆனால் அதில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை! பாவம் அவரு என்ன பண்ணுவாரு? முடிஞ்சா சொல்ல மாட்டாரா? எது எப்படி இருந்தாலும் இவர் அரசியலில் சாணக்கியரா இல்ல சாண போன பெரியவரான்னு அடுத்தமாதம் தெரியும்!
ஜெயலலிதா

எம்.ஜி.ஆர். க்கு பிறகு அதிமுகவை தாங்கும் தூண் இவர்.. ஆனால் கட்டிடத்தில் தூண் ஒரு பகுதிதான் என்பதை மறந்துவிட்டு கட்டிடமே தான்தான் என்று நினைக்கும் ஜான்சி ராணி! இடைத்தேர்தல்வரை எல்லாமே போங்கு ஆட்டம் என்று வீட்டில் இருந்தவர் ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்ததும் தமிழகத்தை காக்க புறப்பட்ட தங்கத்தலைவி! கூட்டணி கட்சிகளுடன்  நடத்திய சீட் பேரமாகட்டும்... தொகுதி  ஒதுக்கீடு  ஆகட்டும்.. அம்மா ஆடிய அதிரி புதிரி ஆட்டத்தில் காமெடிக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை!  வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வெச்சமாதிரி.. விஜயகாந்த சேக்கவும் மனசில்லாம.. அத்துவிடவும் மனசில்லாம பிரச்சாரங்களில் ஜெயா அவரு பேர சொல்லவே கூச்சபடுவது தனி காமெடி! கலைஞரை வறுத்தெடுத்து போரடிக்கும் நேரங்களின் சில சமயம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதையும் கூறுகிறார்! பார்ப்போம்... இவர் ஜான்சி ராணியா இல்ல சான்சே இல்லாத ராணியா என்று அடுத்தமாதம் தெரிந்துவிடும்!
விஜயகாந்த் 

பாலுமேகேந்த்ராவின் அவார்ட் படம் மாதிரி போய்கிட்டு இருந்த தேர்தல் களத்தை பேரரசுவின் மசாலா படம் ரேஞ்சுக்கு எகிரவைத்தவர்! ஆண்டவனுடன் கூட்டணி என்று சொன்னவர்..எந்த  ஆண்டவனை அம்மாவிடம் பார்த்தாரோ தெரியவில்லை?.. ரேட்டணி ஒத்து வந்ததால் கூட்டனிய போட்டு முன் சீட்டில் இடம்பிடித்தவர்! அதே வேகத்தில் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. ஆனால் பெட்ரோல் போட வேண்டிய காரில் சீமெண்ணெய் போட்டால் என்னாகுமோ.. அதுதான் நடந்தது இவர் விசயத்தில்! இவர் தலையை கூட காட்டாத தொலைக்காட்சிகளுக்கு எல்லாம் தலைப்பு செய்தி ஆகிப்போனார்! ஒருவேளை பயிற்சி போதவில்லையோ?.. ஆனாலும் அசராமல் இவர் ஆளும்கட்சியை வறுத்ததும்.. மற்ற தலைவர்களை விட அதிகநேர உழைப்பும்.. மறுப்பதற்கில்லை! ம்ம்..பார்ப்போம் இவர் வேட்பாளர்கள் மகாராஜா ஆகுராங்களா இல்ல மக்குராஜா ஆகுராங்கலான்னு..!
வடிவேலு

இந்த கைப்பிள்ளையை களம் இறக்கும்போது அவர்களே நினைக்கவில்லை இப்படி இவர் கட்டதுரையாக மாறுவார் என்று?.. சொந்த பகையை தீர்ப்பதர்க்க்கு களம் இறங்கியவரை அவர்களது திட்டங்களை பேச வைத்தது ஆளும்கட்சியின் ராஜதந்திரம்! ராஜதந்திரங்களை அப்பிடியே கரைத்து குடித்திருக்கிறார் அழகிரி! தனது வார்த்தை அம்புகளால் விஜயகாந்தை டரியல் ஆக்கி அவருக்கு இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி ஆகிப்போனார்! ஆனால் மறந்தும்கூட ஜெயாவை பற்றி எதுவும் பேசாதது அவருக்கு உள்ளே இருக்கும் கைப்புள்ளையை அவ்வப்போது வெளிச்சம்போட்டு காட்டியது! நானும் ரவுடிதான்னு தில்லா இறங்கி பில்டிங் ஸ்ட்ராங்ன்னு காமித்தாலும்  அவரது  பேஸ்மென்ட்  வீக்னெஸ்  தெரிந்தவர்கள் சிரிப்பது இப்போது அவருக்கு கேட்க்காது! பார்க்கலாம்... இவரு உண்மைலே கைப்புள்ளையா இல்ல கட்டதுரையான்னு  அடுத்த  மாதம் தெரிந்துவிடும்!
ஸ்டாலின் 

நவீன அரசியலை நாடுபவர்களின் கடைசி நம்பிக்கை இவர்.. ஆனால் இந்த தேர்தலில் இவர் பேசிய பேச்சுக்கள்  நம்பியவர்களை  நட்டாற்றில்  விட்டுவிட்டது! ஜெயா கூட இவரை விமர்சனம் செய்வதற்கு யோசிக்கும் அளவு இருந்தவர் இதோ நான்கூட இவரை குறைசொல்லி எழுதுமளவு வைத்துவிட்டார்! புழுவை கொட்டி கொட்டியே விசமாக்கும் குழவி போல இவருக்கும் ஆகிவிட்டதுபோல?.. கருணாநிதியை குடும்பம் குடும்பம் என்று குறைகூறும் ஜெயா வேண்டும்ன்றால் "செட்" பண்ணி கொள்ளட்டும் என்று பேசியது அவர் அப்பாவிற்கு பதில் இவர் வாக்குமூலம் அளித்ததுபோல் ஆகியது! அரசியல் குட்டையில் இவர் கொஞ்சம் அதிகமாகவே ஊறி விட்டாற்போல? ம்ம்..பார்ப்போம்.. இவர் தளபதியா இல்ல தள்ளமுடியாத பொதியான்னு அடுத்தமாதம் தெரியும்!
அழகிரி

தேர்தலுக்கு முன் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியவர்.. அஞ்சாநெஞ்சன்.. ஆனால் தேர்தல் தேதி அறிவித்தபின் தேர்தல் ஆணைய வாத்தியாரின் கெடுபிடியால் "டேடி...என்னைய இந்த சார் திட்றாரு... அப்பிடின்னு டேடிகிட்ட புகார் பண்ணிவிட்டு காணமல் போனவர்! இருந்தாலும் அவ்வப்போது வந்து " ஹெட்மாஸ்டர்.. ஹெட்மாஸ்டர்...இந்த லீடர் என்னைய கொட்றான்... இவன் என்னைய கிள்ளுறான்.. என்று கிச்சு கிச்சு மூட்டியவர்! ஒருவேளை முரசொலியில் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.. அஞ்சாநெஞ்சனை காணவில்லை என்று! பார்ப்போம்...இவர் அஞ்சாநெஞ்சனா இல்ல அஞ்சும்... என்று அடுத்தமாதம் தெரிந்துவிடும்!
  ப.சிதம்பரம்

செட்டிநாட்டு சிங்கம்...புள்ளிவிபர புலி... ( யாரும் அடுத்த கேள்விய கேக்காதிங்க சொல்லிபுட்டேன்...) இவருகிட்ட பில்டப்பெல்லாம் என்னவோ நல்லாத்தான் இருக்கு....ஆனா ஃபினிஷிங் சரி இல்லையே.. சிவகங்கை மாவட்டதில இவரு பிரச்சாரம் பண்ண வந்தாலே காங்கிரஸ் வேட்ப்பாளருக்கு எல்லாம் கிலி பிடிக்குது! அதிமுக வேட்ப்பாளருக்கு கொண்டாட்டமா இருக்கு.. அங்க இவரோட செல்வாக்கு அப்பிடி! காங்கிரசுக்கு விழுகிற ஒன்னு ரெண்டு வோட்டையும் இவரு வந்து கெடுக்கிராறு! இப்பமட்டும் தொடர்ந்து ஏழாவது வருடமா பாராளுமன்ற உறுப்பினர்... தொகுதிக்கு என்ன சாதித்தோம் என்பதை நெஞ்சு நிமிர்த்தி சொல்லமுடியவில்லை! இன்னும் தேஞ்சுபோன ரெக்கார்ட் மாதிரி இலவச டிவி..ஒரு ரூபாய் அரிசின்னு சொல்லிக்கிட்டு இருக்காரு! பார்ப்போம்.. இந்தபுலி பாய்ந்த புலியா...பம்முற புலியான்னு?
குஷ்பூ 

எல்லோரும் படத்துல ஜாக்கெட் போட்டு மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் இவர் என்னவோ ஜாக்கெட்டில் படம் போட்டே இடம் பிடித்தவர்! எல்லோரையும் சர்ச்சைகள் தேடி வரும் என்றால் இவர் மட்டும்  சர்ச்சைகளை  தேடிப்போவார்! ( இந்த இடத்தில யாரும் இவர் கருணாநிதியை தேடிப்போனதை நினைக்கவேண்டாம்!) புருஷன் சுந்தரை விட பெரிய  தாலியா  போட்டது.. சாமிக்கு  முன்னாடி  செருப்பு  போட்டது.. கல்யாணத்துக்கு  முன்னாடி காதலனோடு  கதை அளக்கலாம்! ..இப்படி தமிழகத்துக்கு தேவையான கருத்துகளை சொன்ன தங்க தாரகை இவங்க.. ஏதோ கொடுத்த காசுக்கு கூவுனோம்னு இல்லாம.. திமுகவுக்கு வோட்டு போட்டா என்னை மாதிரி கொழந்த பொறக்கும்னு சொல்லபோக... எங்க வீட்டு பக்கத்துல உள்ள ஒரு எழுவது வயது பெருசு... தம்பி குசுபு சொன்னமாதிரி போட்டு வந்திட்டேன்... குழந்த எப்ப பொறக்கும்னு கேக்குது...நான் என்னங்க சொல்றது? மக்கள்தொகை மறுபடியும் கூடுமோ?


திருமாவளவன் - ???????????????????????????????????????????

ராமதாஸ்               - ???????????????????????????????????????????

தங்கபாலு              - ???????????????????????????????????????????

பாருங்க மேல உள்ள மூணு பேர பார்த்ததும் நீங்களே சிரிச்சிட்டிங்க?... இதுக்கு நான்வேற தனியா எழுதணுமா? காமெடி உலகத்தின் முடிசூடா மன்னர்கள் இவர்கள்!

No comments:

Post a Comment