Wednesday, 13 February 2013

அரசுப் பேருந்து!
சமீபத்தில் அரசு விரைவு பேருந்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது, மக்களே ஏதேனும் கிளுகிளுப்பா எதிர்பர்தீங்கன்னா மேலே படிக்காதிங்க, ஏமாந்துருவிங்க!! சிங்கையில் இருந்து விடுமுறைக்காக சென்னை வந்து காரைக்குடி செல்வதாக பிளான், ஏன் திருச்சிக்கு போகலைன்னு கேட்காதிங்க! கடைசி நேர திட்டத்தால் பயணசீட்டு கிடைக்கல, சிங்கை விமான நிலையத்திலேயே பிரச்சனை பிகிலு ஊதிக்கிட்டு வந்திருச்சு!! விமான நேரம் மாற்றம், அது இதுன்னு, நமக்கு இப்ப அது தேவை இல்ல( என்ன? எதுவுமே தேவைல்லையா? யாருவிட்டா!!!!)                                      

நம்ம மேட்டருக்கு வருவோம், நம்ம சென்னை நேரப்படி அதிகாலை இரண்டு மணிக்கு விமான நிலயத்த விட்டு வெளியில் வந்தேன், பேருந்து இருக்கா இல்லையான்னு தெரியாம ஒரு அவநம்பிக்கையோட நின்னேன்,  கால் மணி நேரத்தில் ஒரு திருச்சி வண்டி வந்தது, சரி, திருச்சி போயி போயிரலாம்னு  நம்பி ஏறினேன், ஏறும்போதே உள்ள குழாய் கட்டி கூத்து நடத்துற மாதிரி பாட்டு சத்தம் காதை கிழித்தது, சரி, தாம்பரம் தாண்டியதும் நிருத்திருவாங்கன்னு நினைச்சேன்.


ஆனா பேருந்து தாம்பரம் தாண்டுச்சு! கூடுவாஞ்சேரி தாண்டுச்சு! நிறுத்துனபாடு இல்ல! எனக்கு பேருந்துல உக்காந்துருக்கோமா இல்ல மாரியம்மன் கோயில்ல கூழு வாங்க உக்காந்து இருக்கேனான்னு தெரியல!!! மெதுவா ஓட்டுனர்கிட்ட போயி அண்ணே பாட்டு போடுங்க( அதிகாலை மூணு மணிக்கு இதுவே கொடுமை) வேணாங்கல ஆனா சத்தத்த கொஞ்சம் குறைக்க சொன்னதுதான் தாமதம், ஒரு மொற மொறசாறு பாருங்க, அந்த மொரப்போட அர்த்தம் என்ன தெரியுமா? போயி உக்கார்ரியா இல்ல புளியமரத்துல முட்டவான்கிற மாதிரி இருந்துச்சு!!! 

அது சரி பாட்டுக்காண்டி எவனாவது பாடைல போவானன்னு நினைச்சுக்கிட்டு உக்காந்துட்டேன், பேருந்துல நல்ல இருக்கையும் இல்ல, உடல் அயர்ச்சி வேறு, விழுப்புரம் தாண்டியதும், இந்த தடவ மெதுவா நடத்துனருகிட்ட போனேன், அண்ணே........(காப்பி பேஸ்ட்).... இதுக்கு அண்ணனோட பதில் என்ன தெரியுமா! போயி ஒக்காருங்க தம்பி, பாட்ட நிப்பாட்டுனா டிரைவர் தூங்கிருவாரு!!! இது எப்படி இருக்கு!இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா... அந்த பேருந்துல உள்ள அனைவருமே என்ன மாதிரியே புளுங்கிகிட்டும் அவஸ்தை பட்டுகிட்டும் இருக்காங்க, ஆனா ஒருத்தர் கூட ஒரு வார்த்தை கூட கேக்கல!!! நான் கேக்கும் போது கூட துணை வார்த்தைக்கு கூட யாரும் வரவில்லை, இத விட கொடுமை அந்த டிரைவர் சொன்னது,"தம்பி  நீங்க யார்கிட்ட வேணாலும் புகார் பண்ணுங்க, நீங்க புகார யார்கிட்ட குடுக்கனும்னு கண்டு பிடிக்கவே நாலு நாள் ஆயிரும்.


அதுக்கு அப்பறம் நீங்க புகார் கொடுத்து, அத அவங்க பரிசீலனை பண்ணி நடவடிக்கை எடுக்குறதுக்குள்ள என் சர்வீஸ் முடிஞ்சுரும்!!!! போங்க தம்பி!! போங்க!!!!"  இது மேலோட்டமா பார்த்தா சின்ன பிரச்னை, ஆனா அரசாங்க துறைகளில் ஒவ்வரு  நுகர்வோரும் சந்திக்கும் பிரச்னை, இதற்கு தீர்வு என்ன? தீர்வு காண வேண்டிய அமைச்சர்கள் தலைவருக்கு பாராட்டு விழா எடுப்பதிலும், தலைவருக்கு மண்டபம்  கட்டவும், எதிரிகளை கட்டம் கட்டவும், இதுக்கே நேரம் சரியாக இருக்கு! அப்பறம் எங்க துறையை கவனிக்கிறது?!

குறிப்பு - இது 2010 ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்தது!


No comments:

Post a Comment