Wednesday, 27 February 2013

அரசியல்/சினிமா விருதுகள் - 2011!வெற்றிகரமா இந்த வருடமும் முடியப்போகுது. ஒரு கம்ப்ளீட் ஆக்சென் பட ரேஞ்சுக்கு சும்மா பர பரன்னு போயிருச்சு இந்த வருடம். இந்த வருட கிளைமேக்ஸ் கூட இன்னும் பரபரப்பாத்தான் போய்கிட்டு இருக்கு. படத்துல பாட்டு போடும் போது தம்மடிக்க வெளில வர்ற மாதிரி ஒரு சின்ன கேப்ல கடந்த வருடம் விருதுகள் கொடுத்த மாதிரியே இந்த வருடமும் கொடுத்து முடிச்சர்றேன். ஆனா மக்களே இதுக்கும் இந்த டெரர் கும்மி விருதுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சீரியஸ்வாலா... நான் கொடுக்கிறது ஜாலிவாலா... அப்பிடியே இந்த வருட பீலிங்க்ஸ் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு கண்ண தொடச்சிட்டு படிச்சி பாருங்க.
வழக்கம்போலவே அரசியலில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள்னு பார்ப்போம்.


எங்கே என்னை கண்டுபிடி விருது

வருட ஆரம்பத்தில் அதிரி புதிரியாக ஆட்டம் போட்ட அழகிரி வருட இறுதியில் எங்கே என்னை கண்டுபிடிங்க பார்க்கலாம் ரேஞ்சுக்கு ஐஸ் பாய் ஆடிக்கொண்டு இருக்கிறார். அண்ணனுடைய அசராத ஐஸ் பாய் ஆட்டத்திற்காக இந்த விருது அவருக்கே செல்கிறது.

கொலக்குத்தா இருக்கேடா கொமாரு.

துணை முதல்வர் அடுத்த முதல்வர் என்றெல்லாம் வலம் வந்த ஸ்டாலின் தொகுதில ஜெயிக்கவே தண்ணிய குடிக்க வேண்டியதா போச்சு. தண்ணி குடிச்ச ஈரம் தொண்டைல காயுரத்துக்குள்ள கைது புரளி வேற மங்காத்தா ஆடுது. அவருடைய மைன்ட் வாய்ஸ்சான... கொலக்குத்தா இருக்கேடா கொமாரு விருதையே அவருக்கு வழங்கி கௌரவிக்கிறோம்.

நெக்ஸ்ட்டு? ரெஸ்ட்டுதான்... விருது.

ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து உழைத்துக்கொண்டிருந்தவர்  ( யாருக்குன்னு சின்ன புள்ளத்தனமா கேக்க கூடாது. ) இன்று மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து விட்டனர் என்று ஓய்வில்லாமல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கே இந்த விருது செல்கிறது.

பந்தாட்ரா பரந்தாமா விருது.

ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் ஆறுமுறை மந்திரிகள் மாற்றம், அதிகாரிகள் மாற்றம் நூலகம் மாற்றம் இப்படி ஆல் இன் ஆல் ஆல்ரவுண்டராக பந்தாடிக்கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கே இந்த விருது செல்கிறது. இதுல ஒரு சோகம் என்னன்னா.. இவரு அடிச்ச பந்து பேசாம சிவனேன்னு  கேலரில உக்காந்திருந்த கேப்டன் மூஞ்சியையும் பதம்பார்த்து விட்டதுதான் சோகம்

ஆண்டவன பார்க்கணும் அவனுக்கும் ஊத்தணும் விருது.

ஆண்டவனுடன்தான் கூட்டணி என்று சொன்னவர் ஆண்டவன்  வேறு வேலையில் பிசியானதால் வேறு வழியில்லாமல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து அவர்களும் வேலை முடிந்து எட்டி உதைத்ததால் தனியாளாக நின்று ஆண்டவன பார்க்கணும்.. அவனுக்கும் ஊத்தணும் என்று சோலோவாக பாடிக்கொண்டிருக்கும் கேப்டனுக்கே இந்த விருது பீராக... ச்சே.. பெருமையாக செல்கிறது.

பீ கேர் ஃபுல்.... நான் என்னை சொன்னேன் விருது.

கணிசமான எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு கடந்த ஆட்சியில் மிரட்டல் அரசியல்  பண்ணிக்கொண்டிருந்த ராமதாஸ்.. மக்கள் அடித்த ரிவிட்டால் அரசை மிரட்ட முடியாமல் சொந்த கட்சிக்காரர்களை மிரட்டப்போய்.. அவர்களும் அத்துக்கிட்டு ஓடுவதைப்பார்த்து கேட்டை பூட்டி சாவியை கையில் வைத்துக்கொண்டு பீ கேர் ஃபுல்.... நான் என்னை சொன்னேன் என்று தன்னைத்தானே மிரட்டிக்கொள்ளும் ராமதாசிற்கு இந்த விருது செல்கிறது. 

முட்டுச்சந்து முருகேசன் விருது.

டெல்லிக்கு போனா 2G விரட்டுது.. வெளில வந்தா மீடியா மிரட்டுது, சரின்னு  தமிழ்நாட்டுக்கு போனா ஏமாத்தி ஜெயிச்ச கேசு மெரட்டுது, ஏதாவது பேசலாம்னு பேசுனா ஏன்டா பேசுனன்னு கேரளாக்காரன் மிரட்டுறான்.. சரின்னு வாபஸ் வாங்குனா தமிழ்நாடே மிரட்டுது..இப்பிடி எந்தப்பக்கம் போனாலும் முட்டுச்சந்துல முட்டிகிட்டு நிக்கும் ப.சிதம்பரத்திற்கு இந்த விருதை அவரை முட்டாமல் கொடுக்கிறோம்.

இப்ப திரைத்துறையில் என்னென்ன விருதுகள் யார் யாருக்குன்னு பார்க்கலாம்.


பயம்காட்ராண்டா பரமு விருது.

அழிந்துபோகும் சினிமாவை காக்க வந்த ஆபத்பாந்தவன்.. புவர்.. ச்சே.. பவர் ஸ்டார் ஆடும் கொலைவெறி கொஞ்சம் நஞ்சம் அல்ல. அண்ணன் டின் கணக்குல பவுடர் பூசி டன் கணக்குல விக் வச்சு வந்து நின்னார்னா போதும்.. பச்சப்புள்ளைங்களுக்கு சோறு ஊட்ட தாய்மார்கள் பூச்சாண்டி தேடவேண்டிய அவசியமே இல்லை. அடுத்து ஆனந்த தொல்லை படம் ரிலீஸ் என மக்களை சுனாமி ரேஞ்சிற்கு மிரட்டிக்கொண்டிருக்கும் டாகூட்டர் சுகர் வாசனுக்கு இந்த விருது செல்கிறது.

சறுக்கிருச்சேடா சர்வேசா விருது.

இதற்கு முன்பு  எடுத்த நான்கு படங்களிலும் டைட்டிலில் பாலா என்று போட தேவையில்லாமலே ரசிகனுக்கு பாலா படம் என்று தெரியவைத்தவர். வசூலை வாரிக்குவிக்காவிட்டிலும் விமர்சனங்களால் குறை சொல்ல முடியாதவர்.. ஆனால் அவன் இவன் படம் மூலம் இரண்டிலுமே சறுக்கி சறுக்கிருச்சேடா சர்வேசா என்று புலம்பிக்கொண்டிருக்கும் பாலாவுக்கு இந்த விருது செல்கிறது.

சி.டி வருமா சிங்காரி விருது.
சரண் என்னை அங்க தொட்டாறு இங்க புடிச்சாருன்னு பேட்டியிலேயே இளசுகளை சூடேத்தி.. மீடியாக்களுக்கு டி.ஆர்.பி ஏத்தி.. சரணுக்கு பி.பி ஏத்தி.. மன்னிப்பு கேக்கலைனா வீடியோ வெளியிடுவேன்னு பரங்கிமலை பக்தர்களிடம் பரபரப்பு ஏத்திவிட்டு வெளிநாடு போய் வந்து ஒன்றுமே நடக்காதது போல் இருக்கும் சோனாவிற்கு இந்த விருது செல்கிறது. ( யார்யா அது? இன்னும் சி.டி. வருமான்னு கேக்குறது? )

காப்பினா நரசுஸ்தானே விருது.

ஆங்கிலப்படத்தில் இருந்து அப்பிடியே உறுகி படமெடுத்துவிட்டு அதை இணையமும் பத்திரிக்கைகளும் புட்டு புட்டு வைத்தால்.. யார்  சொன்னது  அப்பிடி?  அது அதில இருந்து ஒரு லைன்தான் எடுத்தோம்.. சின்ன தழுவல்தான் என்று காப்பினா நரசுஸ்தானே என்று அப்பாவியாக கேட்க்கும் சில தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு இந்த விருது செல்கிறது.

வட போச்சேடா வண்டுமுருகா விருது.

மக்களின் மனநிலை தெரியாமல் சொந்த பிரச்சனைக்காக அரசியலில் குதித்து.. கூட்டத்துக்கும் கைதட்டலுக்கும் மயங்கி எப்படியும் ஒரு பதவி  நிச்சயம் என்ற  நினைப்பில் வசவுகளை பொழிந்து  இப்போது திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் வட போச்சேடா வண்டுமுருகா என்று வீட்டில் இருக்கும் வடிவேலுவுக்கு இந்த விருதை வழங்குகிறோம்.

இத்தோடு இந்த விருது வழங்கும் விழா இனிதே நிறைவுறுகிறது. அடுத்து பதிவுலக பிதாமகன்களுக்கு வழங்கும் விருதோடு வருகிறேன். இந்த விழாவில் யார் யாருக்கு எந்த நடிகையின் நடனம் பார்க்கவேண்டுமோ அவர்கள் தயவுசெய்து http://www.youtube.com/சென்று பார்த்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment