Wednesday, 11 December 2013

சிங்கப்பூர் கலவரம் 2013 !


தனது 47 ஆண்டு கால குடியரசு வரலாற்றில் ஒரு ஆகப்பெரிய கலவரத்தைச் சந்தித்து மீண்டு வந்திருக்கின்றது சிங்கப்பூர்! அந்த கலவரத்திற்கு காரணமே நம் சகோதரர்கள்தான் என்பது ஒரு வரலாற்றுச் சோகம். இதை ஏதொ ஒரு கலவரம் என்ற வகையில் நாம் எளிதாக ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இது நடந்தது இந்தியாவில் இல்லை. இந்த கலவரத்தால் அடையப்போகும் பாதிப்புகளும் நம் தலையில்தான் விடியும். பல்லாண்டு காலமாக நம் வம்சாவழியினர் வாழும் பூமி இது. பல்லாயிரம் குடும்பங்களின் சகோதரிகளின் திருமண கனவை நனவாக்கவும், பெற்றோர்களின் மருத்துவ செலவுக்கு பொருள் ஈட்டவும், சகோதரர்களின் பட்டதாரிக் கனவை நனவாக்கவும் தனது சொந்த வீட்டுக் கனவை நனவாக்கவும் பொருள் ஈட்ட உதவி புரிந்த புரிந்துகொண்டிருக்கும் பூமி இது!

வளர்த்த கடா மார்பில் பாயும் என்பார்களே, அதுபோல பாய்ந்து விட்டு ஓய்ந்திருக்கிறார்கள் நம் சகோதரர்கள். இது நாம் பிழைக்க வந்த நாடு என்று நினைத்திருந்தால் இதுபோல செய்திருக்க மாட்டார்கள். ஆனால் சிங்கப்பூரில் அந்த நினைவு வருவது குறைவுதான். ஏனென்றால் நம் சொந்த ஊரில் இருப்பது போலவே ஒரு உணர்வோடு வாழலாம் இங்கு. பிழைக்க வந்த நாட்டில் இப்படி இருப்பதை நினைத்து கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அம்மன் கோவில் பிரசாதத்தில் இருந்து அஞ்சால் அலுப்பு மருந்துவரை இங்கு கிடைக்கும். ஆனால் அதிகமாக கொடுக்கப்பட்ட உரிமைகள் நம்மை இப்படி செய்யத் தூண்டிவிட்டது போலும். 

இங்கு உள்ள தமிழர்களுக்குத் தாய் வீடு போல லிட்டில் இந்தியா. உள்ளே போய் விட்டால் நம்ம ஊர்ச் சந்தைக்கு போய் வந்த திருப்தியும் திருவிழாவிற்கு போய் வந்த திருப்தியும் ஒன்றாகக் கிடைக்கும். வார நாட்களில் ஓரளவிற்கு இருக்கும் கூட்டம் வார இறுதியில் அலைமோதும். பொதுவாக உள்ளூர்த் தமிழர்களும், இங்கு குடும்பத்துடன் இருக்கும் இந்தியாவில் இருந்து வந்தவர்களும் வெள்ளி சனிக்கிழமைகளில் தங்கள் வேலைகளை முடித்துக்கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழ்மை இந்தப்பகுதி, இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுவிடும். தொழிலாளர்கள் என்று சொன்னாலும் பங்களாதேசில் இருந்து வந்தவர்களும் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் பலதரப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்தவர்களும் அதிகமாக கூடுவார்கள்.
சனிக்கிழமை வரை உழைத்துவிட்டு சில சமயம் ஞாயிற்றுக் கிழமையும் மாலை வரை உழைத்துவிட்டு கிடைத்த சில மணிகளில் தன் நண்பர்களை, உறவினர்களைப் பார்க்கவும் பணம் அனுப்பவும், அந்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் இங்கு கூடுவார்கள். அப்படி வந்த இடத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சும்மா எப்படி பேசுவது? ஆகவே நம் தமிழக ரத்தத்தில் ஊறிப்போன குடியோடுதான் பேச்சு துவங்கும். 90% பேர் இப்படித்தான். கலவரத்திற்கு காரணமாக பலபேர் யூகமாக சொல்வது இதுதான்.. குடித்துவிட்டு(இதுவும் போலிஸ் அறிக்கையில் இனிதான் தெரியவரும்) சாலையை கடக்க முயன்ற ஒரு தமிழரைத்தான் ஒரு தனியார் பேருந்து காவு வாங்கி கலவரத்திற்கு வித்திட்டது என்று.

கலவரம் எப்படி துவங்கியது என்று நாம் யூகமாகவே கூற முடியும், ஏனென்றால் நேரில் பார்த்திருந்தால் கூட இப்போது யாருமே பேசத் தயங்குவார்கள். முதலில் அவர் எப்படி அடிபட்டார் என்பதே பல யூகங்களாக உள்ளது. இரண்டாவது யூகம் அவர் பேருந்தில் ஏற முயன்றதாகவும் நடத்துனர் பெண்மணி (இதைப்பற்றி அடுத்து கூறுகிறேன் ) அவர் கைய பிடிக்க முயன்று நிலை தடுமாறி விழுந்ததாகச் சொல்வது. இதை நாம் ஆரம்பத்திலே நிராகரிக்கலாம், ஏனென்றால் இதுபோல உள்ள அனைத்து தனியார் பேருந்துகளும் குளிசாதன வசதி செய்யப்பட்டது. பேருந்தை நகர்த்தும் முன்பாகவே தானியங்கி கதவுகள் மூடிவிடும். அப்படியே நடந்திருந்தாலும் பேருந்தில் உள்ள சிசிடிவி கேமரா காண்பித்துவிடும்.

அடுத்த யூகம் அவர் பேருந்தை நிறுத்த தட்டிக்கொண்டே ஓடி வந்ததாகவும், நடத்துனர் பெண்மணி அவரை தள்ளிவிட்டதால் அவர் நிலை தடுமாறி விழுந்து அடிபட்டு இறந்ததாகவும் சொல்கிறார்கள், இதற்கும் முதலில் சொன்ன காரணங்களே பொருந்தும். கதவு சாத்தியிருக்கும் போது அதை திறந்துகொண்டு தள்ளிவிட அந்தப் பெண்மணிக்கு அவசியம் இல்லை. அப்படியே இருந்தாலும் சிசிடிவி காண்பித்துவிடும். ஆகவே அவர் எப்படி அடிபட்டு இறந்தார் என்பது காவல்துறை அறிக்கையில்தான் தெரியவரும்.
இப்போது நடத்துனர் பெண்மணி விவகாரத்திற்கு வருவோம். இங்கு அரசாங்கப்  பொது போக்குவரத்தே அதிகம். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை விட்டு தூரத்தில்தான் விடுதிகள் இருக்கும் மேலும் பலருக்கு வேலை இடத்திலேயே தங்கும் இடம் இருக்கும். அங்கெல்லாம் பொதுப் போக்குவரத்து இருக்காது. ஞாயிற்று கிழமை அதிகமான பேர் லிட்டில் இந்தியா வருவதால், பல கம்பெனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டும் ஓட்டுனர்கள் ஞாயிற்று கிழமை அவர்களுக்கும் ஓய்வு என்பதால் உபரி வருமானத்திற்காக  துணைக்கு தன் மனைவியோ,மகன் அல்லது மகளையோ அழைத்துக்கொண்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்களுக்கு வந்துவிடுவார்கள். குறைந்த கட்டணத்தில் அவர்களை லிட்டில் இந்தியாவில் இறக்கிவிட்டு அங்கேயே காத்திருந்து இரவானதும் திரும்ப வருபவர்களை அழைத்து வருவார்கள். இப்படி ஒரு பேருந்தில்தான் ஒருவர் அடிபட்டு இறந்து கலவரம் உருவானது.

கலவரம், விபத்து உருவாக்கிய பேருந்தை தாக்குவதில்தான் தொடங்கியிருக்கிறது. ஆனால் அது எப்படி காவல் வாகனங்களையும் உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தாக்கி எரிப்பதில் முடிந்தது என்று புரியவில்லை. இந்த காட்டுமிராண்டித்தனமான வன்முறை என்பது யார் என்ன காரணத்திற்காக செய்திருந்தாலும் கண்டிப்பாகக் கண்டிக்கப்படக்கூடியது. இதை ஏன் தமிழ்நாட்டு ஊடகங்கள் சீனர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதல் என்று சித்தரித்தார்கள் என்று தெரியவில்லை.

முதலில் ஒரு அடிப்படையை அங்கு உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கப்பூர் என்பது தோராயமாக 70% சீனர்களையும், 20% மலாய் இனத்தவர்களையும் 10% இந்திய வம்சாவழியினரையும் உள்ளடக்கியது. இதில் நம் தமிழ் நாட்டில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் சொற்பமே. இந்தக் கலவரம் முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் இருந்து வந்து வேலை செய்பவர்களால் மட்டுமே செய்யப்பட்டது. இதற்கும் இங்கு வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினால் எந்தப்பிரச்சனையும் இல்லை. எப்பொழுதும்போல அடுத்த நாளே தமது வேலைகளுக்கு சென்று வந்தனர். மாறாக தமிழ்நாட்டு ஊடங்கள் வர்ணித்தது போல் கைதுக்கு பயந்து யாரும் வீட்டுக்குள் முடங்க வில்லை.
இங்கு உள்ள காவல்துறையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுத்து எளிதில் யாரையும் கைது செய்ய மாட்டார்கள். சம்பவ இடத்தில் 28 பேரை கைது செய்தார்கள் விசாரணையில் நான்கு பேருக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்று விடுதலையும் செய்துவிட்டார்கள். மீதி 24 பேர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்துவிட்டார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் சில பிரம்படிகளும் கிடைக்கலாம். கலவரத்தில் ஈடுபடும் முன் ஒரு நிமிடம் நிதானித்து நாம் எதற்காக இவ்வளவு செலவு செய்து இங்கு வந்து குடும்பத்தைப் பிரிந்து ஓய்வில்லாமல் வேலை செய்கிறோம் என்று நினைத்துப் பார்த்திருந்தால் இதை செய்வதற்கு மனது வந்திருக்காது.

இதனால் என்ன சாதித்து விட்டோம் இப்பொழுது? ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு செல்லும்பொழுது, அது வேலைக்காக இருந்தாலும் சுற்றுலாவாக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவை நாம் பிரதிபலித்துச் செல்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாம் செய்யும் செயல்கள்தான் இந்தியர்கள் மீதான பிம்பத்தை வெளிநாட்டவர்கள் மத்தியில் உருவாக்கும். ஏற்கனவே கற்பழிப்புகளால் நம் மானம் கப்பலில் போய்க்கொண்டிருக்க மிச்சம் உள்ளதை கலவரங்கள் செய்து ஏற்றிக்கொண்டிருக்கின்றோம், அதுவும் பிழைக்க வந்த நாட்டில்.

கலவரம் செய்யும் அளவிற்கு அரசாங்கத்தால் அடக்குமுறைகளும் இங்கு இல்லை. குறிப்பாக தொழிலாளர்களுக்கு. உழைப்பவர்களை பெருபாலான சிங்கப்பூரர்கள் மதிப்பார்கள். வீடுகளுக்கு அருகில் நம் தொழிலாளர்கள் வேலை செய்தால் சில சமயங்களில் வீட்டில் இருப்பவர்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள், குடிக்க குளிர்பானம் பணம் இப்படி இன வேறுபாடு இல்லாமல் கொடுப்பார்கள். நானே பலமுறை பார்த்திருக்கிறேன். விதி விலக்குகள் உண்டு. அவர்களை நாம் பொருட்படுத்த தேவை இல்லை.

சிங்கப்பூரில் பொது இடங்களில் குப்பை போடுவதோ அல்லது அசுத்தம் செய்வதோ சட்டப்படி குற்றம். ஆனால் ஞாயிற்றுக் கிழமை லிட்டில் இந்தியாவில் அரசாங்கம் இவற்றை கடுமையாகக் கடைபிடித்தது இல்லை. நினைத்த இடத்தில் நான்கு பேர் அமர்ந்து மது அருந்துவார்கள், குப்பை போடுவார்கள், அங்கு இருந்து வீட்டுக்கு திரும்பும் பொழுது பொது போக்குவரத்து பேருந்துகளில் மற்றும் ரயில்களில் குடித்துவிட்டு வாந்தி எடுத்து வைப்பார்கள், பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் ஊருக்கு போன் செய்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே வருவார்கள், இவை அனைத்தையும் அரசாங்கம் இதுவரை கண்டும் காணாமல்தான் இருந்து வந்தது. அவர்களது வேலை கஷ்டங்களையும் பொருளாதார நிலைமையையும் கருத்தில் கொண்டு அதிகமாகத் தண்டிப்பதில்லை. ஆனால் இனி? தன தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் யானை ஆகிவிட்டோம்.இவ்வளவு இருந்தும் ஒட்டுமொத்தமாக குடியினால் மட்டுமே இந்தக் கலவரம் என்று ஒற்றை வரியில் கடந்துபோக முடியவில்லை இந்த நிகழ்வை. ஊரில் சிங்கபூருக்கு என்று முடிவானவுடன் முகவர்களால் அவர்களது பணத்தாசையால் ஆரம்பிக்கும் மன அழுத்தம் இங்கு வந்து சேர்ந்ததும் அவனது பணிச் சூழலால் பல மடங்கு அதிகமாகிறது. அதிகாலை எழுத்து காலை உணவாக இரண்டு ரொட்டியும் ஒரு காப்பியை பாக்கெட்டில் ஊற்றிக்கொண்டு உறிஞ்சிக்கொண்டே  போனால் வேலையிடம் வந்துவிடும். மதியம் கட்டிக்கொண்டுபோன ஆறிப்போன சாப்பாடு அப்பறம் வேலை மாலை ஆனதும் ஒரு காப்பி ரெண்டு ரொட்டி கூடுதல் நேரம் வேலை பார்த்து விடுதிக்கு வரவே 10இல் இருந்து 11 மணி ஆகிவிடும். பிறகு சமையல் குளியல் என்று 1மணிக்கு மேல்தான் உறங்க முடியும். 

இப்படி தன் மன அழுத்தங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக்கொண்டே வந்தவன் எதன் மீதாவது அதைக் காமிக்க சந்தர்ப்பம் வரும்போது விஸ்வரூபம் எடுக்கிறான். புறக்காரணிகள் அவனுக்கு இரண்டாம் பட்சம் ஆகிறது. அதுவும் துணைக்கு ஆள் இருந்து செய்யும்போது இன்னும் ஆக்ரோசமாகச் செய்கிறான். இதன் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் இந்தக் கலவரம். பார்க்க நேர்ந்த சில காணொளிகள் அதைத்தான் உணர்த்துகின்றன. கலவரத்தில் மாட்டிக்கொண்ட காவலர்களும், ஆம்புலன்சில் வந்த உதவியாளர்களும் பயந்து ஓடும்பொழுது ஒருவன் இறந்து கிடக்கிறான் என்ற உணர்வையும் மீறி விசில் அடித்தும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் அதை கொண்டாடுகின்றனர். 

அரசாங்கம் இந்தச் சம்பவத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் கருதாமல், தவறு இழைத்தவர்களை தண்டிப்பதோடு நின்று விடாமல் உளவியல் ரீதியாகவும் இதை அணுகி வெளிநாட்டு தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும் நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும். திரை கடல் ஓடியும் திரவியம் தேடச் சொன்ன முன்னோர்கள் திரை கடல் ஓடியும் கலவரம் செய்யச் சொல்லவில்லை என்பதை மட்டும் நாம் மனதில் கொள்வோம்.

நன்றி.

Monday, 21 October 2013

சச்சின் ஒரு சகாப்தம்!

சச்சின்!
இந்தியாவில்.. ஏன்? இந்த உலகத்தில் கிரிகெட்டைத் தெரிந்த அனைவருமே இந்தப் பெயரை ஒரு முறையேனும் உச்சரிக்காமல் இருந்திருக்க முடியாது! இது ஒரு கிரிக்கெட் வேதத்தின் மந்திரச் சொல்! இந்தச் சரித்திரத்தைப் பற்றி இனிமேலும் புதிதாக என்ன இருக்கின்றது எழுத? ஆனாலும் இருந்துகொண்டேதான் இருக்கின்றது நிறைய! சச்சின் பிறந்ததில் இருந்து இன்று வரை அவரது ஒவ்வொரு அசைவுகளையும் நம் வீட்டு வரவேற்பு அறையிலும் எழுத்துக்களாகவும் பார்த்தாகிவிட்டது! 

ஆனாலும் சாதாரண கிராமத்தில் பிறந்த என்னைப்போல ஒருவனுக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தி அவரது கிரிக்கெட் பயணத்தோடு என்னையும் ஒரு கிரிக்கெட் ரசிகனாக சச்சினைப் பற்றி நான்தானே சொல்லியாக வேண்டும்? அதனால்தான் இந்தப்பதிவு! இது சச்சினின் சாதனைகளை வரிசைப்படுத்தி புள்ளி விபரம் கொடுக்க அல்ல! சச்சினின் வாழ்கையை ஆவணப்படுத்தவும் அல்ல! ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளில் கலந்த சச்சின் என்னும் சரித்திரத்தின் தொகுப்பே இது!


ஆயிரக்கணக்கான போட்டிகளில் ஒன்றாக முக்கியத்துவம் இல்லாத ஒரு போட்டியாக மாற வேண்டிய பாகிஸ்தானுடனான ஒரு டெஸ்ட் மேட்ச்.. சச்சின் என்ற சாதனை நாயகனின் அறிமுகத்தாலேயே வரலாற்றில் நிலைத்து விட்டது விந்தைதான்! ஆனால் இந்தப் போட்டியின் போதெல்லாம் எனக்கு கிரிக்கெட் அவ்வளவு பரிட்சயமில்லை. எனக்கு மட்டும் அல்ல..எங்கள் பகுதியிலேயே அவ்வளவாக இல்லை!

இன்னும் நன்றாக நினைவிருக்கின்றது சச்சினின் ஆட்டத்தை நான் பார்த்த அந்த முதல் தருணம்! 92ம் வருட உலகக்கோப்பை! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம், அவர்கள் முதலில் ஆடி நமக்கு 236 ரன்களை நிர்ணயித்தார்கள்! எளிதாக அடிக்க வேண்டிய ரன்களை ரவி சாஸ்த்ரி கட்டை போட்டு கடுப்படுத்திக் கொண்டிருந்தார்! ஸ்ரீகாந்த் டக்! அப்போதுதான் சுற்றி உள்ளவர்கள் ரஜினி படத்தில் ரஜினி என்ட்ரி சீனுக்கு பில்டப் கொடுப்பது போல டெண்டுல்கர்னு ஒரு சின்ன பையன் இருக்கான் அவன் மட்டும் இறங்கட்டும் அப்பறம் இருக்கு இவங்களுக்கு என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்! நானும் "இங்க யார்ரா தமிழ்? கணக்கா "யார்ரா டெண்டுல்கர்னு? கேட்டுகிட்டே இருந்தேன்!

என்னை வெகுநேரம் காக்க வைக்கவில்லை நம்மவர்கள்! ஏதோ பக்கத்து வீட்டு அண்ணன் போல வந்தார்! அவரும் வெகுநேரம் நிலைக்கவில்லை,(11 ரன்தான்) ஆனாலும் ஒவ்வொரு பந்தையும் அவர் பயமில்லாமல் எதிர்கொண்ட அந்த ஆட்டம் மட்டும் அப்படியே இருந்தது! இதே மேட்சில்தான் இன்னொரு வரலாற்று சோகமும் நடந்தது! 67 பந்துகளை விழுங்கி வெறும் 25 ரன்களை மட்டுமே அடித்த ரவிசாஸ்திரிதான் தோல்விக்கு காரணம் என்று நினைத்த ரசிகர்கள் அவர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள்! அத்தோடு போனவர்தான் சாஸ்த்ரி!


இந்த மேட்சுக்கு அப்பறம் அனைத்துப் போட்டிகளையும் தேடித்தேடி பார்க்கலானேன்! எங்கள் ஊர்ப் பக்கமெல்லாம் கால்பந்துதான் பிரதானம் இன்று வரை! எங்கள் பகுதியே ஒரு குட்டி பிரேசில் என்று கூட சொல்லலாம்! ( இதே தலைப்பில் சில வருடங்களுக்கு முன் சிங்கபூர் தமிழ் முரசில்கூட ஒரு கட்டுரை வந்தது எங்கள் பகுதியைப் பற்றி! ). ஊருக்கு ஊர் கால்ப்பந்து மைதானம்! ஒவ்வொரு ஊரிலும் ஒரு கால்பந்துக் கழகம் அதற்கு சொந்தமான ஒரு டீம் என்று களைகட்டும் பகுதி எங்கள் பகுதி! இன்று வரை மாதம் மாதம் ஒவ்வொரு ஊரிலும் கால்ப்பந்துப் போட்டிகள் நடந்துகொண்டுதான் உள்ளது!

இதையெல்லாம் எதற்காக சொன்னேன் என்றால்.. இத்தனையையும் மீறி எங்கள் பகுதியின் ஒரு தலை முறையையே கிரிக்கெட் பக்கம் சாய வைத்தது சச்சினால் மட்டுமே சாத்தியம் ஆனது! அப்போதெல்லாம் எங்கள் ஒரே இலக்கு இந்தியா ஜெயிக்க வேண்டும் அதுவும் சச்சின் ஆடிச் ஜெயிக்க வேண்டும்! பகலில் போட்டிகள் இருந்தால் பள்ளிக்கு சென்ற உடனே எனக்கு வயிற்று வலிகள் வரத்தொடங்கியது! பனை மட்டைகள் பேட் ஆனது!  கரிக்கோடுகள் ஸ்டம்ப் ஆனது! பசி, படிப்பு மறந்து விளையாடத் துவங்கினோம்! ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் சச்சின் ஆகும் கனவு எரிந்து கிடந்த காலம் அது!

அப்போதைய கால கட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு கூட மன்றம் இல்லாத எங்கள் பகுதியில் முதன் முதலாக சச்சினுக்காக ரசிகர் மன்றம் உதயம் ஆனது! அப்போதெல்லாம் எங்கள் பகுதியில் எந்த ஊரில் திருவிழா என்றாலும் கரகாட்டம் கண்டிப்பாக இருக்கும்! அப்போதே கூட்டுச் சேர்ந்து கொண்டு போவோம்! கரகாட்டம் ஆடும் பெண்ணுக்கு காசு கொடுத்தால்(குத்திவிட்டால்) கொடுத்தவர் பெயரை கரகாட்டம் ஆடும் பெண் மைக்கில் கொஞ்சம் கிறக்கமாக உச்சரிக்கும்! 

நாங்கள் காசு கொடுத்து ஒரு சீட்டில் எங்கள் மன்ற தலைவர் பெயரை எழுதி மறக்காமல் கீழே தலைவர் டெண்டுல்கர் ரசிகர் மன்றம் என்று எழுதியும் விடுவோம் அவருக்கே தெரியாமல்! அந்தப் பெண்ணும் கொடுத்த(குத்திய) காசுக்கு குறைவில்லாமல் அவர் பெயரை கொஞ்சலாகச் சொல்லி மறக்காமல் டெண்டுல்கர் ரசிகர் மன்றம் என்று சொல்லும்போது அவ்வளவு சந்தோசமாக இருக்கும்! தலைவருக்கு வீட்டில் அடி விழுவது தனிக்கதை! இப்படியே ஒவ்வொரு ஊர்க் கரகாட்டத்திலும் செய்து எங்கள் டெண்டுல்கர் ரசிகர் மன்றத்தைப் பிரபலப் படுத்த ஆரம்பித்தோம்! சொல்ல மறந்துவிட்டேன் எங்கள் மன்றத் தலைவருக்கு இன்று திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது! அவன் பெயர் சச்சின்! 


சச்சினின் சாதனைகள் அனைத்தையும் பட்டியலிட இந்தப்பதிவு போதாது! ஆனால் 1998ம் வருடம் நடந்த இந்த நிகழ்வைப் பற்றி சொல்லவில்லை என்றால் பதிவு முழுமை பெறாது! இது சார்ஜாவில் நடந்த ஒரு முத்தரப்புத் தொடர் பற்றியது.. இந்த வரிகளை நான் எழுத ஆரம்பிக்கும்போதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் நான் எதைப்பற்றி சொல்லுகிறேன் என்று! இந்திய கிரிக்கெட்டை நேசிக்கின்ற ஒவ்வொருத்தருக்கும் ஒரு மறக்க முடியாத போட்டி அது! 

முத்தரப்புத் தொடரில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது! அதே ஆஸ்திரேலியாவுடன் 46 ஓவருக்கு 276 ரன்கள் டார்கெட்! அட்லீஸ்ட் 237 ரன்களாவது எடுத்தால்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் நிலைமையில் இந்தியா! சச்சின் ஒருவராக நின்று போராடினார்! இடையில் மணல் புயல் வேறு வந்தது! ஆனாலும் மனம் தளராமல் அன்று அவர் நின்ற விதம் யாருக்கும் டிவியை அணைத்துவிட்டு படுக்க மனமில்லை! அன்று நாம் தோற்றுத்தான் போனோம்! ஆனாலும் 142 ரன்கள் அடித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வைத்தார் சச்சின்! இறுதிப்போட்டியில் அதே ஆஸ்திரேலியாவை மீண்டும் சதம் அடித்து கோப்பையை இந்தியா வெல்லக் காரணாமாக அமைந்தவரும் சச்சின்தான்!

அதன்பிறகு இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் என்று கூறலாம்! சச்சின் என்ற தனிமனிதனின் ஆட்டத்தாலையே பல கோப்பைகளை இந்தியா வென்றது! அதன்பிறகு அவருக்கு முதுகுத்தண்டில் சில பிரச்சனைகள் வந்து மருத்துவர் ஆலோசனையின் படி தனது பேட்டின் கனத்தைக் குறைத்தார்! தனது பேட்டிங் ஸ்டைலையே மாற்றினார்! அவரது ஃபேவரிட்டான ஃபுல் ஷாட் ஆடுவதைக் குறைத்துகொண்டார். இருந்தாலும் சில போட்டிகளின் நடுவே அவர் முதுகு வலியால் அவதிப்படுவதைப் பார்க்கும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் இதய வலியே வரும். இது மிகைப்படுத்திச் சொல்ல சொல்லவில்லை! ஒரு ரசிகனின் அந்த நேரத்து உணர்வு அதுவாகத்தான் இருந்தது!


இருந்தாலும் தனது உடற்தகுதியை அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. தன்னுடன் களத்தில் நிற்கும் நேற்று வந்த ஜூனியர்களுக்குக் கூட ஆலோசனைகள் சொல்லி அரவணைத்து அவர்கள் சாதிக்கும்பொழுது முதல் ஆளாகக் கை தட்டி அவர்களைத் தட்டிக்கொடுத்து கொண்டுசெல்ல சச்சினால் மட்டுமே முடிந்தது. ஆனாலும் இந்த மென்மையான போக்கே இவரால் ஒரு அணித்தலைவராக சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. மேலும் அவர் அணித்தலைவராக இருந்த கால கட்டத்தில் பேட்டிங் பொறுப்பு முழுவதையும் தன் தோளில் சுமந்தவர் அவர். இப்போது உள்ளதுபோல் டெயில் என்டர்கள் வரை பேட்டிங் செய்யும் காலம் அது அல்ல என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானின் சயீத் அன்வர் இந்தியாவுக்கு எதிராக 194 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்தபொழுது இந்தச் சாதனையை சச்சின் முறியடிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கனவாக இருந்தது. அவரே நியூசிக்கு எதிராக 183 ரன்கள் வரை வந்தார், ஆனாலும் உலக சாதனை என்பது கனவாகவே இருந்தது. அதன் பின்னர் கங்குலி முதல் நேற்று வந்த தோனி வரை அந்த ரன்களை நெருங்கி வந்தனர். ஆனாலும் அன்வரின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 2010ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் 200 ரன்களைத் தொட்ட நிமிடம் அவருக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு இந்தியக் கிரிக்கெட் ரசிகனின் கண்களிலுமே ஆனத்தக் கண்ணீர் வழிந்தது!

உலக சாதனை தனக்கான இடத்தில் பெருமையாக அமர்ந்து கொண்டது! இந்தச் சாதனையை சில வருடங்களில் தனது சக வீரரான சேவாக் முறியடித்த போது முதல் ஆளாகக் கைதட்டி பாராட்டினார்.அதுதான் சச்சின்! 


அப்போது இவரையும் கங்குலியையும் வைத்து ஏகப்பட்ட வதந்திகள் அப்போது உலவின. ஏன்? தற்போதைய கேப்டன் தோனி கூடவும் சர்ச்சைகள் போல வதந்திகள் வந்தன. ஆனாலும் அணி நிர்வாகம் பற்றியோ தன்னுடைய பிரச்சனைகள் பற்றியோ வெளிப்படையாக எதையும் பேசி மீடியாக்களுக்கு இவர் தீனி போட்டதே இல்லை. அதுதான் சச்சின்!

எந்த ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகனும் சச்சினை வெறுக்க முடியாது என்பதுதான் உண்மை! ஆனாலும் அவர்மீதும் அவர் திறமையின் மீதும் வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் தனது ஆட்டத்தால் மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். "ஒரு நதிக்குத்தான் தெரியும் எந்தப்பாதையில் ஓட வேண்டும் என்று!" அதுபோலதான்.. சச்சினுக்கு மட்டுமே தெரியும் தனது ஓய்வை எப்போது அறிவிக்க வேண்டும் என்று. அவரும் சர்வதேச 20-20 யில் தனது முதல் ஓய்வை அறிவித்தார்! 100வது சர்வதேச சதங்கள் கடந்ததும் தனது ஒருநாள் போட்டிக்கான ஓய்வை அறிவித்தார்! இதோ.. இப்போது தனது 200 வது டெஸ்டில் டெஸ்ட் ஓய்வையும் அறிவித்துவிட்டார்!


2011ல் உலகக் கோப்பையை வென்றதும் சச்சினை தோளில் சுமந்து வந்தார்கள் நம் வீரர்கள். இது சச்சினுக்கான கோப்பை என்று! அப்போது விராட் கோஹ்லியிடம் ஏன் நீங்கள் சச்சினை தோளில் சுமந்து வருகிறீர்கள் என்று கேட்ட பொழுது அவர் சொன்னார் "23 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டை தன் தோளில் சுமந்தவரை இன்று ஒரு நாள் மட்டும் நாங்கள் தோளில் சுமக்கிறோம்" என்று! எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

இதோ இன்னும் கொஞ்ச நாட்களில் இத்தனை வருட காலம் தன் தோளில் சுமந்த சுமையை இறக்கி வைக்கப் போகிறார் சச்சின்! இதுவரை சச்சின் ஆடும் 11 அணியில் இல்லை என்றாலும் இன்னும் இந்திய அணியில் இருக்கின்றார் என்ற சந்தோசமே ஒரு ரசிகனுக்குப் போதுமானதாக இருந்தது. இனிமேல் எந்தஒரு இந்திய அணியிலும் சச்சின் என்ற சகாப்தம் இல்லையென்ற உண்மையை அந்த உண்மை கொடுக்கும் வலியை ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனாக நான் எங்கு இறக்கி வைப்பது என்று தெரியவில்லை! 
                                  விடை கொடுக்கின்றோம் சச்சின்! வேதனையோடு!


Wednesday, 12 June 2013

அது ஒரு மழைக்காலம்-8 ( பழைய நினைவுகள் ) !


அன்று.....
அந்த பிள்ளையார் கோவிலில் பிள்ளையாரை எங்களுக்கு காவலுக்கு வைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டோம்! அவரும் கைல உள்ள லட்ட திங்கிறதுலே குறியா இருந்ததால எங்களை கவனிக்கவே இல்லை! அவள்தான் ஆரம்பித்தாள் " டேய்.. என்னை லவ் பண்ணனும்னு உனக்கு எப்ப முதல் முதல்ல தோணுச்சு?" என்றாள்! 

"ஆஹா..துப்பாக்கில முத குண்ட லோட் பண்ணிட்டா"ன்னு நினைச்சுகிட்டே, " அப்பிடியெல்லாம் எனக்கு சரியா தெரியல கெளரி, சின்ன வயசுல இருந்து உன்னைய பார்க்குறேன், படத்தில் வர்றது மாதிரியெல்லாம் சுத்தி வெள்ள ட்ரெஸ் தேவதைகள் கும்மி அடிக்க, புகை மூட்டத்துக்கு நடுவுல எல்லாம் நான் உன்னை பார்க்கல! சின்ன வயசுல நம்ம பெரியவங்களே இவளை நீ கட்டிக்கிறியாடான்னு உன்னை காமிச்சி கேப்பாங்க! அப்ப என்ன முந்திகிட்டு நீதான் முதல்ல சொல்லுவ" நான் இவன கட்டிகிறேன்னு!" அப்ப நான்தான் அதிகமா வெக்கப்பட்டுக்கிட்டு உள்ள ஓடுவேன்!
ஆனா அப்பவே ஒரு இனம்புரியாத சந்தோசம் மனசுல இருக்கும்! அதுக்கு பிறகு பசங்களா சேர்ந்து காட்டுக்குள்ள விளையாட போகும்போது கள்ளிச் செடிய பார்த்துட்டு ஆளாளுக்கு அவங்க மனசுல உள்ள பொண்ணுங்க பேர அதுல போட்டி போட்டு எழுதுனாங்க! நான் அப்ப கூட சும்மாதான் நின்னேன்! அவங்க என்னையும் எழுத சொல்லி கட்டாயப்படுத்தும்போது எந்த யோசனையும் இல்லாம கள்ளி செடில நான் எழுதின பேரு "கெளரி"! அப்பதான் எனக்கே தெரிஞ்சது, என் மனசுல நீ எப்பிடி பதிஞ்சு போயி இருக்கன்னு! அப்பறம் சொல்லவே வேணாம், புதுசா ஒரு பென்சில் வாங்குனா கூட அது முதல்ல உன் பேரைத்தான் எழுதி பார்க்கும்!" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன்!
இதை சொல்லி முடித்ததும் என் எதிரில் இருந்தவள் கொஞ்சம் நெருங்கி வந்து என் நெற்றியில் முத்தம் ஒன்று இட்டாள்! " நான் வேணா இன்னொருமுறை சொல்லட்டுமா?" என்றேன்! " ம்ம்.. ஆசை..என்றவள் " சரிடா.. அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்குற?" என்றாள்! 

"அது என்ன பெரிய விசயம்? இதே கதையதானே அந்த சித்ராகிட்டையும் சொன்னேன்! அவ தங்கச்சிகிட்டையும் சொன்னேன்! அதான் மறக்காம கரெக்ட்டா ஞாபகம் இருக்கு"ன்னு சொன்னேன்! " கொஞ்ச நேரம் கூட உன் காதல என்னை சந்தோசமா அனுபவிக்க விட மாட்டியாடான்னு?" தலையில் நங்குன்னு ஒரு கொட்டு வைத்தாள்! அதையும் அந்த புள்ளையாருக்கே நேந்து விட்டேன்! " சரி நீ சொல்லு? நான் உன்கிட்ட சொன்னதுக்காக சரின்னு சொன்னியா? இல்லை உன் மனசுலயும் என்னை வச்சு தவிச்சிக்கிட்டு இருந்தியான்னு?" கேட்டேன்!

அவளும் சொல்ல ஆரம்பித்தாள் "சின்ன வயசுல உன்னைய காமிச்சு இவனையே கல்யாணம் பண்ணிக்கிறியான்னு பெரியவங்க கேக்குறப்ப கல்யாணம்னா என்னன்னே தெரியாமத்தான் ஆமான்னு சொல்லுவேன், ஆனா நாள் ஆக..ஆக... என்னையும் அறியாம உன்னை கவனிக்க ஆரம்பிச்சேன்! உன் வீட்ட தாண்டி போகும்போது என் பேச்சையும் மீறி என் கண்ணு உன் வீட்டு வாசல்ல உன் செருப்பு கிடக்கான்னு பார்க்கும்! எந்த தேவையும் இல்லாமையே ஏதாவது ஒரு தேவையை ஏற்படுத்திக்கிட்டு உங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சேன், ஆனா அப்பகூட இந்த மர மண்டைக்கு என் காதலை புரிஞ்சிக்க தெரியல" என்று தலையில் தட்டினாள்.

நானும் விடாமல் "என் மண்டை ஃபுல்லா மூளைனு உனக்கே தெரியும்! அந்த மூளை ஃபுல்லா நீதான்னு அப்ப எனக்கு மட்டும்தான் தெரியும்! அதான் வேற எந்த விசயமும் என் மூளைக்கு ஏறவே இல்லை, சரி..மேல சொல்லு" என்றேன்!

உன் அத்தை,  அத்தை பொண்ணுங்கல்லாம் வர்றது உங்க அம்மாவுக்கு புடிக்குதோ  இல்லையோ.. எனக்குதான் பயங்கர கடுப்பா இருக்கும்! அவளுங்களோட நீ பேசினாவே எனக்கு எங்க வீட்டுல ஒரு வேலையும் ஓடாது.. அப்பவே உன் மடில நான் படுத்துகிட்டு அவளுங்களை "போங்கடி உங்க வீட்டுக்கு...இது எனக்கு மட்டுமே சொந்தமான உசுருன்னு சொல்லத்தோணும்! ஆனா அய்யா.. எந்த கவலையும் இல்லாம அவளுங்களோட கும்மாளம் அடிச்சிக்கிட்டு இருப்பாரு! 

இப்பிடி என்னோட காதல்...ஆசை.. பொறாமை..எல்லாததையும் நெஞ்சுக்குள்ள போட்டு பூட்டி வச்சிருக்கும் போதுதான் நீ வந்து காதல சொன்ன... அப்பவே உன்னை அள்ளிக் கட்டிக்கணும் போல இருந்துச்சு..நீ சொன்ன இடம் கோவில்ங்கிறதால அமைதியா போனேன்" என்றாள்!

"ச்சே... போச்சுடா" என்றேன்! "ஏன் என்னாச்சு" என்றாள்! உன் மனசுல இப்பிடி இருக்கும்னு அன்னைக்கே தெரிஞ்சிருந்தா வேற ஒரு நல்ல இடமா பார்த்து சொல்லியிருப்பேன்! கோவிலுக்குள்ள செருப்போட இருக்க மாட்டேன்னு சொன்னது எவ்ளோ தப்பா போச்சு" என்றேன்!

"அதுக்கென்ன? இப்பவும் வெளிலதான் கிடக்கு.. எடுத்துட்டு வரட்டுமா? என்றாள் சிரித்துக்கொண்டே......

இன்று....

அதே பிள்ளையார் கோவிலில் இருந்தோம்..கௌரியும் அவளது கணவனும் சென்ற பிறகும் எனக்கு என்ன பேசுவதென்று தெரியாமல் வாசலை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்! மனைவிதான் ஆரம்பித்தாள் "இந்த கல்யாணத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்குங்க" என்றாள்! "என்ன ஆச்சர்யம்?" என்றேன்! 

"எவ்வளவோ பேரோட பேசுறோம் பழகுறோம்.. திடீர்னு அப்பா அம்மா மாப்பிள்ளை இவருதான்னு சொன்னதும் இந்த மனசு அப்பவே கணவனா ஏத்துக்க ஆரம்பிச்சிருதே அத சொன்னேன்" என்றவள் அதோடு விடாமல் திடீரென்று கேட்டாள்.. " ஏங்க என்னைத்தான் கல்யாணம் கட்டிக்கணும்னு உங்களுக்கு முதல்ல எப்ப தோணுச்சு?" என்றாள்! அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தேன்... "துப்பாக்கிகள் மாறினாலும் தோட்டா மட்டும் அதேதான்" என்றேன் சிரித்தபடி! அவளுக்கு புரியவில்லை... "என்ன சொல்றீங்க?" என்றாள்! 

அவளுக்கு புரியவும் வேண்டாம்.....


அடுத்த பாகம் படிக்க 


அது ஒரு மழைக்காலம்-9 (பயணங்கள் முடிவதில்லை!) ! 

Tuesday, 28 May 2013

IPL - ஒரு பய(ங்கர)டேட்டா !

பெயர்                                                    - இந்தியன் பிரிமியர் லியெஜ் (IPL)

நிஜ பெயர்                                           -  இந்தியன் பெட்டிங் லியெஜ்(IBL)

தொழில்                                               - சூதாட்டக் கம்பெனி 

உபதொழில்                                         - கிரிக்கெட் போட்டி நடத்துவது 

தலைவர்                                              - அதிக பணம் கட்டுபவன் 

துணை தலைவர்                              - ஸ்பான்சர்ஸ் 

பொழுதுபோக்கு                               - அதை நடிகைகள் பார்த்துக்கொள்வார்கள் 

துணை பொழுதுபோக்கு               - அதை சியர் கேர்ள்ஸ் பார்த்துக்கொள்வார்கள் 

வயது                                                    - பிஞ்சிலே வெம்பிய வயது 

பலம்                                                     - பார்க்கும் ஏமாளிகள் 

பலவீனம்                                             - கொண்டையை மறைக்க தெரியாதது 

சமீபத்திய சாதனை                          - பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்தது 

நீண்ட கால சாதனை                      - பூசணித் தோட்டத்தையே சோற்றுக்குள் மறைத்து வைத்திருப்பது 

சமீபத்திய எரிச்சல்                          - சில பூசணிக்காய்கள் வெளியில் வந்தது 

நீண்ட கால எரிச்சல்                      - சில நாணயமான வீரர்கள் 

நண்பர்கள்                                        - பெட்டிங் கட்டுபவர்கள் 

எதிரிகள்                                            - அதைக் காட்டிக்கொடுப்பவர்கள் 

ஆசை                                                 - எல்லோரையும் விலைக்கு வாங்க 

நிராசை                                             - அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு 

நம்பிக்கை                                        - கிரிக்கெட் வாழ்வுதனை சூது கவ்வும் 

பயம்                                                   - கிரிக்கெட் மறுபடி வெல்லும் 

லட்சியம்                                           - கிரிக்கெட்டை அழிப்பது 

இதுவரை மறந்தது                        - ஏமாளி ரசிகனை 

இனி மறக்க வேண்டியது            - புக்கிகளின் போன் நம்பரை 

மறக்க முடியாதது                        - சில நடிகைகளின் போன் நம்பரை 

விரும்புவது                                     - சூதாட....

விரும்பாதது                                   - அதில் மாட்டக் கொள்ள..


Sunday, 21 April 2013

காங்கிரசும் பின்னே வடிவேலு காமெடியும்!


சமீபத்துல காங்கிரஸ் பேஸ்புக் கணக்கு துவங்கியது சோர்ந்து கிடந்த இணைய விரல்களை எல்லாம் தூக்கி நிறுத்தி துடி துடித்து கருத்துக்களை அள்ளி தெளிக்க வச்சுருக்கு! ஆடுகள் மேய போகலாம் இல்லைனா போடறத திண்ணுக்கிட்டு வீட்ல சும்மா கிடக்கலாம்! ஆனா கழுத்துல மாலைய போட்டுக்கிட்டு ஊர்வலம் போனா? அதுவும் ஊரே ஈழப் பிரச்சனைல கொலை வெறியோட தேடிகிட்டு இருக்கிற ஒரு ஆடே கழுத்துல மாலைய போட்டுக்கிட்டு பலி பீடத்துல தலைய வச்சு தூங்குனா?

ஆஹா...ஊரே வெட்டி வெட்டி கொண்டாடும்போது நாம மட்டும் சும்மா இருந்தா சாமி குத்தம் ஆயிறாது? அதான்.. நம்ம பங்குக்கு நானும் கொஞ்சம்.....!

                                      

சத்திய மூர்த்தி பவனில் வேட்டியை இறுக்கிப் பிடித்தபடி ஞானதேசிகன் இருக்கிறார்!

அப்போது ஒரு அல்லக்கை வேகமாக ஓடிவருகிறார்! "தல..தல... பேஸ்புக்ல நம்ம சங்கத்து ஆள அடிசிகிட்டு இருக்காங்க தல... அடிச்சா கூட பரவாயில்ல தல... அசிங்கம் அசிங்கமா திட்டுறாங்க தல... வந்து என்னான்னு கேளுங்க தல"

"(ஞானதேசிகன் வேகமாக எந்திரிக்கிறார்) கமெண்ட்டு போட்ரவனுங்களுக்கு கட்டம் சரியில்ல.... நம்மள அடிச்சு..அடிச்சு... ஆடறதே அவனுங்களுக்கு வேலையா போச்சு! லாகின்ன்ன் பண்றா அக்கவுன்ட்ட..."

 (ரெண்டு அல்லக்கைகள் இதைப்பார்த்து... "தலைவர் கோவமா போறத பார்த்தா இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே?" என்று பேசுகின்றனர்)

 லாகின் பண்ணி "என் சங்கத்து ஆள திட்டுனவன் எவண்டா?" அப்பிடின்னு ஸ்டேடஸ் போடுகிறார்!

 முதல் கமெண்ட் வருகிறது.... " அரை மணி நேரம் முன்னாடித்தானே நல்லா வாங்கிகட்டிகிட்டு ஓடி போன?"

 "அது அர மணி நேரம் முன்னாடி... நான் கேக்குறது இப்ப"

 "மாப்ள ******** இங்க வாடா...பொழுது போகலைன்னு சொன்னியே? " 

"ஏய்ய்ய்... பேச்சு பேச்சா இருக்கும் போது அது டேக் பண்ணி கூப்புடற பழக்கம்? ராஸ்கோல்... என்ன சின்னபுள்ளத் தனமா இருக்கு?"

 "அப்பறம் ஏன்யா இங்க வந்த?"

 "ஏய்.. ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா இருந்தா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு எங்க சங்கத்து ஆள அடி!"

 "எப்பிடியும் லூசுத்தனமாத்தானே கேப்ப..கேளு..கேளு..." "காங்கிரசுல தொண்டர்கள் அதிகமா? இல்ல கோஷ்டிகள் அதிகமா?"

 "ஹா..ஹா... சத்தியமூர்த்திபவன்ல கிழிஞ்ச வேஷ்டிகள்தான் அதிகம்!"

 "ஒத்துக்கிறேன்....உன் தாய் பத்தினின்னு ஒத்துக்கிறேன்.... இப்ப போறேன்..திரும்பி......

 "திரும்பி? "வர மாட்டேன்னு சொல்ல வந்தேன்"

 "திரும்பி வர்ற எண்ணம் வேற இருக்கா? வர்ற எலெக்சன்ல வோட்டு கேக்க வருவியா?"

 "வேணாம்...."

 "என்ன வேணாம்? இனிமே இலங்கைக்கு சப்போர்ட் பண்ணுவீங்களா?" 

"வேணாம்.." 

"இனி காமராஜர் ஆட்சி அமைப்போம்னு பேசுவியா?" 

"வலிக்க்குது....."

 "எலெக்சன்ல தனியா நிப்பீங்களாமே?"

 "அழுதுருவேன்...... அழுதுருவேன்....."

 எல்லாம் முடிந்து ரூமில் கவலையோடு களைப்பாக இருக்கிறார்! அதைப்பார்க்கும் இரண்டு அல்லக்கைகள்

 " திட்டிக் கமெண்ட் போட்ட தலைவரே இவ்ளோ டயர்டா இருக்கார்னா... திட்டு வாங்குனவன் எல்லாம் உசுரோட இருப்பான்னு நினைக்கிறியா நீயி?" ன்னு பேசிக்கொண்டே சொல்கின்றனர்!

 இதைக்கேட்ட ஞானதேசிகன் "இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கி வக்கிரானுங்க..இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது? என்று வெள்ளந்தியாகக் கேட்கிறார்!

**********************************************************************


                                                  

அடுத்து தமிழகத்தின் விடிவெள்ளி தங்கபாலு தனது அறையில் காதில் ரத்தம் வர உக்கார்ந்திருக்கிறார்!

அவரை சுற்றி நாலைந்து அல்லக்கைகள் அமர்ந்து... "இவ்வளவு ரத்தம் வர திட்டியிருக்காங்களே? எத்தனை பேரு தல திட்டுனாங்க?"

 "அதுவாடா தம்பி... "காலை வணக்கம்னு" ஒரு ஸ்டேடஸ்தான் போட்டேன்... மொதல்ல ஒரு மூணு நாலு பேருதான் திட்டுனாங்க... திட்டிகிட்டே இருக்கும்போது அதுல ஒருத்தன் இன்னொருத்தனுக்கு டேக் பண்ணி... ப்ரீயா இருந்தா வாடா மச்சான்..பீசு ஒண்ணு சிக்கியிருக்குன்னு கூப்பிட்டான்! அதுக்கு அவன் சொன்னான்.. "நான் ஞானதேசிகன திட்டுறதுல பிசியா இருக்கேண்டா...நீ முடிச்சதும் சொல்லுன்னு சொன்னான்... சரின்னு இவனுங்க முடிச்சதும் அவனுங்கள டேக் பண்ணிட்டு போய்ட்டானுங்க... அவனுங்க ஒரு ஏழு பேருடா...அவனுங்கனால எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டுனானுங்க... எல்லாம் திட்டி முடிச்சதும் அடுத்த ஸ்டேடஸ் போடுன்னு சொல்லி விட்டுட்டானுங்க... சரி வீட்டுக்குத்தான் போக சொல்லிட்டானுங்கன்னு நம்ம்ம்பி..நன்றின்னுதாண்டா இன்னொரு ஸ்டேடஸ் போட்டேன்.... அதுல ஒரு பதினோரு பேருடா... மூச்சு தெனற தெனற திட்டுனானுங்க...சரி திட்டிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்" 

"விட்டுடீங்களா? நீங்க திரும்பி அவங்கள திட்டல?

 "இல்ல..."

 "ஏன் தல?'

 "அதுல திட்டும்போது ஒருத்தன் சொன்னான்... இவன் எவ்வளவு திட்டுனாலும் தாங்குறான்...இவன் ரொம்ம்ப நல்ல்ல்லவன்னு ஒரு வார்த்த சொல்லின்ட்டாண்டா..நானும்ம்..வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது..ம்ம்ம்..ம்ம்..ம்...!"

 ***********************************************************************

                                      

அடுத்து நம்ம அல்ட்டிமேட் ஸ்டார் நாராயணசாமி கவலையோடு தன் அறையில் அமர்ந்திருக்கிறார.

அப்போது அங்கு வரும் அல்லக்கை.... "தல..ஏன் தல சோகமா இருக்கீங்க?"

 "அத ஏண்டா கேக்குற? ஏதோ பேஸ்புக்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டாங்களாம்.. அந்த பாஸ்புக்க கூட என்கிட்டே காமிக்கல.. அதுவாது பரவாயில்ல ATM கார்டையாவது காமிக்கலாம்ல?"

 "ஐயோ..தல... பேஸ்புக் அக்கவுண்ட்னா பேங் அக்கவுண்ட் இல்ல... அது சோசியல் நெட்வொர்க்..." என்று கூறியபடி ஓப்பன் பண்ணி காங்கிரஸ் பக்கத்தை காமிக்கிறார்!

 "என்னடா இது? ஒவ்வொருத்தர் ஸ்டேடஸ்க்கும் ஆயிரம் ரண்டாயிரம்னு லைக் இருக்கு? காங்கிரஸ்ல மொத்தப் பேரே அவ்வளவு இல்லையேடா?"

 "ஐயோ தல... அதுல பாதி பேக் ஐடி.. அவங்கவங்க நியூஸ் வரும்போது பேக் ஐடி வச்சு லைக் போட்டுக்கிறாங்க..நாமளும் ஆயிரக்கணக்குல பேக் ஐடிய கிரியேட் பண்ணுவோம்"

 "அட போடா.. என் ஒரிஜினல் போட்டோவ போட்டாவே பேக் ஐடின்னுதான் சொல்லுவானுங்க இதுல பேக் ஐடி வேற தனியா? வெளங்கும்ம்ம்"

 "அப்ப உங்க பங்குக்கு இந்த பேஜ்ல ஏதாவது பண்ணுங்க தல"

 (சரி என்றபடி ஏதொ செய்துவிட்டு வருகிறார்...)

 "என்ன தல? என்ன பண்ணுனீங்க?"

 "சக்சஸ்..சக்சஸ்..."

 "அப்பிடி என்ன தல பண்ணுனீங்க?"

 "இன்னும் 15 நாட்களில் பேஸ்புக் அக்கவுண்ட் திறந்துவிடுவேன் இப்படிக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமின்னு ஸ்டேடஸ் போட்டு வந்துருக்கேன்" 

"அட ராமா... சும்மாவே ஆடுவானுங்க...இதுல சலங்கைய வேற கட்டிவிட்டு வந்துருக்கீங்க... மீ த எஸ்கேப்ப்ப்ப் "

 "அப்பிடி என்ன நான் தப்பா பண்ணிட்டேன்?" நாராயணசாமியின் கேள்விக்கு பதில் சொல்லவும்!

 இது நகைசுவைக்காக மட்டுமே யாரையும் புண்படுத்த அல்ல! :-)


Friday, 1 March 2013

அது ஒரு மழைக்காலம் - 7 (மதுரை வாசம் ) !
அன்று.

மணக்கோலத்தில் நானும் கௌரியும் சிரித்துக்கொண்டிருந்தோம்! இந்த போட்டோகிராபர் தொல்லை வேற.. கரெக்ட்டா கௌரிய திரும்பிப் பார்த்து ரசிக்கிற நேரமா பார்த்து " சார்.. கொஞ்சம் திரும்புங்க சார்.. என்று ஒரு ஸ்நாப் எடுக்கணும்"ன்னு சொல்லிகிட்டே இருந்தான்! காலைல இருந்து அவ பக்கத்துலே இருக்கேன், ஆனா ஒரு வார்த்தை கூட பேச முடியல! ஆனாலும் அவள் அருகாமை தந்த வாசம், இனி இவள் எனக்குச் சொந்தமானவள் என்ற நினைப்பு தந்த உரிமையில் அவ்வப்போது அவள் விரல் கசக்கி கை கோர்த்த நிமிடங்கள் என ஒவ்வொரு நிமிடமும் மழை நேரத்தில் கேட்கும் ராஜாவின் இசையைப்போல ரசனையாக சென்றது!

மண்டபத்தோடு நண்பர்களும் போய் விட வீட்டில் எஞ்சியிருந்த சொந்தங்களும் போய்விட... நானும் அவளுமே பேசிக்கொள்ளத் தோதாக ஒரு முன்னோட்டத் தனிமை கிடைத்தது எங்களுக்கு! மெதுவாக அவள் அருகில் போனேன்! அவள் வெட்க்கப்பட்டுப் பின்வாங்கினாள்.. "அட.. உனக்கு கூட வெட்க்கப்பட வருதே?" என்று ஆச்சர்யம் கட்டினேன்! இன்னும் வெட்க்கப்பட்டாள்!

 பெண்களின் வெட்கம் இவ்வளவு அழகானதா? அவள் விரல் பிடித்தேன்... இன்னொரு கையால் எட்டி என் தோள்களில் அடித்தாள்! இப்ப எதுக்கு அடிக்கிற? என்றேன்... இன்னொரு அடி விழுந்தது... திடுக்கிட்டு முழிச்சேன்! கர்ண கொடூர கோபத்தோடு அப்பா.. "ம்ம்ம்.. ஏன்டா எவ்வளவு நேரமா கரடி  மாதிரி கத்திகிட்டு இருக்கேன்.. மதுரை வந்தாச்சு..இறங்குடான்னு... பாரு பஸ்ல ஒருத்தர் கூட இல்லை! எறங்கித்தொலைடா... இதுல வேற எதுக்கு அடிக்கிறன்னு ஒரு கேள்வி? பத்து மணிக்கு எந்திரிக்கிற நாயெல்லாம் எதுக்கு காலங் காத்தால நானும் வர்றேன்னு வரணும்?" என்று அர்ச்சனையை ஆரம்பித்தார்! இனி அவர் நிறுத்த மாட்டார்!

ஆனாலும் எனக்கு உடனே அந்தக் கனவில் இருந்து வெளியே வர மனசே இல்லை! அதன் பிறகு எந்த பஸ் எடுத்தோம் எங்கு இறங்கினோம் எதுவுமே எனக்கு தெரியாது! முடிவு தெரியாமல் கலைந்த அந்த கனவுக்குள்ளேயே கரைந்து கிடந்தேன்! திருமண மண்டபம் போனதுமே கௌரியதான் தேடினேன்! இந்தக் கனவை அவளிடம் சொல்ல வேண்டும்! எட்டி அவள் கை பிடித்த அந்த நிமிடங்களோடு நிறுத்தி "ம்ம்.... அப்பறம்?" என்று அவள் ஆவலோடு கேட்க்கும்போது கனவு கலைந்ததை சொல்லி விட்டு அவள் முகத்தில் வரும் ஏமாற்றம் கலந்த வெட்கத்தை ரசிக்க வேண்டும்! இப்படி கலவையான எண்ணங்களோடு அவளைத் தேடிக்கொண்டிருந்தேன்! குறுக்கும் நெடுக்குமாக அலைந்த தாவணிப் பெண்களையும் சுடிதார் பெண்களையும் கவனிக்கத் தோண வில்லை! அம்மாவும் அப்பவும் கூட கூட்டத்தோடு கரைந்து விட்டார்கள்!

திடீரென்று கைகளைத் தென்றல் தீண்டியது! நரம்புகளின் வழியாக மின்சாரம் மூளைக்குள் பாய்ந்தது! சடாரென திரும்பினால்... கௌரி என் கைகளை பிடித்தபடி! இப்படியெல்லாம் சொல்ல ஆசைதான் ஆனா.. எனக்கு அப்படியெல்லாம் தோணல! திருவிழாவில் பலூன் வாங்கித் தரச் சொல்லும் குழைந்தையை கை பிடித்து இழுத்துச் செல்லும்  அம்மாக்களை பார்த்திருக்கீர்களா? அப்படித்தான் என்னை இழுத்துப்போனாள் தறத் தறன்னு! 

மண்டபத்திற்கு கொஞ்ச தூரத்தில் உள்ள ஒரு சின்ன பிள்ளையார் கோவில் அது! உள்ளே சென்றோம், அங்கு பிள்ளையார் மட்டும் யாராவது துணைக்கு வருவார்களா என்று பார்த்தபடி தனியாக இருந்தார்! அப்போதுதான் மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூக்களும், அங்கு அழகான பெண்கள் வந்து சென்றார்கள் என்பதற்கு அடையாளமாக பசங்களின் மனதுமாக இரண்டும் சிதறிக்கிடந்தன!

முதலில் போய் பிள்ளையாரை வணங்கிவிட்டு வந்தாள்! அப்போதுதான் அவளை நன்றாகப் பார்த்தேன்! பச்சைக் கலர் பாவாடை தாவணியில் அந்த ஊரு மீனாட்சிக்கு சவால் விட்டு அழகாக இருந்தாள்! ஜடை பின்னாமல் குதிரை வால் போட்டு அதில் கனகாம்பரம் வைத்திருந்தாள்! அவள் காதில் உள்ள தொங்கட்டான் அவள் என்ன வேண்டுகிறாள் என்று தெரிந்துகொள்ள ஆடிப்பார்த்து முயற்சி செய்துகொண்டிருந்தது! 

காதோரத்தில் சுருண்டமுடி அதை ஆடாதே என்பதுபோல் உரசிக்கொண்டு இருந்தது! கழுத்தில் உள்ள தங்க சங்கிலி ஏதோ.. நானுந்தான் இருக்கேன் என்பதுபோல அவள் தாவணி முந்திக்குள் ஒளிந்துகொண்டு எட்டிப்பார்த்தது! கால் கொலுசு அப்பாடா என்பதுபோல் சத்தம் இல்லாமல் ஓய்வில் இருந்தது! அவள் மட்டும் கைகளை கூப்பியபடியே இருந்தாள்! ஆனாலும் நான் பார்ப்பதை உணர்ந்திருக்க வேண்டும், படக்கென்று திரும்பினாள்! எதிர்பாராத இந்த தாக்குதலால் நான் முழித்துக்கொண்டிருக்க.. " சரியான கேடிடா நீ.. சமயம் கிடைச்சா என்னையவே சைட் அடிக்கிற? என்றவாறே கொஞ்சம் விபூதி எடுத்துப் பூசிக்கொண்டு என் நெற்றியிலும் வைத்தாள்!

என் எதிரே உட்கார்ந்தவள் " டேய்.. இன்னைக்கு என்ன புதுசா பார்க்கிற மாதிரி பார்க்குற? இப்பிடியெல்லாம் பார்த்தா அப்பறம் வாழ்க்கைல முதல்முறையா நான் வெட்க்கப்பட வேண்டிவரும்! அதெல்லாம் உன்னால தாங்க முடியாது" என்றாள்! "சரி, என்ன பண்ணலாம் சொல்லு?" என்றேன்! "சரியான டியூப்டா நீ, என்னைய சைட் அடிக்க நானே உன்னைய மதுரைக்கு வர சொல்லணும், தனியா பேச நானே இந்த கோவிலுக்கு கூட்டி வரணும், இப்ப எங்கயாது போகலாம்னா, அதையும் என்கிட்டே கேக்குற? உன்னைப்போய் காதலிச்சேன் பாரு? என்னைய சொல்லணும்" என்றாள்!

 " சரி, அதான் தெரியுதுல்ல? விடு.. படத்துக்கு போவமா?" என்றேன்! "போடா.. சுத்தி நூத்துக்கணக்குல ஆளுங்கள வச்சிக்கிட்டு பேசவா நான் மதுரை வந்தேன்? உன்கூடவே.. உன்கூட மட்டுமே இருக்கணும்.. அழகர்கோவில் போகலாமா? என்றாள்! " ச்சே..வேணாம் கைல வண்டி இல்லை, பஸ் எடுத்து போயிட்டு வர்றதுக்கு லேட் ஆயிரும், எப்பிடியும் நாலு மணிக்கு மேலதான் எல்லோரும் கிளம்புவாங்க பக்கத்துலதான் திருப்பரங்குன்றம், அங்கபோகலாம்னு சொன்னேன்!

என்னை ஆழமாக பார்த்தவள் " டேய்.. எனக்கு எந்த கோவில், எந்த இடம் எதுவும் முக்கியம் இல்லை! உன்கூட நான் தனியா இருக்கணும் அவ்வளவுதான்! எங்க சாமி கும்பிட்டாலும் நான் உனக்காகத்தான் கும்பிடுவேன்! என்னதான் உன்னைய திட்டினாலும் ஊர்ல பஸ் ஏறுனதுல இருந்து உன்னை இங்க பார்க்கிற வரைக்கும் நான் தவிச்ச தவிப்பு எனக்குதான் தெரியும்! ஏதோ இந்த கல்யாணமே நமக்குத்தான் என்கிற மாதிரியே நீ கரெக்ட்டா வந்துரணும்னு எவ்ளோ படபடப்பா இருந்துச்சு தெரியுமா? என்று கண்கலங்கினாள்! " ஹேய்..லூசு.. விடு, இன்னைக்கு பஸ்ல வரும்போது நமக்கு கல்யாணம் ஆகுற மாதிரி கனவு கண்டேன் தெரியுமா?" என்றேன். "அப்படியா? என்று சகஜமானவள் " என்ன வந்துச்சு? சொல்லு" என்று ஆர்வமானாள்!

" அதெல்லாம் அப்பறம் சொல்றேன், அதுல நடந்த ஒரு காமெடி மட்டும் சொல்றேன், நாம ஸ்டேஜ்ல நிக்கும்போது போட்டோகிராபர் போட்டோ எடுத்துகிட்டு இருந்தாரு, திடீர்னு பின்னாடி ஒரே வெளிச்சம், போட்டோகிராபர் "யாருயா பின்னாடி லைட்ட போட்டதுன்னு" கத்த, லைட் எல்லாம் ஆப் பண்ணித்தானே இருக்குன்னு நான் சொல்றேன், ஒரே குழப்பம், வெளிச்சம் எப்பிடி வந்ததுன்னு? அப்பறம் பார்த்தா? ன்னு இழுத்தேன், அவளும் ஆர்வமாக " அப்பறம் என்னடா?" என்றாள், சேருக்கு பின்னாடி இருந்து உன் அப்பா எந்திரிக்கிராரு! ஏதோ தேங்காய் வைக்க வந்தாராம்... அவரு குமிஞ்சு தேங்காய் வைக்க போகத்துக்க.. அவரு மண்டைல இருந்துதான் அந்த வெளிச்சம் வந்துருக்கு" என்றேன்! "கனவுல கூடவாடா எங்க அப்பாவ இழுப்பன்னு?" துரத்த ஆரம்பித்தாள்! 

இன்று

அதே மதுரை! அதே சொந்தகார வீட்டு கல்யாணம்! எப்படியும் கௌரி வருவாள் என்று தெரியும், அதனால் அங்கு போவதை தவிர்க்கப்பார்த்தேன்! ஆனாலும் மனைவி விடவில்லை! மண்டபத்தில் பார்த்தேன், நல்லவேளை அவள் வரவில்லை! கொஞ்ச நேரத்தில் எனக்கு ஏதோ அந்த பிள்ளையார் கோவில் போகணும் போல தோன்றியது! மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கு போனேன்! அந்த கோவில் நிறைய மாறியிருந்தது! பிள்ளையார் வசதியாக மாறிவிட்டார் போல? உள்ளே போனதுமே இதயத்தில் இரும்புப் பொதியாய் இறங்கியது! கௌரி அவள் கணவன் குழந்தையோடு இருந்தாள்! அவள் என்னை கவனித்தாளா தெரியவில்லை! அப்படி ஓரமாக நின்று கொண்டேன்!

மனைவியும் குழந்தையும் சாமி கும்பிட்டு வந்ததும் போகலாம் என்று அவசரபடுத்தினேன்! ஆனாலும் அவள் விட வில்லை " சாமி கும்பிட்டு உட்காராம போககூடாது என்று என் கைகளையும் பிடித்துக்கொண்டு அவர்கள் எதிரிலே உட்கார்ந்தாள்! நான் அவர்கள் பக்கம் நிமிரவே இல்லை! மனைவிதான் ஆரம்பித்தாள் " ஏங்க அழகர் கோவில் போயிட்டு போகலாமா? என்று! அதே நேரத்தில் கௌரியின் கணவனும் அவளிடம் கேட்டான் " கௌரி.. பக்கத்துலதான் திருப்பரங்குன்றம், போயிட்டு போகலாமா?" என்று! என்னையும் மீறி வந்த துளி கண்ணீரை அடக்கிக்கொண்டு அவளை நிமிந்து பார்த்தேன்! அவளும் அதே அவஸ்தையோடு என்னைப்பார்த்தாள்! இதையும் அந்த பிள்ளையார் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்!


அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம்-8 ( பழைய நினைவுகள் ) !
அது ஒரு மழைக்காலம் - 6 (பயணக்காலம்) !

அன்று....

மீண்டும் ஒரு வெள்ளிக் கிழமையின் அதிகாலை! வழக்கத்தைவிட அதிக உற்சாகமாகவே எழுந்துவிட்டேன். காரணம்? நான் உற்சாகமாக இருப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க போகிறது? ஆமாம்... நீங்கள் நினைத்தது சரிதான்! என் கௌரியை பார்க்க போகும் சந்தோசம்தான்! ஆனால், இந்தமுறை அந்த அம்மன் கோவிலில் அல்ல.அந்த அம்மன், எங்கள் வசந்த மாளிகை அப்பறம் என் கெளரி கூடவே தொத்திகிட்டு வரும் அந்த சுருட்டை சுதா.. இப்படி வழக்கமான எல்லாவற்றையும் தாண்டி ஒரு புது இடத்தில் புதுச் சூழலில் சந்திக்கப்போகிறோம்! ஆமாம்.. எங்கள் இரண்டு வீட்டுக்கும் கொஞ்சம் நெருக்கமான ஒரு உறவு வீட்டு திருமணம் மதுரையில் நடக்கிறது. முதல் நாள் இரவே அங்கு சென்று விடலாம் என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள்!ஆனாலும் என் இந்த உற்சாகத்திற்கு காரணம்.... என் கெளரி என்னிடம் முன்னாடியே சொன்ன தகவல்தான்! அவள் வீட்டில் இருந்தும் முதல் நாளே அங்கு வருகிறார்களாம்! அம்மா வந்து என்னிடம் ஒரு பேச்சுக்காக வருகிறாயா என்று கேட்ட போதே நான் உடனே வருகிறேன் என்று துள்ளி குதித்த காரணமும் இதுதான்!இப்போது என் வேண்டுதல் எல்லாம் ஒரே பஸ்ல அவகூட போகணும்... அவ கை பிடிச்சிகிட்டு மதுரையின் மாட வீதிகளில் நடக்கணும், விரல்களை கோர்த்துக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவில் பொற்தாமரை குளத்தில் கால் நனைக்கணும், எத்தனையோ காதல்களை பார்த்த வைகை ஆற்றங் கரையில் அவளோடு உட்கார்ந்து கதை பேச வேண்டும்..இப்படி எத்தனையோ ஆசைகளை மனதுக்குள் தேக்கி வைத்து நானும் வலம் வந்து கொண்டிருந்தேன்!நினைவுகளை மனதுக்குள் தேக்கி வைத்து சுமக்க முடியாமல், வழக்கமாக நாங்கள் சந்திக்கும் அந்த அம்மன் கோவிலில் உள்ள ஒற்றை வேப்ப மரத்தடியில் போய் தனியாக அமர்ந்தேன். இந்த கோவிலும் காலம் காலமாக எத்தனை காதல்களை பார்த்திருக்கும்? ஜெயித்தவர்கள் அம்மனே காரணம் என்று உள்ளே போவார்கள், தோற்றவர்கள் இதோ இந்த ஒற்றை மரத்தடியில் அமர்ந்து தன் காதலின் நினைவுகளை இந்த மரத்தின் காதுகளில் காற்றின் வழியே சொல்லி விட்டு செல்வார்கள்!சாமி கும்பிடுவதில் அதிகமாக ஆர்வமில்லாத நான் கூட என் காதலின் வெற்றியை கர்வமாக இந்த அம்மனிடம் சொல்லவாது என் கௌரியோடு கை பிடித்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்! ஆனால் அப்போது தெரியவில்லை..... வேப்ப மரத்து உச்சியில் பேய்தான் இருக்கும் என்பார்கள், ஆனால் எனக்கான விதி என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்ததை!பாருங்க... இந்த காதலே இப்பிடிதாங்க! சந்தோசமா ஆரம்பிச்சேன்... திடீர்னு சோகமா போயிட்டேன்... அந்த மரத்தடியில் சென்று அமரும்போதே எங்களின் அந்த முதல் நாள் உரையாடல்  மனதினில் வந்து போனது!

அது என்னன்னே தெரியல... கௌரின்னு அவ பேரை நினைச்சாவே போதும், மெசேஜ்ல டிக்சனரி போட்டு டைப் பண்ணும்போது போட்டி போட்டு வந்து விழுகுற வார்த்தைகள் மாதிரி அவளோடு நான் இருந்த நினைவுகளின் அணிவகுப்பும் வரிசையா வந்து நிக்கும்! நேற்றும் அப்பிடிதான்... என் வீட்டு போன் அடித்தது... நான்தான் போய் எடுத்தேன்... எடுத்து ஹலோ சொன்ன எனக்கு இன்ப அதிர்ச்சி.. காரணம் எதிர்முனையில் என் கெளரி! " ஹலோ..லோ..லோ.. அந்தப்பக்கம் அவள் கத்திக்கொண்டிருந்தாள்! அதிர்ச்சியில் இருந்து மீண்டு "ஹலோ.. ஹேய்... என்று தடுமாற ஆரம்பித்தேன்!மறுமுனையில் அவள் " ஏன்டா.. பொறுக்கி... கஷ்டப்பட்டு யார் கண்ணுலயும் படாம பூத் வந்து போன் பண்ணிக்கிட்டு இருக்கேன்... போன எடுத்து காதுல வச்சிக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று பொறிந்தாள்! " ஹேய்.. கெளரி.. நான் உன்னைத்தான் நினைச்சிகிட்டே இருந்தேன்... கரெக்ட்டா நீயும் போன் பண்ணினியா..அதான் சந்தோசத்துல பேச்சே வரல" என்றேன்! " புளுகாதடா... சரி... அந்த சித்ரா வீட்டுக்கு வந்தாளே... அவ சொந்தகார பொண்ணு தேவி.. அவ ஊருக்கு போயிட்டாளா?" என்றாள்.

நானும் ஆர்வ கோளாறுல " ஹேய்.. அவ காலைல எட்டு மணி பஸ்ஸுக்கே போய்ட்டாடாடா......" என்று பாதியிலே நிறுத்தி நாக்கை கடித்து கொண்டேன்! ரைட்டு.. இன்னைக்கு சனியன் போன் வேசத்துல வந்துருச்சு!


" ஏன்டா.. பொறுக்கி.. அப்ப அவ பின்னாலே நீ பஸ் ஸ்டாண்ட் போயிருக்க? போகாம எப்பிடி அவ போன பஸ் டைம் எல்லாம் தெரியும்? இதுல வேற என்னையவே நினைச்சிகிட்டு இருந்தாராம்?" என்று மடக்கினாள்! எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, நல்ல வேளை அவ லக்கேஜ் எல்லாம் நான்தான் சைக்கிள்ள வச்சு கொண்டு போனேன்னு சொல்லல!கொஞ்ச நேரம் திட்டி விட்டு அவளே அமைதியானாள்! லவ் பண்றதுல இதாங்க பிரச்னை, எந்த நேரத்துல எந்த பால் வரும்னே தெரியாது! நல்ல ஃபுலோல போகும்போது  திடீர்னு பவுன்ஸ் பால் வந்து மூஞ்சிய பதம் பார்த்திரும்! வேற என்ன பண்றது? மூஞ்சிய துடைச்சிகிட்டே அவ சொல்றத கேக்க ஆரம்பிச்சேன்... " டேய்.. நல்ல கேட்டுக்க.. நாளைக்கு நைட்டு ஒரு கல்யாணத்துக்காக நாங்க மதுரை போறோம்... கோவிலுக்கு வர முடியாது, அனேகமா உங்க வீட்லயும் நாளைக்கு வருவாங்க, ஏன்னா அவங்க உங்களுக்கும் சொந்தம், அதனால நீயும் எப்பிடியாவது வந்துரு... அத விட்டுட்டு... நான் இந்த பக்கம் மதுரை போனதும் அந்த பக்கம் கோவில்ல போய் சித்ரா, சுதான்னு திரிஞ்ச... மவனே....ஊருக்கு வந்ததும் உனக்கு இருக்கு" என்று சொர்ணாக்கா மாதிரி மிரட்டினாள்!நானும் விடுவனா " ஐயோ.. என்ன கெளரி? அந்த சப்ப மூக்கி சித்ராவ நானாவது...பார்க்கிரதவாது? மீனாட்சி இருக்கிற இடம்தான் சிவனுக்கு மதுரைங்ர மாதிரி... எனக்கு நீ இருக்குற இடம்தான் கோவில்" என்றேன்! அந்த பக்கம் கோபம் மறைந்து சிரிப்பொலி கேட்டது... "டேய்..பொறுக்கி...இந்த வாய் மட்டும் இல்லை... உன்னை என்னைக்கோ நான் தலை முளுகிருப்பேன்" என்றாள்! அப்பவும் நான் விடாமல்.. " ச்சே..நீ குளிக்க இருந்த ஒரு சான்சும் என்னாலதான் போச்சா?" என்றேன்... " டேய்ய்...என்றாள்... காசு முடிந்தது போல..போனும் டொய்ங்ங்... என்றது!இன்று 

நான் மட்டும் வீட்டில் இருதேன், மனைவியும் பொண்ணும் ஏதோ வாங்குவதற்காக பஜார்  சென்றிருந்தார்கள்.  டிவியில் ஏதோ மெகா சீரியல் விளம்பரம் வந்து கொண்டிருந்தது! கிட்ட தட்ட எல்லா பெண்களுமே யாரிடமோ.. ஏய்ய்..என்று விரல் நீட்டி சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள்! அப்போது பார்த்து போன் சிணுங்கியது... எடுத்து "ஹலோ.. என்று விட்டு அந்த சவால் விட்ட பெண்ணின் புருஷன் கதியை ஒரு நிமிஷம் நினைத்தேன்... அதற்குள் அந்த பக்கம் " ஹலோ..லோ..லோ... என்று கத்தி கொண்டிருந்தாள்! எஸ்.. நீங்கள் நினைத்தது சரிதான்... மனைவிதான்! " ஒருத்தி இந்த பக்கம் கரடியா கத்துறேன்... போன எடுத்து காதுல வச்சிக்கிட்டு அப்பிடி  என்ன  ஆ.ஆ..ன்னு பார்க்கிறீங்க?" என்றாள்! அது ஒண்ணுமில்லை என்று சொல்ல  வாயெடுத்தேன்.. அந்த பக்கம் என் பொண்ணின் குரல் கேட்டது " எஸ் மம்மி...இந்த டேடி எப்பவுமே இப்பிடித்தான்... எப்போதும் ஒரு ஞாபகத்துல இருக்க மாட்டாரு.. " என்றாள். ஆமாம்... இப்போதும் எனக்கு என் கௌரியின் ஞாபகம் வந்து போனதை என்னால் தவிர்க்க முடியவில்லை!
அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம் - 7 (மதுரை வாசம் )

அது ஒரு மழைக்காலம் -5 ( காதல் காலம் ) !
முந்தைய பாகம் !

அன்று

அது ஒரு வெள்ளிக்கிழமை. வழக்கமாக வெள்ளிக்கிழமை என்றாலே எனக்கு அதிகாலையே விழிப்பு வந்துவிடும்.அதிகாலை விழிக்கிறேன் என்பதைவிட முதல்நாள் இரவில் இருந்தே தூக்கம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம்?.. என் கௌரியை பார்க்கபோகிறேன் என்ற நினைப்பைத்தவிர வேறு என்ன காரணம் இருக்கப்போகிறது? அவளை பார்க்கப்போகும் அந்த நாளில் மட்டும் என் ஒவ்வொரு செய்கையின் உந்துசக்தியாக அவள்தான் இருப்பாள். எங்கள் வீட்டிலும் நான் பொறுப்பாக கோவிலுக்கு செல்வதாக நினைத்துக்கொண்டார்கள்.எனக்குத்தானே தெரியும்... நான் பார்க்கப்போவது அந்த அம்மனை அல்ல.. என் தேவதையை என்று! மழைத்துளிக்காக வானம் பார்த்து காத்திருக்கும் மண் போல என் தேவதையின் வரவுக்காக நானும் காத்திருக்க தொடங்கினேன். என் உயிரை ஏழு கடல்.. ஏழுமலைகள் தாண்டிஎல்லாம் நான் வைக்கவில்லை, என் தேவதையின் இதயக்கூட்டுக்குள் பத்திரமாக வைத்துவிட்டு என் உயிரைப்பார்க்க நானே காத்திருந்தேன்.திமிரும் கூட்டத்தால் திணறிச்செல்லும்  பேருந்துபோல.. அவள் நினைவுகளால் நிரம்பிய என் பொழுதுகளும் திணறிக்கொண்டு மெதுவாகவே நகர்ந்தது. வழக்கம்போல அந்த அம்மன் கோவிலுக்கு வெளியே அமர்ந்தேன். அந்த அம்மனும் அங்கே  என்னைப்  பார்த்ததும் கோபம் கொண்டது  போல? என் முகத்தைப்  பார்க்க புடிக்காம  கரண்ட் கட் ( அப்பவே! ).. கரண்ட் கட்டானா என்ன? சிரிப்புல மின்சாரமும்..கண்களில் மின்னலையும் வச்சிருக்கிற என் தேவதை வந்ததும் பாரு.. நீயே உன் முகத்தைப்  பார்க்க முடியாம திரும்பிக்க போறன்னு அம்மனுடன் மனதுக்குள் சண்டை போட துவங்கினேன்.அம்மனும் எனக்கு  பயந்துகிட்டு என் தேவதையை உடனே வரவைத்துவிட்டாள். அதோ..தூரத்தில் என் தேவதை.. கைகளில் விளக்கை ஏந்தி..இதயத்தில் என்னை ஏந்தி.. என் தவிப்புகளை காலடியில் போட்டு  மிதித்து நடந்து வந்தாள். அவள் காலடி பட காத்திருந்தது போல கரண்ட் வந்தது... கோவில் ஒழி பெருக்கியில் நின்று போன பாடல் வரிகள் ஒலித்தது... " இந்த ஜென்மம் எடுத்ததில் என்ன பயன் என்று சொல்லடி நீயாத்தா...." என்று. ஆனால் எனக்கு சந்தேகமே இல்லை. என் ஜென்மம் இந்த தேவதைக்காகத்தான் என்றுதான் எனக்கு தெரியுமே!அவள் பூஜைகள் முடித்து வந்ததும் எங்கள் வழக்கமான வசந்த மாளிகைக்கு வந்தோம். அவளே ஆரம்பித்தாள்.. "என்னடா சீக்கிரமே வந்துட்டியா? கரண்ட் வேற இல்லைபோல என்ன பண்ணின? என்றாள். கரண்ட் இல்லைனா என்ன?..அதான் கோவில்ல நிறைய விளக்கு எரியுதுல்ல என்றேன். " அப்பறம் ஏன்டா அந்த சித்ரா கோவிலுக்கு வரல? என்றாள். அவளை பார்த்த மயக்கத்தில் நானும் '" ஏன் வரல? வந்தாளே... வரும்போதுகூட யாரோ சொந்தக்காரப்பொண்ணு தேவியாம்.. அதையும் கூட்டி வந்தாள் என்று அவள் விரித்த வலை தெரியாமல் போய்  விழுந்தேன். ஆப்பு செதுக்க உளி தேவை இல்லை.. என் வாயே போதும்... நல்லா செதுக்கி அதில் ஸ்டூல் போட்டு நானே உட்கார்ந்தேன்.கையில் வைத்திருந்த அர்ச்சனைப்பையை வைத்து என் மண்டையில் ஒரு அடி விழுந்தது.. நல்லவேள ஒரு தேங்கா மூடிய ஐயர் எடுத்துக்கிட்டதால சேதாரம் கம்மியா இருந்தது. " பக்கி..கோவிலுக்கு என்னைய பார்க்க வர்ற சாக்குல.. போற வர்ற பொண்ணுங்கள கணக்கெடுத்துக்கிட்டு இருக்கியா? இதுல புதுசா யாரு வந்துருக்கான்னு கூட தெரியுது? என்று ஐயர் அம்மனுக்கு மறந்து போன அர்ச்சனைகளை எனக்கு செய்துகொண்டிருந்தாள். நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.. நல்லவேள... ரெண்டாவது தெரு ப்ரியா வீட்டுக்கு புதுசா வந்த மேனகா கோவிலுக்கு வந்தத சொல்லல.கொஞ்சநேரத்தில் அவளே சமாதானமாகி நெற்றியில் விபூதி வைத்துவிட்டாள். நான் ஒன்றும் பேசாமல் அமைதிகாத்தேன். அடுத்து என்ன ஆயுதம் என்று தெரியாமல் ஆப்பு செதுக்க நான் என்ன முட்டாளா? அவளே ஆரம்பித்தாள்.. டேய்..பொறுக்கி... போற வர்ற பொண்ணுங்கள பார்த்து ஜொள்ளுவிட மட்டும் தெரியுதுல.. லவ் பண்ற பொண்ணுக்கு ஒரு கவிதை எழுதுவோம்... ஏதாவது கிப்ட் கொடுப்போம்..இப்பிடி ஏதாவது செய்யிறியா என்றாள். அப்பாடா.. என்ற நிம்மதியுடன்.. " இல்லடா.. நான் எப்பவுமே எதிர்  கவிதையெல்லாம் எழுதுவதில்லை என்றேன். "உன்னை யார்ரா எதிர் கவிதை எழுத சொன்னது? என்னைப்பத்தி எழுது என்றாள். அதான்டி சொல்றேன்... உன்னமாதிரி அழகான கவிதைக்கு நான் எப்பிடி எதிர்கவிதை எழுதமுடியும் என்றேன்.இந்த ஒரு வரியில் சித்ராவும்..தேவியும் மறைந்து உதட்டில்  வந்த புன்னகையை மறைத்துக்கொண்டு... "பொறுக்கி.. இந்த வாய் மட்டும் இல்லைனா... என்று என் முடி கலைத்தாள்... ஆனாலும் ஒரு குறை என்றேன் அவளிடம். என்னடா குறை கண்ட என்றாள். ஒரு அழகான கவிதையை ஆரம்பிச்ச கிடாமீசை.. சோம்பேறிப்பட்டு அத முடிக்காம விட்டுட்டான்.. என்றேன். அது யார்ரா கிடாமீசை எனக்கு தெரியாம? என்றாள். அதான்டி... மண்டைல உள்ள முடிய பூராம் மீசைலையும்... மீசைல இருக்கவேண்டிய கொஞ்சூண்டு முடியை  மண்டைலையும் வச்சிருப்பானே..அவன்தான் உன் அப்பன் என்றேன்...

நல்ல வேளை.. தேங்கா பைய நான் கைல எடுத்துக்கிட்டேன்.  அடிப்பதற்கு  அதை  தேடியவள்.. அது இல்லாதால் எரித்துவிடுவது போல முறைத்தாள்... " சரி.. அது என்னடா குறை? என்றாள்....  ஆமா.. அழகான கவிதையா உன்னை கொடுத்திட்டு உனக்கு ஒரு தங்கச்சிய கொடுத்து அத இன்னும் அழகா முடிச்சிருந்தா எவ்ளோ அழகா இருந்திருக்கும்? கெடுத்திட்டான் பாவி.. என்றேன்... உனக்கு நானே அதிகம்... இதுல ஒரு தங்கச்சி வேற கேக்குதா என்று துரத்த ஆரம்பித்தாள்...இன்று

அதே கோவிலில் பூஜைகளை முடித்து வந்த மனைவி மகளோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். " டேடி.. இந்த மம்மி ரொம்ப மோசம்.. கோவிலுக்குள்ள என்னை திட்டிக்கிட்டே இருக்கா... என் கிளாஸ்ல எல்லோருக்கும் சித்தி இருக்காங்க.. மம்மி அடிச்சா சித்திகிட்ட சொல்றாங்க.. லீவ்ல சித்திகூட இருக்காங்க.. ஏன் டேடி எனக்கு மட்டும் சித்தியே இல்லை? என்றாள்.. " அது வந்துமா...உன் தாத்தா இருக்கார்ல... அதான்மா.. உதட்டுக்கும் மீசைக்கும் நடுவுல பென்சில்ல கோடு போட்ருப்பாரே.. அந்த தாத்தா ஒரு சோம்பேறிம்மா... உனக்கு ஒரு சித்தி இருந்திருந்தா உனக்கு மட்டும் இல்லைமா.. எனக்கும் சந்தோசம்தான்.. என்ன பண்றது? என்றேன்.. இந்த முறையும் ஜாக்கிரதையாக கையில் அர்ச்சனை கூடையை பிடித்துக்கொண்டேன்... இதைக்கேட்ட அவள்.." உங்களுக்கு நானே அதிகம்..இதுல தங்கச்சி வேற கேக்குதா என்று துரத்த ஆரம்பித்தாள்... ஆனால் நான்தான் ஓடுவதை மறந்து நின்றுவிட்டேன்.அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம் -6 (பயணக் காலம் )

அது ஒரு மழைக்காலம் -4 ( விடுமுறை காலம் ) !
முந்தைய பாகம் 
அன்று...

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒன்பது மணி.... வழக்கம் போல தூக்கத்தில் இருந்தேன்.. அம்மா அப்பா வீட்டில் இல்லை, உறவினர் வீட்டு திருமணத்திற்காக அதிகாலையே சென்று விட்டார்கள்... இரவுதான் வருவோம் என்று சொல்லிவிட்டார்கள். நான் என் கௌரியை பார்ப்பதற்காக படிக்கவேண்டும் என்று கூறிவிட்டு இருந்துவிட்டேன். அவளை பார்ப்பதே இந்த இரண்டுநாள்தான்..அதையும் தவறவிட எனக்கு மனமில்லை.. அந்த அதிகாலை அரை தூக்கத்தில் கௌரியோடு காதல் டூயட் பாடிக்கொண்டிருந்தேன்... காபி மணம் காற்றில் வருவது போலவும்... சில்லென்ற கைகள் என்னை எழுப்புவது போலவும் தோன்றியது... அதை ரசித்துக்கொண்டிருக்கும்போதே... என் நெற்றியில் குளிர்ச்சியும்..அதை அனுபவிப்பதற்க்குள் கன்னத்தில் சூடும் உறைத்தது.... திடுக்கிட்டு எழுந்தால்... கைகளில் காபியோடும் உதடுகளில் புன்னகையோடும் என் கெளரி! என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை... கௌ...ரி..ரி.... நீயா? என்றேன்.... ஆமாண்டா சோம்பேறி... மணி ஒன்பது ஆச்சு இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு?" என்றாள், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.. என்னை நானே கிள்ளி பார்த்துக்கொண்டேன்.. " நீ கிள்ளி பார்த்ததெல்லாம் போதும்.. காப்பிய குடிச்சிட்டு குளிச்சிட்டு வா... டிபன் ரெடியாயிரும்.. சாப்ட்டுட்டு பேசலாம் என்றாள்.


அவசரமாக குளித்துவிட்டு வந்தேன்.... அதற்குள் அவள் எல்லாம் தயாராக எடுத்து வைத்திருந்தாள்... தரையில் அமர்ந்து சாப்ட உட்க்கார்ந்தேன்.. எதிரில் என் கெளரி எனக்கு எடுத்து வைத்தாள்.. இது ஏதோ எனக்கு கனவில் வரும் காட்சியாகவே தோன்றியது.. ஏய்ய்... சொல்லு நீ எப்பிடி இங்க வந்த? உங்க வீட்ல திட்ட மாட்டாங்களா? என்றேன்... எனக்கு எடுத்து வைத்துக்கொண்டே அவளும் சொன்னாள்.." இல்லடா.. நேத்து நைட்டு உங்க அம்மா எங்க வீட்ல வந்து சொல்லிட்டு போனாங்க.. அவங்க கல்யாணத்துக்கு போறதாவும்.. நீ படிக்கணும்னு வீட்ல இருக்கதாவும்.. அதனால என் சித்திட்ட சொல்லி உனக்கு சாப்பாடுக்கு உதவி பண்ண சொன்னாங்க... நான்தான் சித்தி உங்களுக்கு ஏன் சிரமம்னு சொல்லிட்டு நானே வந்திட்டேன்... ஏதோ.. இந்த ஒரு நாள் மனதால உன் மனைவியா இருக்குற மாதிரி இருக்குடா... என்றாள் கொஞ்சம் கலங்கியவாறு.ச்சீ.. என்ன ஒரே சென்டிமென்ட்டா புளியிர... அதெல்லாம் விடு..மதியம் என்ன சமைக்க போற? அத சொல்லு முதலில் என்றேன்.. கண்களை துடைத்துக்கொண்டு என்னை பார்த்தவள்.." போடா.. நான்தான் சொன்னன்ல... இன்னைக்கு மனசால உன் மனைவின்னு... இன்னைக்கு ஞாயிற்று கிழமை... அப்ப நீதான் சமைக்கணும் என்றாள்.... அதிர்ச்சியோடு அவளைப்பார்த்து... ஹேய்ய்... என்ன விளையாடறியா? என்றேன்... விளையாட்ரனோ வெறுப்பேத்துரனோ... இன்னைக்கு உன் சமையல நான் சாப்புடனும்...  வேணா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்றாள்... சரி உன் தலைவிதி அப்பிடின்னா யாரால மாத்த முடியும் என்றவாறு நானும் கோதாவில் குதித்தேன்.எனக்கு தெரிஞ்சதெல்லாம் காய்கறில பருப்பு போட்டா சாம்பாரு... புளி கரைச்சி ஊத்துனா புளி குழம்பு.... கௌரியோட நல்லதுக்காக சாம்பாரே( மாதிரி ) வைத்தேன்... வாழக்காய மொளகா பொடிக்குல முக்கி எடுத்து வறுவல் என்றேன்... ஆனா நிறைய பேசினோம்... கடவுளே இந்த நொடிகள் அப்பிடியே நிற்ககூடாதா என்று தோன்றியது... கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடியும் என் உயிரையும் சேர்த்தே நகர்த்துவதாக தோன்றியது.நீயும் நல்லா படிடா... நானும் நல்லா படிக்கணும்... நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தா எங்க அப்பா திருப்பதில மொட்டை போடறதா வேண்டியிருக்காருடா... என்றாள்.. ஹேய்... யாருக்கு என்றேன் அவசரமாக.... ச்சீ.... அவருக்குதான்.. என் மேல அவ்ளோ பாசம் என்றாள்.... போடி லூசு... இதுக்கு ஏன் திருப்பதி போகணும்? உன் அப்பா அங்க போய் மொட்டை அடிச்சா கண்ண மூடி இருக்குற பெருமாளே கடுப்பாயிருவாறு... ரெண்டு காது ஓரமா ஒரு நாலு முடி... பின் மண்டைல ஒரு பத்து முடி...இதுக்கு ஏன் அங்க போகணும்? இங்க இருந்தே ஒவ்வொன்னா எடுத்து திருப்பதி இருக்க திசை பார்த்து ஊதிவிட சொல்லு.. கரெக்ட்டா பெருமாள்கிட்ட போயிரும் என்றேன்.... கோவத்தோடு துரத்த ஆரம்பித்தாள்.இப்படி ஒவொரு நொடியும் சந்தோசத்தின் உச்சமாக சென்றது அன்று.... சரிடா நானும் வீட்டுக்கு போகணும் வா சாப்டுவோம் என்று சொன்னதால்... அவளை அமர வைத்து நானே எடுத்து வைத்தேன்... உனக்கு? என்றாள்... நீயே ஊட்டிவிடு என்றேன்... க்கும்.. ஆசை... அதெல்லாம்  இப்ப  இல்லை என்றவாறு சாப்பாடை எடுத்து வைத்தவள் கண் கலங்கினாள்.... அதைப்பார்த்து என் கண்களும் கண்ணீரை சிந்த தயார் ஆனது... இதைப்பார்த்த கெளரி... டேய் லூசு..நான்தான் வாழக்காய் காரம் தாங்காம கண்ணீர் விடறேன்.. நீ ஏன்டா அழுகுர என்றாள்.... அப்போது சிரிக்க  ஆரம்பித்தேன்.... அந்த நொடிகள்.....இன்று...

அதே ஞாயிற்று கிழமை... அதிகாலை தூக்கத்தில் இருந்தேன்...( ஒன்பது மணிதான் ) காதோரத்தில் டங்கென்று ஒரு சத்தம் கேட்டது...(காபியாம் ) இருந்தாலும் கண்களை திறக்காமல் அமைதிகாத்தேன்... சின்ன புள்ளை கூட எந்திருச்சு குளிச்சு சாப்ட வந்துருச்சு... இன்னும் தூக்கம் வேண்டி கிடக்கு... இன்னைக்கு ஞாயிற்று கிழமைதானே...இந்த ஒரு நாளாவது எனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணலாம்ல... ஊரு உலகத்துல பாருங்க... ஒவ்வொருத்த பொண்டாட்டிக்கு  எப்பிடியெல்லாம்  ஹெல்ப் பண்றாங்கன்னு... என்று புலம்ப ஆரம்பித்தாள்.... இதைக்கேட்ட என் மகள்... அம்மா ப்ளீஸ்மா... அப்பா சமைக்க வேணாம்மா.... ஹீ நோஸ் ஒன்லி சாம்பார்... இல்லைனா கார குழம்பு... முடியலம்மா என்றாள்... அப்போது சிரிக்க ஆரம்பித்தேன்!
அடுத்த பாகம்


அது ஒரு மழைக்காலம் -5 (காதல் காலம் )